
பெல்கிரேடு, பிப்.4- செர் பியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இங் குள்ள ஒரு கிராமத்தில் 11 ஆயிரம் பேர் கடும் குளிரால் தவிக்கின்றனர். கிழக்கு அய்ரோப்பிய நா டான செர்பியாவில் கடும் குளிருக்குப் பலியானவர் களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நூறு ஆண்டு களில் இல்லாத அளவாக மைனஸ் 30 டிகிரி உறை நிலைக்குக் கீழாக தட்ப வெப்பநிலை குறைந்துள் ளது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.
மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள் ளது. நாட்டின் பெரும் பாலான விமான நிலை யங்கள் மூடப்பட்டுள் ளன. தொலைதூரங்களில் அமைந்துள்ள 6,500-க்கும் மேற்பட்ட கிராமங் களுக்கு எவ்வித வசதியும் சென்றடைய முடியாத அளவுக்கு அய்ஸ் கட்டி களாக உறைந்துள்ளது. சாலைகளில் 5 மீட்டர் உயரத்துக்கு அய்ஸ் மலை உருவாகியுள்ளது. சாலையில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை அகற்று வது பெரும் சவாலாக உள்ளது. சில கிராமப் பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் ஹெலிகாப்டர் மூலம் அளிக்கப்படுகின் றன.