முன்பு அடுத்து Page:

பிரெக்சிட் உடன்படிக்கை - தெரசா மே இறுதி முடிவுக்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்

பிரெக்சிட் உடன்படிக்கை - தெரசா மே இறுதி முடிவுக்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்

லண்டன், நவ. 17- அய்ரோப்பிய யூனிய னில் இருந்து விலக பிரிட்டன் நாடாளு மன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, அய்ரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனி நாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அய்ரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரி வர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக....... மேலும்

17 நவம்பர் 2018 14:36:02

வடகொரியா மீண்டும் அதி நவீன புதிய ஆயுத சோதனை: செய்தி நிறுவனங்கள் தகவல்

வடகொரியா மீண்டும் அதி நவீன புதிய ஆயுத சோதனை: செய்தி நிறுவனங்கள் தகவல்

சியோல், நவ. 17- அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா, தென்கொரியாவில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு தனது போக்கில் மென்மையை கையாளத்துவங்கியது. அணு ஆயுத சோதனைகளை நிறுத் திக் கொள்ள வடகொரியா  ஒப்புக்கொண் டதையடுத்து கடந்த ஜூன் மாதம் சிங் கப்பூரின் செண்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரிய....... மேலும்

17 நவம்பர் 2018 14:04:02

என்னே அவலம்! கேவலம்!! இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி தாக்குதல்!

கொழும்பு, நவ. 17- இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடியபோதும், பிரதமர் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக களேபரமாகக் காட்சியளித்தது. குறிப்பாக, அவைத்தலைவர் கரு.ஜெயசூர்யா அமர வேண்டிய இருக்கையை, ஆளும் கூட்டணி எம்.பி. அருந்திகா பெர்ணான்டோ ஆக்கிரமித்துக் கொண்டார். மேலும், எதிர்தரப்பு எம்.பி.க்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய்ப் பொடியை தூவினர். நாற்காலிகளும் தூக்கி வீசப்பட்டன. இறுதியில் காவலர்களை உள்ளே வரவழைத்த ஜெயசூர்யா, அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பதாக....... மேலும்

17 நவம்பர் 2018 14:04:02

இலங்கையில் அரசியல் நெருக்கடி: எம்.பி.க்கள் இடையே மோதல் - முடங்கியது நாடாளுமன்றம்

  கொழும்பு, நவ. 16-- இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டா வது நாளாக வியாழனன்றும் கூச்சல் ஏற்பட்டது. எம்.பிக்க ளுக்கிடையே மோதல்போக்கு ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந் தார். சுமார்ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் கூச்சல் குழப்பம் நீடித்தது.இலங்கை நாடாளுமன்றம் வியாழக்கிழமை காலை கூடிய போது, பிரதமருக்காக ஒதுக் கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்சே அமர்ந்திருந் தார். ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சபையை....... மேலும்

16 நவம்பர் 2018 15:10:03

இந்தியாவுக்கு மிகவும் சாதகமான நாடு தகுதி வழங்கும் திட்டமில்லை

பாகிஸ்தான் அறிவிப்பு இசுலாமாபாத், நவ. 16- இந்தி யாவுக்கு மிகவும் சாதகமான நாடு என்ற தகுதியை உடன டியாக வழங்கும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் அறிவித் துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் விதியின்படி, அதில் உறுப்பி னர்களாக இருக்கும் நாடுகள், பிற உறுப்பு நாடுகளுக்கு மிக வும் சாதகமான நாடு என்ற தகுதியை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதன்படி, பாகிஸ்தான் உள்பட உலக வர்த்தக அமைப்பில் உறுப்பி னர்களாக இருக்கும் அனைத்து நாடுகளுக்கும்....... மேலும்

16 நவம்பர் 2018 15:10:03

குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு

  ஜெனீவா, நவ. 16- சுவிட்சர் லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப் படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடை கின்றன. இந்த நிலையில் சுவிட் சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 13 ஆண்டுகள் மரணத்தை தள்ளிப் போட முடியும். இந்த மருந்தின்....... மேலும்

16 நவம்பர் 2018 15:10:03

கவானா வகித்த மாகாண நீதிபதி பதவிக்கு இந்திய-அமெரிக்கப் பெண் நியமனம்

   கவானா வகித்த மாகாண நீதிபதி பதவிக்கு இந்திய-அமெரிக்கப் பெண் நியமனம்

வாசிங்டன், நவ. 16- அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி பிரெட் கவானா ஏற்கெனவே வகித்து வந்த மாகாண முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, இந்திய-அமெரிக்கப் பெண் நீதிபதியான நியோமி ஜெஹாங்கிர் ராவ் (45)  பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரூஸ்வெல்ட் அறையில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் பண்டிகையைக் கொண்டாடிய போது, அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது....... மேலும்

16 நவம்பர் 2018 15:08:03

அய்.நா. சபை கொண்டுவந்த மரண தண்டனை வரைவு தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு

அய்.நா. சபை கொண்டுவந்த மரண தண்டனை வரைவு தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு

நியூயார்க், நவ. 15- அய்.நா. பொதுச் சபையின் 3-ஆவது குழு சார்பில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. அதில், இந்த சட்டத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப் பில் மரண தண்டனை வரைவு தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட் டுகளும் கிடைத்தன. மேலும் இந்த வாக்கெடுப் பில் 36 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. மரண தண்டனை....... மேலும்

15 நவம்பர் 2018 16:52:04

மியான்மர்: ஆங் சான் சூகியிடமிருந்து மனித உரிமை விருது பறிப்பு

மியான்மர்: ஆங் சான் சூகியிடமிருந்து மனித உரிமை விருது பறிப்பு

மியான்மா, நவ. 15- மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வழங்கியிருந்த கவுரவம் மிக்க விருது திரும்பப் பெறப்பட்டுள்ளது. அந்த நாட்டில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படும் ராணுவத்தை அவர் ஆதரித்துப் பேசி வரும் சூழலில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள அவர் மீது சர்வதேச அளவில் அதிருப்தி எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அவருக்கு....... மேலும்

15 நவம்பர் 2018 16:52:04

2020 அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைவார்: கருத்து கணிப்பில் தகவல்

2020 அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைவார்: கருத்து கணிப்பில் தகவல்

வாசிங்டன், நவ. 14- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் விரைவில் முடிய இருக்கிறது. அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதனால் 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் பணிகள் ஒரு ஆண்டு முன்பே தொடங்கிவிடும். அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் 2 முறை தேர்தலில்....... மேலும்

15 நவம்பர் 2018 16:52:04

பிரேசில் தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் வேட்பாளருக்கு கத்திக்குத்து

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரியோ டி ஜெனிரோ, செப். 9- தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. வலதுசாரி கட்சியான சோசியல் லிபரல் கட்சியின் வேட்பாளராக முன் னாள் ராணுவ தளபதி ஜெர் போல்சோனரோ போட்டியிடுகிறார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில், ஜெர் போல்சோனரோ  நேற்று பிரச் சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஏராளமானோர் கூடி அவரது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தனர்.  ஆதரவாளர்கள் போல்சோனரோவை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருந்த போது, ஒரு நபர் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினான். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக ஜெர் போல் சோனரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தம் அதிகமாக வெளியேறியதால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 2 மணி நேரம் தீவிர சிகிச் சைக்குபின் உடல்நிலை தேறி யுள்ளதாக அவரது மகன் பிளா வியோ ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே போல் சோன ரோவை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவனது பெயர் அடெலியோ ஒபிஸ்போ டி ஒலி வேஸ்ரோ (63) என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தி யால் குத்திய நபர் இடதுசாரி கட்சியான பிஎஸ்ஓஎல்இல் 2007--2014 வரை உறுப்பினராக இருந்துள்ளார். ஒபிஸ்போவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெர் போல்செனரோவை எதிர்த்து அவர் கருத்துக்களையும் பதி விட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் கத்தியால் குத்தியவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளாத என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள் ளனர்.

கத்திக்குத்து சம்பவத்துக்கு பிரேசில் அதிபர் மைக்கேல் டேமர், முன்னாள் அதிபர் லுலா டா சில்வா மற்றும் தேர்தலில் போட்டியிடும் சக வேட்பாளர்களும் கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner