முன்பு அடுத்து Page:

சிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி

சிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம்: இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொழும்பு, டிச. 14- "இலங்கை நாடாளு மன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்ட விரோதம்'' என்று அந்நாட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ள இந்த தீர்ப்பு, அதிபர் சிறீசேனா வுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக இலங்கை உச்சநீதி மன்றத்தில் 13 மனுக்கள் தொடுக்கப்பட் டிருந்தன. அந்த மனுக்கள்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

அமெரிக்கா மீது வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

கராகஸ், டிச. 14- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரண மாக கடந்த 2014ஆ-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனை காரணம் காட்டி....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

நாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்

நியூயார்க், டிச. 14- கூகுள் வலை தள நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையும், தாமும் இந்தியாவின் ஒரே மாநிலத்தில் (தமிழகம்) பிறந்த வர்கள் என்பதை இந்திய வம் சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கூகுள் வலைதளப் பயனா ளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, இது தொடர்பான அமெரிக்க நாடா ளுமன்ற குழுவிடம் சுந்தர் பிச்சை நேரில் சென்று விளக்கமளித்தார். அப்போது....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்

   ஏவுகணை சோதனை:  உறுதி செய்தது ஈரான்

தெகிரான், டிச. 14- நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி,  பர்ஸ் செய்தி நிறுவ னம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: நடுத்தர தொலைவு ஏவுக ணையை செலுத்தி ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி சோதனை யில் ஈடுபட்டதாக வெளியான தகவல் உண்மை என அதிகாரி கள் ஒப்புக் கொண்டனர். ஈரான் தனது ஏவுகணை பரிசோதனைகளைத் தொடரும் எனவும், அண்மையில் நடந் துள்ள சோதனை மிகுந்த முக்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

சிறீசேனாவுக்கு மற்றொரு அடி

சிறீசேனாவுக்கு மற்றொரு அடி

இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் வெற்றி கொழும்பு, டிச. 13- இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக் டோபர் மாதம் 26ஆம் தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப் பங்களும் ஏற்பட்டு வருகின்றன. ராஜபக்சேவுக்கு பெரும் பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் நாடா....... மேலும்

13 டிசம்பர் 2018 15:10:03

கசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை

கசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை

அங்காரா, டிச. 13- செய்தியாளர் கசோகி படுகொலை தொடர்பாக அய்.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப் பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாக துருக்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவு சோகுலு செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கசோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து அய்.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதுதொடர்பாக, அய்.நா. பொதுச்....... மேலும்

13 டிசம்பர் 2018 15:10:03

இந்தியாவுக்கு கடத்தப்பட்ட 100 அமெரிக்க குழந்தைகளை மீட்க வேண்டும்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் வாசிங்டன், டிச. 13- அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 100 குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் களை அமெரிக்காவுக்கு மீட்டு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் சிமித் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விவகாரங்கள் துணைக்குழு சார்பில் சர்வதேச குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் வாசிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், குழந்தை கடத்தல் தடுப்பு தொடர்பான....... மேலும்

13 டிசம்பர் 2018 15:09:03

எதிர்ப்பு எதிரொலி: பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

லண்டன், டிச. 13- அய்ரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மேற்கொண்டுள்ள பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுவ தையடுத்து, அந்த ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெ டுப்பை அவர் ஒத்திவைத்து உள்ளார். அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்சிட்) பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக் கும் இடையிலான உறவு குறித்து இரு தரப்பிலும் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத் துக்கு, எம்.பி.க்களிடையே கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற....... மேலும்

13 டிசம்பர் 2018 15:09:03

அமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தற்கொலை

அமீரகத்தில் இந்திய  சமூகச் சேவகர் தற்கொலை

துபாய், டிச. 12- இந்தியாவை சேர்ந்த சந்தீப் வெள்ளலூர்(35) என்பவர் அய்க்கிய அரபு அமீர கத்தின் ஒரு நாடான ரஸ் அல்கைமாவில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணியாற்றி வந்தார். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உள்ள சந்தீப் அய்க்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான சில சமூகச் சேவைகளையும் செய்து வந்தார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் இங்கு பலியான இந்தியரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி....... மேலும்

12 டிசம்பர் 2018 15:21:03

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லண்டன், டிச. 12- விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்த சர்வதேச சாராய வியாபாரி மல்லையா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தி இந் தியா....... மேலும்

12 டிசம்பர் 2018 15:21:03

தமிழ்நாட்டில் மூன்றில் இரு பங்கு பிறவி காது கேளாமை நெருங்கிய உறவுமுறை திருமணங்களால் நிகழ்கிறது

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெனிவா உலக சுகாதார மய்யத்தில்
மருத்துவர் மோகன் காமேசுவரன் ஆய்வுரை

ஜெனிவா, மார்ச் 6 2050ஆம் ஆண்டில் 900 மில்லியன் மக்களுக்கு மேல் கேட்கும் திறன் குறைபாட்டுடன் பிறக்கும் அபாயம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியதுடன் தமிழ்நாட்டை பொறுத்தவரை மூன்றில் இரு பங்கு காதுக் கேளாமை, உறவுமுறைத் திருமணங்களால் நிகழ்கின்றன என்று பிரபல காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) நிபுணர் மருத்துவர் மோகன் காமேசுவரன் கூறினார்.

சென்னை காது, மூக்கு, தொண்டை நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை அறுவைசிகிச்சை நிபுணரான மருத்துவப் பேராசிரியர் உயர்திரு மோகன் காமேசுவரன் அவர்கள் உலக சுகாதார மய்யத்தின் (கீலீஷீ) அழைப்பின் பேரில் மார்ச் 2ஆம் தேதியன்று ஜெனிவா - வில் உரையாற்றினார். இது மார்ச் 3-ஆம் தேதி வரும் உலக காது கேளாமை தினத்தை முன்னிட்டு நிகழ்ந்தது.

அவரது உரை "காது மற்றும் கேட்கும் திறன் பற்றிய செயல்பாட்டுக் கொள்கைகள்" என்பதாகும். இதில் அவர் நாடு முழுவதும் காது கேளாமையை எதிர்த்துப் போரிட்ட தனது பரந்த அனுபவத்தை எடுத்துரைத்தார். மேலும் உலக நாடுகளான இலங்கை, வங்காள தேசம், நேபாளம் மற்றும் நைஜீரியாவில் இந்த காக்ளியர் இம்ப்ளாண்ட் திட்டத்தை துவங்கி வைத்த தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். உரை வருமாறு:

"நுணுங்கிய கேள்வியரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது"

நுட்பமான சொற்களை கேட்டறியாதவர்கள் நல்ல பேசும் திறன் உடையவராக இருக்க முடியாது என்னும் வள்ளுவர் வாக்கில் உள்ள அறிவியல் உண்மையையும், கேட்கும் திறனின் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்த மருத்துவர் காமேசுவரன் அவர்கள் தனது உரையில் காதுகேளாமையே உலகில் வேகமாக வளர்ந்து வரும் பிறவி குறைபாடென சுட்டிக் காட்டினார். (உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை முழு செவிட்டுத் தன்மையுடன் பிறக்கிறது). இது உலக மக்களைப் பாதிக்கும் 2ஆவது முக்கிய குறைபாடாகும். (466 மில்லியனுக்கு மேலும் வளர்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது)

2050-ஆம் ஆண்டில் 900 மில்லியனுக்கு மேல் மக்கள் கேட்கும் திறன் குறைபாட்டுடன் இருப்பர் என உலக சுகாதார மய்யம் மதிப்பிட்டுள்ளது. அதில் வளரும் நாடுகளுக்கே பெருஞ்சுமையாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இதை சீர் செய்ய உலக அளவிலான வருடாந்திர செலவு மட்டும் 750 - 790 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கார்மேகமூட்டத்தின் ஒரு விடிவெள்ளி வெளிச்சக்கோடு, காதுகேளாமை முற்றிலுமாக சீர் செய்ய கூடிய ஒரு குறைபாடு என்பதேயாகும்.

உலகின் பல இடங்களில் நடந்த செலவுக்கு ஏற்ற பயன்பாடு குறித்த ஆய்வுகள் இன்றைய நிலையில் ஹியரிங் எய்ட் மற்றும் காக்ளியர் இம்ப்ளாண்ட் போன்ற காது கேளாமையை சரிசெய்யும் கருவிகளே மிகச்சிறந்தது என குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு பிறவி காது கேளாமை உறவுமுறை திருமணங்களால் நிகழ்கிறது. ஆகவே இது தடுக்கக் கூடிய ஒன்றாகும். மேலும் அவர் காது கேளாமையை சீர் செய்ய மற்றும் ஒழிக்க பாதை வகுத்த தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அதற்கு முன்னோடியான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி எடுத்துரைத்தார். இத்திட்டம் மூலமாக முற்றிலும் இலவசமாக 3000க்கும் மேற்பட்ட காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை தமிழகத்தில் நடந்துள்ளது. உலக சுகாதார மையத்தின் பிற உறுப்பு நாடுகளால் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டது என்று பேசினார்.

நம் தமிழகத்தின் தனித்துவமாக நாம் உருவாக்கிய "ஒரு மய்யப் புள்ளியில் இருந்து பன்முனை பயன்தரும்"  பேச்சு பயிற்சி முறை பெரும் பாராட்டினையும் வரவேற்பினையும் பெற்றது. இது வளரும் நாடுகள் பின்பற்ற தகுந்த ஒரு சிறந்த முன்மாதிரியாக ஏற்கப் பட்டது.

மேலும் அவர் தேசிய காது கேளாமை தடுப்பு திட்டம் மற்றும் மத்திய அரசின் தேசிய காப்பீட்டு திட்டத்தின் முக்கிய பங்கினை பற்றியும் சுட்டிக் காட்டினார்.

2025ஆம் ஆண்டில் காதுகேளாண்மை அற்ற தமிழகத்தை உருவாக்க ஒரு பாதை வகுத்து அது பிற வளரும் நாடுகளுக்கும் ஏற்றது எனத் தெளிவுபடுத்தி தனது உரையை நிறைவு செய்தார் மருத்துவர் மோகன் காமேசுவரன் அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner