இஸ்லாமாபாத், பிப்.4- பாகிஸ் தானில் உள்ள மலைப்பிரதேசத் தில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நீடிக்கிறது. இதில் 26 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் வடமேற்கே குர்ராம் என்ற மலைப்பிரதேசம் அமைந்துள்ளது. இது ஆப் கானிஸ்தான் எல்லையை ஒட்டி இருக்கும் பகுதியாகும். இங்கு தலீபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்துவது, ராணுவத்தினரை கடத்திச் சென்று கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதனால், ராணுவத்தினர் விமானம் மூலம் குண்டுகளை வீசி தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். இதனை அடுத்து இரு தரப்பினர் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் சண்டை மூண்டது. இதில் 14 ராணுவ வீரர்களும், 80 தீவிரவாதி களும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் தீவிர வாதிகள், ராணுவத்தினர் இடை யே சண்டை நீடிக்கிறது. அங் குள்ள ஷிடானோ டான்ட் பகுதி யில் அமைந்துள்ள ராணுவ சோதனை சாவடி மீது தீவிரவாதி கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இரவு முழுவதும் இரு தரப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்தது. இந்த சண்டையில் 8 ராணுவ வீரர்களும், 18 தீவிரவாதிகளும்உயிரிழந்தனர். இதை பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.
இதற்கிடையில் நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக, அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானின் போ ராட்டங்கள் நடக்கின்றன. அல் கொய்தா, தலீபான் தீவிரவாதி களும் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.
எனவே, பாகிஸ்தானுக்கு செல்வதை அமெரிக்கர் மற்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த வர்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத் துள்ளது.