முன்பு அடுத்து Page:

நாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா

நாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா

* சென்னையில் 90 வயதைக்கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு * மகளிர் கருத்தரங்கம் சென்னை, செப்.16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.9.2018 அன்று காலை 9மணிக்கு எழுச்சியுடன் நடைபெறுகிறது. நினைவிடத்தில் மரியாதை சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். கழகத்....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:15:04

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

பாஸ்டன், செப். 15- அமெரிக்கா வில் மசாசூசெட்ஸ் மாகாணத் தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரி வாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர், மற் றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது. இதனால் எரிவாயு கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:44:03

கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

கொழும்பு, செப். 15- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 பேரையும் வரும் 26ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மல்லாக்கம் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதால், மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும்

15 செப்டம்பர் 2018 15:44:03

உலகின் மிக குள்ளமான தாய் மரணம்

உலகின் மிக குள்ளமான தாய் மரணம்

நியூயார்க், செப். 15- உலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப் புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, தனது 44-ஆவது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவர், உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில்....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:33:03

2018ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு ஒரு கோடி பேர் பலியாவார்கள்

2018ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு ஒரு கோடி பேர் பலியாவார்கள்

அய்.நா. ஆய்வு மய்யம் தகவல் பாரீசு, செப். 15- புற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்தபடி உள்ளது. மற்ற நோய்களை போல் புற்று நோய்க்கு தடுப்பு மருந்து இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக புற்று நோய் பரவலாக எல்லா நாடு களிலும் அதிகமாகி வருகிறது. இது சம்பந்தமாக அய்.நா. அமைப்பின் சர்வதேச புற்று நோய் ஆய்வு மய்யம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 2018-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும்....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:32:03

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்: டிரம்ப் நிர்வாக அதிகாரி தகவல்

வாசிங்டன், செப்.14 இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடக்கும் சூழ்நிலை ஏற்பட் டால், அதற்கு அமெரிக்கா உறுதுணை யாக நிற்கும் என்று அதிபர் டிரம்ப்பின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: இரு நாடுகளுக்குமிடையே அமைதி யை உருவாக்க இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உறுதி பூண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள்....... மேலும்

14 செப்டம்பர் 2018 17:49:05

ஃபுளோரன்ஸ் சூறாவளி: பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்

ஃபுளோரன்ஸ் சூறாவளி: பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்

வாசிங்டன், செப்.14 அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்குமுன்பு அந்த பகுதிகளில் இருந்து தப்பிக்கும் எண்ணத்தில் ஏராளமான மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் கிழக்கு....... மேலும்

14 செப்டம்பர் 2018 17:38:05

நச்சுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்படுபவர்கள் அப்பாவிகள்: புதின் திட்டவட்டம்

நச்சுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்படுபவர்கள் அப்பாவிகள்: புதின் திட்டவட்டம்

விளாதிவாஸ்டாக், செப்.14 பிரிட் டனில் முன்னாள் ரசிய உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் 2 ரசியர்கள் படைத் துறையைச் சேர்ந்தவர்களோ, குற்றவாளி களோ அல்ல என்று ரசிய அதிபர் விளாதிமீர் புதின் புதன் கிழமை கூறினார். இதுகுறித்து அந்த நாட்டின் விளாதி வாஸ்டாக் நகரில், ஜப்பான் பிரதமர் சின்சோ  அபே, சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோருடன் பங்கேற்ற வர்த்தக மாநாட்டில் அவர் பேசியதாவது: பிரிட்டனில், முன்னாள் ரசிய....... மேலும்

14 செப்டம்பர் 2018 17:38:05

ரோகிங்யா விவகாரம்: அய்.நா. விசாரணைக் குழுவுக்கு மியான்மா அனுமதி

மியான்மா, செப்.14 மியான் மாவில் ரோகிங்யா முசுலிம் களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து நேரில் விசாரிக்க, அய்.நா. விசாரணைக் குழுவுக்கு முதல் முறையாக புதன்கிழமை அனுமதி அளிக்கப் பட்டது. இதுகுறித்து, அய்.நா. அக திகள் நல ஆணைய செய்தித் தொடர்பாளர் ஓய்ஃபே மெக்ட னெல்  கூறியதாவது: மியான்மாவில் சிறுபான்மை ரோகிங்யா இனத்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்த எங்களது விசாரணை, அந்த நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் புதன் கிழமை....... மேலும்

14 செப்டம்பர் 2018 17:38:05

அமெரிக்காவில் மதுரை மாணவிக்கு இளம் அறிஞர் விருது

அமெரிக்காவில் மதுரை மாணவிக்கு இளம் அறிஞர் விருது

வாசிங்டன், செப். 13- தமிழ்நாட் டின் மதுரை நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். அவர் அமெரிக்காவில் உள்ள வாசிங் டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார். (சோனார் என்பது நீரில் மூழ் கிய பொருட்களை ஒலி அலை களை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்) ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான....... மேலும்

13 செப்டம்பர் 2018 18:22:06

முன்னறிவிப்பின்றி ஆப்கானிஸ்தானுக்கு சென்ற அமெரிக்க ராணுவ அமைச்சர்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காபூல், செப். 9- ஆப்கானிஸ்தா னில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 17 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தலீபான் பயங்கரவாதிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பதற்கான நடவடிக்கை யிலும் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது.

இதற்காக கடந்த ஓராண் டாக தலீபான் நிலைகள் மீது வான்தாக்குதல்களை அதிகரிப் பதிலும், ஆப்கானிஸ்தான் படையினருக்கு பயிற்சி அளிப் பதற்காக கூடுதல் படைகளை அனுப்பி வைப்பதிலும் அமெ ரிக்கா மும்முரம் காட்டி வரு கிறது. எனினும் ஆப்கானிஸ்தா னில் இன்னும் பாதுகாப்பு மற் றும் நிலைத்தன்மையை ஏற் படுத்த அமெரிக்காவால் முடிய வில்லை.

இந்த நிலையில் ஆப்கா னிஸ்தானில் பாதுகாப்பு பணி களை கவனித்து வரும் நேட்டோ படைக்கு புதிய தளபதியாக அமெரிக்க ராணுவ தளபதி ஜோசப் டன்போர்டு சமீபத்தில் பதவியேற்றார். அவரை சந் தித்து பேசுவதற்காக அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று காபூல் சென்றார். இந்த சந்திப்பின் போது தலீபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து இருவரும் விவாதிக் கின்றனர்.

முன்னதாக தலீபான்களுட னான பேச்சுவார்த்தை குறித்து கடந்த வாரம் நம்பிக்கை வெளி யிட்டு இருந்த அவர், ஆப்கா னிஸ்தானில் அமைதி மற்றும் மறுசீரமைப்பு பணிகள் இனி யும் கானல் நீராக இருக்காது என கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner