கெய்ரோ, பிப். 4-எகிப்து நாட்டில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியின் ரசிகர்கள், உற்சாகத்தில் மைதானத்தில் இறங்கி ஆட்டம் போட்டனர். இதனால், மைதானத் தில் இருந்த கெய்ரோ அணி வீரர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். இதனால், கூட்டம் மிரண்டு மோதல் வெடித்ததாக தவறாக நினைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நெரிசலும் ஏற் பட்டது. அதில் பலியானோர் எண்ணிக்கை 80அய் தாண்டியது. இந்த சோக சம்பவத்துக்கு எகிப்து முழுவதும் 3 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.