
இஸ்லாமாபாத், பிப்.22- மொகஞ்சதா ரோவை சீரமைக்கவும், சுற்றுலாப் பயணி களை கவர்ந்திழுக்கும் வகையிலும் அங்கு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது பாகிஸ்தான். உலகின் மிகப் பழைமையான நாகரிகத்தைக் கொண்ட மொகஞ்சதாரோ பகுதி, பாகிஸ் தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது. 12 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. நிலப்பரப்பைக் கொண்டதாகும். கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது சிந்து சமவெளியுடன் இணைக்கப் பட்டது மொகஞ்ச தாரோ. அதைத் தொடர்ந்து அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வாரியமும், தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டன. மொகஞ்சதாரோவுக்கான தேசிய நிதி செயல் வாரியம், மொகஞ்சதாரோவில் உள்ள ஓய்வு இல்லத்தை சீரமைக்கவும், நிலப்பரப்பை அளவிடவும் முடிவு செய்துள்ளது என்று சிந்து கலாச்சார செயலாளர் ஆசிஸ் உகய்லி தெரிவித்துள்ளார். இதேபோல் அங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள் காணாமல் போனது தொடர்பான வழக்கை மீண்டும் கையிலெ டுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.