முன்பு அடுத்து Page:

சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் சேர்ந்தார் ராஜபட்ச

கொழும்பு, நவ. 13- இலங்கை அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியான இலங்கை மக்கள் கட்சியில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச இணைந்துள்ளார். இலங்கை மக்கள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அக் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, அந்தக் கட் சியில் ராஜபட்ச உறுப்பினராக சேர்ந்தார். இலங்கை பிரதமராக ராஜ....... மேலும்

13 நவம்பர் 2018 17:24:05

வங்கதேச பொதுத் தேர்தல் டிச.30-க்கு ஒத்திவைப்பு

டாக்கா, நவ. 13- வங்கதேசத்தில் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நடை பெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தேர்தலை ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு அந்த நாட்டு எதிர்க் கட்சிக் கூட்டணி கோரிக்கை விடுத்த சூழலில், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நூருல் ஹூடா கூறியதாவது: பொதுத் தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி நடத்துவதற்கு....... மேலும்

13 நவம்பர் 2018 17:24:05

கச்சா எண்ணெய் விலை சரிவு: உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா ஆலோசனை

அபுதாபி, நவ. 13- சர்வதேச சந்தையில் பெட்ரோலிய  கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன. இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை....... மேலும்

13 நவம்பர் 2018 17:24:05

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சிறீசேனாவின் செயல் அதிர்ச்சியளிக்கிறது

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சிறீசேனாவின் செயல் அதிர்ச்சியளிக்கிறது

அய்.நா. பொதுச் செயலாளர் அறிக்கை! வாசிங்டன், நவ. 13- -இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அய்.நா.பொதுச் செயலாளர் அன் டோனியோ குத்தரோஸ் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனநாயக முறை கள் மதிக்கப்பட வேண்டும் எனவும்கேட்டுக் கொண்டுள்ளார். அய்.நா. பொதுச் செயலா ளர் அன்டோனியோ குத்த ரோஸ் வெளியிட்டுள்ள அறிக் கையில், இலங்கை நாடாளு....... மேலும்

13 நவம்பர் 2018 17:24:05

சீனா: தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு கூடாது

சீனா: தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு கூடாது

வாசிங்டன், நவ. 11- "தென் சீனக் கடலில் எந்த நாடும் ராணுவ ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்க முடியாது' என்று சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள சீன அரசின் முதன்மை நிர்வாகக் குழு உறுப் பினர் யாங் ஜியேசி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவுடன் இணைந்து வாசிங்டனில் செய் தியாளர்களிடம் கூறியதாவது: தென் சீனக் கடல் பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கான உரிமை குறித்த அமெரிக்காவின்....... மேலும்

13 நவம்பர் 2018 10:39:10

இலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து வழக்கு: அய்க்கிய தேசிய கட்சி

இலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து வழக்கு: அய்க்கிய தேசிய கட்சி

கொழும்பு, நவ. 11- இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்திருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக முன் னாள் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் அய்க்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து அதிபர் சிறீசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி நீக்கினார். இதையடுத்து முன்னாள் அதி பர் ராஜபக்சேவை பிரதமராக சிறீசேனா....... மேலும்

13 நவம்பர் 2018 10:39:10

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்

சிட்னி, நவ. 11- பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங் களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப் பட்டு வந்த இந்தக் குழந்தை கள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ....... மேலும்

13 நவம்பர் 2018 10:39:10

இங்கிலாந்தில் அமைச்சர் பதவி விலகல்

இங்கிலாந்தில் அமைச்சர் பதவி விலகல்

லண்டன், நவ. 11- அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை இங்கிலாந்து நாடு எடுத்துள்ளது. 2016ஆ-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அய் ரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான நடவடிக் கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். அய்ரோப்பிய கூட்டமைப் பில் இருந்து விலகும் முடி வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங் கிலாந்து....... மேலும்

13 நவம்பர் 2018 10:39:10

முதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் மரியாதை

முதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் மரியாதை

பாரிஸ், நவ. 12-  முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற் றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு தலைநக ரான பாரிசில் உள்ள ஆர்க் டி டிரியோம்பே போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர். கொட்டும் மழையில்....... மேலும்

12 நவம்பர் 2018 17:15:05

சீனாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செய்தி வாசிக்கும் பிம்பம்

சீனாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செய்தி வாசிக்கும் பிம்பம்

பீஜிங், நவ. 12- அனைத்து துறைகளிலும் மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றுவதற்கு ரோபோட்களை உருவாக்கி யுள்ள சீனாவில் தற்போது சர்வ தேச இணைய கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சின்ஹுவா தொலக்காட்சி நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் பணியமர்த்தப்....... மேலும்

12 நவம்பர் 2018 17:15:05

புதிய அதிபராக ஆரிஃப் அல்வி பதவியேற்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், செப். 11- பாகிஸ் தானின் 13-ஆவது புதிய அதிப ராகஆளும் தெஹ்ரீக்-இ-இன் சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி (69) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானுக்கான புதிய அதிபர் பதவியேற்பு விழா அதிபர் மாளிகையில் எளிமை யான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் கலந்து கொண்டு ஆரிஃப் அல்விக்கு புதிய அதிபராக பதவிப்பிரமா ணம் செய்து வைத்தார். இதை யடுத்து, அவர் அந்த நாட்டின் 13-ஆவது அதிபராக பதவி வகிக்க உள்ளார்.

அதிபர் பதவியேற்பு நிகழ்ச் சியில், பிரதமர் இம்ரான் கான், ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவீத் பஜ்வா, அரசியல் தலை வர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரபல பல் மருத்துவரான ஆரிஃப் அல்வி, ஆளும் தெஹ் ரீக்-இ-இன்சாஃப் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டி யிட்டு தேர்வானதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை அதிகாரப்பூர்வ மாக அறிவித்தது.

பாகிஸ்தான் பிரதமர் இம் ரான் கானுக்கு மிகவும் நெருக்க மானவராக அறியப்படும் ஆரிஃப், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அதில் முக்கியப் பங் காற்றி வருகிறார். முன்னதாக, பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந் தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.

இதில், பாகிஸ்தான் தெஹ் ரீக்-இ-இன்சாஃப் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் முசுலிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் மெஜலானா பாசில் உர் ரஹ்மான், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அய்சாஸ் ஆஷன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவி யது.

இதில், ஆரிஃப் அல்வி வெற்றி பெற்றார். நாடாளுமன் றத்தில் இரு அவைகளிலும் பதிவான 430 வாக்குகளில், அல்விக்கு 212 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரஹ்மானுக்கு 131 வாக்குகளும், ஆஷனுக்கு 81 வாக்குகளும் கிடைத்தன. 6 வாக்குகள் நிராகரிக்கப்படுவ தாக அறிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner