முன்பு அடுத்து Page:

இலங்கையில் 17-ஆம் தேதி புதிய பிரதமர் நியமனம்: சிறீசேனா அறிவிப்பு

இலங்கையில் 17-ஆம் தேதி புதிய பிரதமர்  நியமனம்: சிறீசேனா அறிவிப்பு

சிறீலங்கா, டிச.15 இலங்கையில் வரும் திங்கள்கிழமை(டிச.17) புதிய பிரதமர் நியமிக்கப்பட வுள்ளதாகவும், ரணில் விக்ரம சிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்த நிலையில், சிறீசேனா இவ்வாறு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளி யான பிறகு, அய்க்கிய மக்கள் விடுதலை கூட்டமைப்பின் கூட்டம் அதிபர் சிறீசேனா தலை மையில் வியாழக்கிழமை....... மேலும்

15 டிசம்பர் 2018 15:05:03

நேபாளம்: ரூ.100க்கு மேலான இந்திய கரன்சிகளுக்கு தடை

நேபாளம், டிச.15 நேபாளத்தில் ரூ.200, ரூ.500, ரூ.2,000 ஆகிய இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள நேபாள தொழிலாளர்களும், அந்நாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்திய பயணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் பொதுமக்களும், வர்த்தகர்களும் தங்களது சேமிப்பு மற்றும் பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாய் நோட்டுகளை பரவலாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ரூ.100-க்கு மேலான இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை....... மேலும்

15 டிசம்பர் 2018 15:04:03

வெளிநாட்டில் சொத்து வாங்கிய விவகாரம்: பாக்., பிரதமர் இம்ரான் கானின் தங்கைக்கு ரூ.2940 கோடி அபராதம்

வெளிநாட்டில் சொத்து வாங்கிய விவகாரம்: பாக்., பிரதமர் இம்ரான் கானின்  தங்கைக்கு ரூ.2940 கோடி அபராதம்

இஸ்லாமாபாத், டிச. 15 வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானின் தங்கை அலீமா கானுமுக்கு ரூ.2940 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு, அய்க்கிய அரபு அமீரகத்தில்  சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக, அரசியல் ரீதியாகத் தொடர்புள்ள 44 நபர்கள் மேல் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்நாட்டு மத்திய வருவாய் ஆணையம் அளித்த....... மேலும்

15 டிசம்பர் 2018 15:04:03

பிரெக்சிட் விவகாரம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தெரசா மே

பிரெக்சிட் விவகாரம்  நம்பிக்கை வாக்கெடுப்பில்  வெற்றி பெற்றார் தெரசா மே

லண்டன், டிச. 15 அய்ரோப் பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் நாடாளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016ஆ-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதை யடுத்து, அய்ரோப்பிய யூனிய னில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க் கப்படுகிறது. ஆனால், அய்ரோப்பிய யூனி யனில் இணைந்துள்ள 27 நாடு களுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா....... மேலும்

15 டிசம்பர் 2018 14:59:02

சிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி

சிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம்: இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொழும்பு, டிச. 14- "இலங்கை நாடாளு மன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்ட விரோதம்'' என்று அந்நாட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ள இந்த தீர்ப்பு, அதிபர் சிறீசேனா வுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக இலங்கை உச்சநீதி மன்றத்தில் 13 மனுக்கள் தொடுக்கப்பட் டிருந்தன. அந்த மனுக்கள்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

அமெரிக்கா மீது வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

கராகஸ், டிச. 14- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரண மாக கடந்த 2014ஆ-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனை காரணம் காட்டி....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

நாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்

நியூயார்க், டிச. 14- கூகுள் வலை தள நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையும், தாமும் இந்தியாவின் ஒரே மாநிலத்தில் (தமிழகம்) பிறந்த வர்கள் என்பதை இந்திய வம் சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கூகுள் வலைதளப் பயனா ளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, இது தொடர்பான அமெரிக்க நாடா ளுமன்ற குழுவிடம் சுந்தர் பிச்சை நேரில் சென்று விளக்கமளித்தார். அப்போது....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்

   ஏவுகணை சோதனை:  உறுதி செய்தது ஈரான்

தெகிரான், டிச. 14- நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி,  பர்ஸ் செய்தி நிறுவ னம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: நடுத்தர தொலைவு ஏவுக ணையை செலுத்தி ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி சோதனை யில் ஈடுபட்டதாக வெளியான தகவல் உண்மை என அதிகாரி கள் ஒப்புக் கொண்டனர். ஈரான் தனது ஏவுகணை பரிசோதனைகளைத் தொடரும் எனவும், அண்மையில் நடந் துள்ள சோதனை மிகுந்த முக்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

சிறீசேனாவுக்கு மற்றொரு அடி

சிறீசேனாவுக்கு மற்றொரு அடி

இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் வெற்றி கொழும்பு, டிச. 13- இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக் டோபர் மாதம் 26ஆம் தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப் பங்களும் ஏற்பட்டு வருகின்றன. ராஜபக்சேவுக்கு பெரும் பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் நாடா....... மேலும்

13 டிசம்பர் 2018 15:10:03

கசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை

கசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை

அங்காரா, டிச. 13- செய்தியாளர் கசோகி படுகொலை தொடர்பாக அய்.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப் பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாக துருக்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவு சோகுலு செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கசோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து அய்.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதுதொடர்பாக, அய்.நா. பொதுச்....... மேலும்

13 டிசம்பர் 2018 15:10:03

அய்ரோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி - விமான போக்குவரத்து பாதிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாரிஸ், மார்ச் 3- அய்ரோப்பா வின் பெரும்பாலான பகுதிக ளில் கடும் குளிர் நிலவி வருகி றது. பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட் டன. மேலும் நூற்றுக்கணக் கணக்கான விமான சேவை களும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது.

கடும் குளிரால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. போலந்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள் ளனர். ஸ்லோவேகியாவில் 7 பேர் இறந்துள்ளனர். ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியே றிகள் இந்த மிகப்பெரிய பனிப் புயலால் பாதிக்கப்படுவார்கள் எனவும், முதியவர்கள், குழந் தைகள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வரு பவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர் பான உபாதைகளுக்கு உள்ளா கும் ஆபத்து அதிகமாக உள்ள தாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

பனிப்புயல் காரணமாக அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் அனைத்து விமா னங்களும் ரத்து செய்யப்பட் டன. இதேபோல் ஆம்ஸ்டர் டாம் ஷிபோல் விமான நிலை யத்திலும் பல்வேறு விமானங் கள் இயக்கப்படவில்லை. ஒரு புறம் பனிப்பொழிவினால் பொது வாழ்க்கை முடங்கியிருந்தா லும், சில பகுதிகளில் பொது மக்கள் பனிச்சூழலை உற்சாக மாக அனுபவித்து வருகின்ற னர். சில பகுதிகளில் அய்ஸ் ஸ்கேட்டிங் சக்கரங்களை அணிந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்வதையும் காண முடிகிறது. ஆனால், தண்ணீர் சரியாக உறை யாத பகுதிகளில் இவ்வாறு ஸ்கேட்டிங் செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக் கலாம் என எதிர்பார்க்கப்படு கிறது. இன்று பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்கு மாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner