எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வரதராஜன்போட்டை, செப். 12- உடையார் பாளையம் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் 3.9.2018 முதல் 4.9.2018 வரை தொன்போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரதராஜன்பேட்டை யில் உள்ள 14 வயதிற்குட்பட்ட பிரிவுகள், 17 வயதிற்குட்பட்ட பிரிவுகள், 19 வயதிற் குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

இதில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் கரண் வட்டு எறிதல் போட்டி யில் முதல் இடத்தையும், ஹரிஹரன் 400 மீ. ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் சூர்யசுகுந் தன் மும்முறை தாண்டுதலில் மூன்றாம் இடத்தையும், அழகேசன் ஈட்டி எறிதலில் மூன்றாம் இடத்தையும், 19ஆம் வயதிற் குட்பட்ட பிரிவுகளில் தமிழ்வேந்தன் குண்டு எறிதல் போட்டியில் முதல் இடத் தையும், செல்வம் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடத்தையும், அஜித் மும்முறை தாண்டுதலில் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்று உள்ளார்கள். இதில் 14 வயதிற்குட்பட்ட கரண் மற்றும் 19 வயதிற்குட்பட்ட தமிழ் வேந்தன் ஆகியோர்கள் மண்டல அள விலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற் றனர்.

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner