முன்பு அடுத்து Page:

சிங்களவர் பகுதியில் மீண்டும் குண்டுவெடிப்பு ஆனால், சிங்களவர் யாருக்கும் காயமில்லை

கொழும்பு, ஏப்.25 சிறீலங்காவி லுள்ள பூகொட பகுதி நீதி மன்ற வளாகம் அருகே, வெடி குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்கட்ட தகவல்படி, இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிறீலங்காவில் மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட தில் 350 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இந்ததாக் குதலுக்குஅய்எஸ் அய்எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப் பேற்றுக்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:44:03

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359ஆக அதிகரிப்பு

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 359ஆக அதிகரிப்பு

கொழும்பு, ஏப். 25- இலங்கையில் தேவா லயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங் களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த் தப்பட்டன. இந்த தாக்குதலில் 10 இந்தி யர்கள் உள்பட 359....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:16:03

புகைப்பிடிப்பவர்களுக்கு பேராசிரியர் பணி கிடையாது ஜப்பான் பல்கலைக்கழகம்

டோக்கியோ, ஏப். 25- ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம் பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம் முன் னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ மனை வளாகங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், பணியில்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:11:03

பொருளாதாரத் தடையால் இந்தியா மேற்கொள்ளும் துறைமுக திட்டம் பாதிக்கப்படாது: அமெரிக்கா

 பொருளாதாரத் தடையால் இந்தியா மேற்கொள்ளும்  துறைமுக திட்டம் பாதிக்கப்படாது: அமெரிக்கா

வாசிங்டன், ஏப். 25- ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொரு ளாதாரத் தடையால் அந்நாட் டில் இந்தியா மேற்கொண்டு வரும் சாப்கார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் பாதிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தடையால் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண் ணெய் இறக்குமதியை நிறுத் திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாப் கார் துறைமுகத் திட்டம் பாதிக் கப்படுமா? என்று கேள்வி எழுந்தது. இது....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:10:03

சீனாவில் ரசாயன ஆலையில் விபத்து: மூன்று தொழிலாளர்கள் பலி

பீஜிங், ஏப். 25- சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டோங் சிங் கெமிக்கல்ஸ் என்ற ரசா யன தொழிற்சாலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீய ணைப்பு படை வீரர்கள் சம் பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:05:03

பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை: இம்ரான்கான் ஒப்புதல்

இசுலாமாபாத், ஏப். 25- பாகிஸ் தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக ஈரான் சென்று இருந்தார். அப் போது தெக்ரானில் ஈரான் அதி பர் கசன் ரக்கானியுடன் கூட் டாக பேட்டி அளித்தார். அப்போது, “பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஈரான் மிக வும் பாதிக்கப்படுவதை நான் அறிவேன். பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதை ஈரானும், பாகிஸ்தானும் விரும்ப வில்லை. அதில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கி றோம். இரு நாடுகளிடையே நல்ல....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:03:03

பிரெக்சிட் விவகாரம்: பிரதமர் பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்

பிரெக்சிட் விவகாரம்: பிரதமர் பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்

லண்டன், ஏப். 24- பிரிட்டனில் 11 நாள் விழா விடுமுறைக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரெக்சிட் விவ காரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே பதவி விலக வேண் டும் என்று மீண்டும் வலியுறுத் தப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. நைஜல் இவான்ஸ் கூறியதாவது: பிரதமர் தெரசா மே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுவடைந்து வருகி றது. எனவே, அவர் உடனடி....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:30:03

பதவி நீக்கம் செய்யக் கோரும் ஜனநாயகக் கட்சிக் கோரிக்கை: டிரம்ப் எதிர்ப்பு

பதவி நீக்கம் செய்யக் கோரும்  ஜனநாயகக் கட்சிக் கோரிக்கை: டிரம்ப் எதிர்ப்பு

வாசிங்டன், ஏப். 24- அமெரிக்கா வில் கடந்த 2016ஆ-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்ப்பை வெற்றி பெறவைப் பதற்காக ரசியா உதவியதாக புகார் எழுந்தது. இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் இது குறித்து விசா ரணை நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர். அதன்பேரில், அமெரிக்கா வின் மத்திய புலனாய்வு குழுவின் முன்னாள் இயக்குநர் ராபர்ட்....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:29:03

ஸ்பெயின் தேர்தல்: காடலோனியாவை மய்யப்படுத்தி விவாதம்

ஸ்பெயின் தேர்தல்: காடலோனியாவை மய்யப்படுத்தி விவாதம்

மேட்ரிட், ஏப். 24- ஸ்பெயின் பொதுத் தேர்தலையொட்டி நடைபெற்ற முக்கிய கட்சித் தலைவர்களின் நேரடி விவாதத் தில், காடலோனியா விவகா ரத்தை மய்யப்படுத்தி காரசார மான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஸ்பெயினில் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற விருக்கிறது. அதனையொட்டி, தேர்தலில் போட்டியிடும் 4 முக்கிய கட்சிகளின் தலைவர் கள் பங்கேற்ற நேரடி விவாத நிகழ்ச்சி, அரசுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அந்த விவாதத்தில், தற் போதைய பிரதமரும்,....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:15:03

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதல்முறையாக வெற்றி

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதல்முறையாக வெற்றி

டோக்கியோ, ஏப். 24- ஜப்பானில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தலில் எடோகாவா வார்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா வெற்றி பெற்றார். ஜப்பானில் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் இவர்தான். ஜப்பானில் செயல்பட்டு வரும் "ஆசாகி சிம்பன்' செய்தி வலைதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதா வது: ஜப்பானில் கடந்த 21ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம், 2,26,561 வாக்குகள் பதிவானது. எடோகாவா வார்டு தேர்தலில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த  புராணிக்....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:15:03

விமான நிலையங்களில் ஏவுகணைகள் பதுக்கி வைப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வட கொரியா மீது அய்.நா. நிபுணர் குழு குற்றச்சாட்டு

வாசிங்டன், பிப். 10- அமெரிக்கா வின் தாக்குதலில் இருந்து பாது காக்க, வட கொரியா தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் பதுக்கி வைத் துள்ள தாக அய்.நா. நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அய்.நா. பாது காப்புக் கவுன்சிலிடம்  அந்தக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை ல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைத் திட்டத் தைத் தடுப்பதற்காக அந்த நாடு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் உரிய பலனை அளிக்கவில்லை.

பொருளாதாரத் தடை களை மீறி சட்டவிரோதமாக அந்த நாட்டுக்கு பெட்ரோலியப் பொருள்கள் அனுப்பப்படு கின்றன. அதேபோல், தடை செய் யப்பட்ட தனது நிலக்கரியை யும் வட கொரியா பிற நாடு களுக்கு விற்பனை செய்து வருகிறது.

அந்த நாட்டின் அணு ஆயுத ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.

ஏவுகணைகளை ரகசியமா கத் தயாரிக்கவும், சோதிக்கவும் விமான நிலையம் போன்ற பொது இடங்களை வடகொரியா பயன்படுத்துகிறது.

ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தைக் குலைப்பதற்காக அமெரிக்கா தாக்குதல் நடத் துவதைத் தடுக்கும் வகையில், தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில்  வட கொரியா பதுக்கி வைக்கிறது.

சட்டவிரோதமாக எண் ணெய் இறக்குமதி செய்வதற் கும், நிலக்கரி ஏற்றுமதி செய் வதற்கும் கூட விமான நிலை யங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வட கொரியாவுக்கு எதி ரான ஆயுத ஏற்றுமதித் தடை யும் மீறப்படுகிறது. அந்தத் தடையை மீறி சிரியா, லிபியா, சூடான் ஆகிய நாடு களுக்கும், யேமனில் கிளர்ச்சி யாளர்களுக்கும் இலகு ரக ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்து வருகிறது.

அதுமட்டுமன்றி, வட கொரியாவுக்கு எதிரான நிதிக் கட்டுப்பாடுகளும் மீறப்பட்டு வருகின்றன. அய்.நா. தடை களை மீறி 5 நாடுகளில் வட கொரிய நிதி அமைப்புகள் இயங்கி வருகின்றன. பல் வேறு நாடுகளில் தங்களது தூதரக அதிகாரிகள் மூலம் ஏராளமான வங்கிக் கணக்கு களைத் தொடங்கி வட கொரியா நிதிக் கட்டுப் பாடுகளை மீறி வருகிறது என்று அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வட கொரியா தனது ஏவு கணைத் திட்டத்தைக் கைவிட வில்லை என்று அண்மையில் அமெரிக்க உளவுத் துறை கூறியிருந்த நிலையில், அய்.நா. நிபுணர் குழுவும் அதே கருத் தைத் தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner