எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இடையக்குறிச்சி, செப். 12- பள்ளிக் கல்வித்துறை சார்பில் உடை யார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான கடற் கரை கையுந்து பந்துப் போட்டி இடையக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டிகள் 14 வயதிற் குட்பட்ட, 17  வயதிற்குட்பட்ட  மற்றும் 19  வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்தது.இதில் ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்களுக்கான 17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் பதினோறாம் வகுப்பைச் சார்ந்த ஜவகர் மற்றும் விஷ்ணு முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர்.

போட்டியில் வென்ற வீரர் கள் மற்றும் பயிற்றுவித்த உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner