அடடே, அவாள் மாறிவிட்டாளாம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, செப்டம்பர் 4ஆம் தேதி ‘தினமலர்’ நாளேடு “இது உங்கள் இடம்” பகுதியில் (ஆசிரியருக்குக் கடிதம்) இரு கடிதங்களை வெளியிட்டுள்ளது.

பழைய பல்லவிகளை பாடுவோர் திருந்தட்டும் என்று ஒரு கடிதம்; அந்தக் கடிதம் என்ன சொல்லுகிறது?

“பி.என்.கபாலி, சென்னையிலி ருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: ‘தினமலர்’ என்ற திரிநூல் ஏடு, பார்ப்பனர் பூணூல் புதுப்பிக்கும் காட்சியை வண்ணப்படமாக அச்சிட்டு, தன் ஜாதி அபிமானத்தை காட்டிக் கொண்டுள்ளது' என தி.க.,வின் நாளித ழான 'விடுதலை'யில் செய்தி வெளி யிடப்பட்டிருந்தது.

அந்த நாளிதழுக்கு, சில விளக்கங் களை அளிக்க விரும்புகிறேன்...

ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பிற மத விழாக்களையும் படமெடுத்து, 'தினமலர்' செய்தி வெளியிடுகிறது. நடுநிலை நாளேடுக்குரிய தர்மத்தை பின்பற்றுகிறது. மனுதர்மம் பற்றி, தி.க.வினர் தெரிந்து வைத்திருப்பது போல், மற்றவர்கள் அறிந்திருப்பரா என்பது அய்யமே!

பூணூல் மாற்றிக் கொண்டிருப் போர், மனுதர்மம் பற்றியோ, அது இவ்விஷயத்தில் என்ன கூறியுள்ளது என்பது பற்றியோ, ஏதும் அறிந் திருக்க வாய்ப்பே இல்லை. மனுதர் மம் பற்றி பேசியோ, ஏசியோ பிழைப்பு நடத்தாதவர்கள் அவர்கள். வேறு உபயோகமான பணியில் ஈடுபட்டிருப்போர்.

மனுதர்மம் இன்று நடைமுறை யில் இல்லை. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் என்ற ஒரே தர்மம் தான் அமலில் உள்ளது என்ற ஞானம் உள்ளவர்கள். அவர்களை பொறுத்தவரை, தீபாவளி, கோகு லாஷ்டபூமி போல், பூணூல் மாற்றிக் கொள்ளும் நாள், ஒரு பண்டிகை; அவ்வளவு தான்.” என்று கடிதம் பேசுகிறது.

மற்ற பண்டிகைகள் போல பூணூல் மாற்றிக் கொள்ளும் நாள் ஒரு பண்டிகை; அவ்வளவுதான் என்கிறதே ‘தினமலர்’ இது உண்மைதானா?

பூணூல் மாற்றிக் கொள்வது என்பது இந்து மதத்தில் உயர் ஜாதி என்று கூறப்படும் பார்ப்பனர்கள் மட்டும் அணிந்து கொள்ளும் நிகழ்ச்சியல்லவா? இன்னும் சொல்லப் போனால் “பூணூல் கல்யாணம்” என்று குறிப்பிட்ட வயதுக் குப் பிறகு பத்திரிக்கை எல்லாம் அடித்துத் தடபுடல் செய்வது இல்லையா?

அது மத சடங்குதான் - மனுதர்மத்தின் அடிப்படையில் நடைபெறுவது தான் - பூணூல் அணிந்த பிறகுதான் பார்ப்பன சிறுவன் பிராமணன் ஆகிறான் - துவி ஜாதி (இரு பிறப்பாளன்) ஆகிறான். இதுதானே உண்மை.

ஒரு பிரச்சினையைப் பேசும்போது அதனோடு தொடர்புடைய சங்கதி யையும் அலசத்தானே வேண்டும்.

இந்த உண்மையை ஒப்புக் கொள் வதில்கூட இந்தக் கூட்டத்துக்கு அறிவு நாணயம் இல்லையே ஏன்?

சாத்திரத்தை எடுத்துக்காட்டி, நாங்கள் பூணூல் அணிந்த பிராமணர் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் - துவி ஜாதி; - மற்றவர்களோ பூணூல் அணிந்து கொள்ளக் கூடாது - சாத்திரப்படி தடை செய்யப்பட்ட சூத்திர ஜாதி - சூத்திர ஜாதி என்றால் பார்ப்பானின் வைப் பாட்டி மகன் என்பதை எடுத்துக் காட் டினால் இந்த இடம் - பார்ப்பனர்களுக்கு வசதி குறைவான - நியாயம்தான் என்று எடுத்துக்கூற முடியாத நெருக்கடிக்கு ஆளாகும் பொழுது அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் பார்த்தீர்களா?

எங்களுக்கு மனுதர்மம் எல்லாம் தெரியாது - தி.க.வுக்குத் தான் அது பற்றி எல்லாம் தெரிந்திருக்கும் என்று சொல்லும் அந்தத் தந்திரத்தை என்ன வென்று சொல்லுவது!

அப்படியே பார்த்தாலும் தி.க. எதைச் சொன்னாலும் முற்றாகத் தெரிந்து கொண்டு தான் சொல்லுகிறது - செய் கிறது என்று அவர்கள் தங்களை அறியாமல் ஒப்புக் கொள்வதாகத்தானே பொருள்.

மனுதர்மம் என்பதெல்லாம் தெரியாத அடிமுட்டாள்கள் நாங்கள் என்று பார்ப் பனர் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்கிறார்கள் என்று சொல்லலாமா?

திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்ற ரைக் கிலோவில் தங்கப் பூணூலை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும், சிறீரங்கம் ரெங்கநாதனுக்கு 52 லட்சம் ரூபாய் செலவில் நாராயணஜீயரும் பூணூல் சாத்தினார்களே - இதற்கென்ன பதில்? கடவுளும் பார்ப்பனர்களும் ஒரே ஜாதி என்று காட்டிக் கொள்ளத்தானே!

மனுதர்மம் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறது; தி.க.காரர்கள்தான் நினைவூட்டிக் கொண்டு அலைவதாகச் சொல்லுகிறதே ‘தினமலர்’. இந்தக் காலகட்டத்தில்கூட ‘துக்ளக்’ வரிந்து கட்டிக் கெண்டு மனுதர்மத்திற்கு வக்காலத்து வாங்கவில்லையா?

புனே - ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் மனுதர்ம சாத்திர நூலை அலங்கரித்து எடுத்துச் சென்றார்களே, அப்பொழுது எங்கே போனது - இப்பொழுது தாண்ட வமாடும் பூணூல் புத்தி?

மனுதர்மத்தை நாங்கள் ஏற்கவில்லை - காலத்திற்கு ஒவ்வாதது என்று ஒரே ஒரு வார்த்தையை சங்கராச்சாரியார் வாயால் சொல்லச் சொல்லுங்கள் - பார்க்கலாம்.

அமெரிக்கா வரை சென்று இந்து மதத் தைப் பரப்புரை செய்து வந்த விவேகா னந்தர் இந்தப் பூணூல் பற்றி என்ன சொல்லுகிறார்?

“முஞ்சா” என்னும் புல்லினை குரு சீடனின் இடுப்பிலே கட்டி தீட்சை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள் ளுவான்” என்று விவேகானந்தர் சொல்லு கிறாரே - இதற்கு ‘தினமலர்’ திரிநூலோர் தரப்பில் வைத்திருக்கும் நாணயமான பதில் என்ன?

நாங்கள் ஒன்றும் ஆதாரமில்லாமல் எதையும் கூறுவதில்லை.

“சுவாமி விவேகானந்தர் சம்பாஷ ணைகள்” (பக்கம் 26-28) என்ற இராம கிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளதைத் தான் எடுத்துக்காட்டுகிறோம்.

விவேகானந்தர் உளறித் தொலைத் திருக்கிறார் என்று சொல்லப் போகிறார் களா? அல்லது இராமகிருஷ்ண மடம் ஏதோ தத்துப்பித்து என்று இப்படி யெல்லாம் வெளியிட்டுத் தொலைத்திருக் கிறது என்று தலையில் அடித்துக் கொள் ளப் போகிறார்களா?

நாங்கள் வைக்கும் வெளிப்படையான குற்றச்சாட்டு - பூணூல் அணிவது என்பது ஒரு இந்து மதச் சடங்கு - அதை அணி பவர் பிராமணர் - சாத்திரப்படி அதை அணிந்து கொள்ள அருகதை இல்லாதவ னாகிய இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் சூத்திரர்கள் - சூத்திரர்கள் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று கூறுவதாகத்தான் பொருள்.

எங்களை இழிவுபடுத்தும் இந்தப் போக்கை எடுத்துக்காட்டினால் - இன்றைக் கும் கொச்சைப்படுத்துகிறார்கள் எங்களை என்றால் இதன் பொருள் என்ன? இன் றைக்கும் பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்கத் திமிர் - திமிர் முறித்துக் கொண்டு நிற்கிறது என்று தானே பொருள்.

சுற்றி வளைக்காமல் - சாக்குப் போக்குக் காட்டாமல் சந்தில் நுழைந்து தப்பிக்கப் பார்க்காமல் - “இது எங்களை இழிவு படுத்துவதுதே’ என்ன சொல்லுகிறீர் கள்?” என்ற எங்களின் கேள்விக்கு மரியாதையாகப் பதில் சொல்லிவிட்டு, ஓர் அடியை எடுத்து வையுங்கள் என்பதுதான் எங்கள் நிலைப் பாடு.

ஒரு காலத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் ‘ஆமாம் சாமி’ போட்ட காலம் இருந்ததுண்டு. பெரியார் இராம சாமி சகாப்தத்திலோ விழிப்புணர்ச்சி அக்னிப்புயல் சுனாமியாகச் சுழன்ற டிக்க ஆரம்பித்து விட்டது என்பதை மறந்து விட்டு, “பூணூல் ஆட்டம் போடாதே, அம்பி” என்கிறோம்.

கடைசியாக ‘தினமலர்’ எப்படி முடித்திருக்கிறது தெரியுமா?

‘வேத கல்வி, ஆச்சார அனுஷ்டா னங்கள், சிகை, கச்சம் எளிமையான வாழ்க்கை என இவற்றை எல்லாம் விட்டு விட்ட அந்தணர்கள் பூணூலை யும் விடும் நாள் அதிக தூரத்தில் இல்லை’ என்று மங்களம் பாடி சரண டைந்து விட்டது பார்த்தீர்களா?

“சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது” என்பார்களே - இந்தப் பார்ப் பனர்கள் எப்பொழுது அந்தணர்கள் ஆனார்கள்? அந்தணர் என்பவர் குறிப்பிட்ட ஜாதியினரா? வள்ளுவர் என்ன சொல்லுகிறார்?

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொ ழுகலான்

இந்தக் குறளின் பொருளுக்கும், பார்ப்பனர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

இரண்டாம் தேதி கபாலி இப்படி எழுதினார் என்றால், அதே ‘தின மலரில்’ 4ஆம் தேதி ஆர்.சேஷாத்ரி இன்னொரு கடிதத்தை எழுதியுள்ளார்.

“ஆர்.சேஷாத்ரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ‘புலிக்கு பயந்தோர் எல்லாரும், என் மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள்' என்றாராம் ஒருவர். ஏனெனில், அவருக்குப் புலியை பார்த்தால் பயமாம். அதனால் தான், அவர் மற்றவர்களை கூப்பிடுகிறாராம். இது கிராமங்களில், சொலவடையாக கூறுவர்.

அது, இன்று, தி.க.வின் வீர மணிக்கு பொருந்துகிறது. அவர் பிராமணர்களை கண்டு ஏன் மிரளுகிறார் என்றே தெரியவில்லை. தேவர் இன மக்கள், அவர்கள் ஜாதி முறைப்படி, குரு பூஜை செய்கின் றனர். பா.ம.க.,வினர், சித்ரா பவுர்ணமி நாளை கொண்டாடுகின்றனர். பிராம ணர்கள், ஆவணி அவிட்டம் கொண் டாடுகின்றனர். இதில் அவருக்கு என்ன கஷ்டம். பிராமணர்கள் யாரும், சென்னை, எல்.அய்.சி. பில்டிங் எதிரில் ஷாமியானா போட்டு, எல்.ஆர்.ஈஸ் வரி பாட்டு போட்டு, குத்தாட்டம் போட்டு, போக்குவரத்தை சீர்குலைக் கின்றனரா? அவரவர் வீட்டுக்குள் பூணூல் போட்டுக் கொள்கின்றனர்.

ஏதோ அன்றைக்கு தான், முதன் முதலாக, பிராமணர்கள் பூணூல் போடுவது போல், வீரமணி அலறு கிறார். ‘தினமலர்’ நாளிதழில், ஆவணி அவிட்டம் படம் வெளியிட்டால் என்ன?

அது, சமுதாயத்தில் பொறுப்பான பத்திரிகை. எல்லா வகை செய்தி களையும் வெளியிடும் நடுநிலை நாளிதழ். இன்னொரு நாளிதழில், மகாளய அமாவாசை பற்றியும், பித்ரு தர்ப்பணம் பற்றியும் கட்டுரையே வந்தது. எல்லா ஜாதியினரும் தர்ப்பணம் செய்யலாம் என்று அதில் சொல்லப்பட்டு இருந்தது. திதியும் செய்யலாம் என்று இருந்தது.

அதை, ‘தமிழர் தலைவர்’ என தன்னைத் தானே, தன் பத்திரிகை, ‘விடுதலை’யில் புகழ்ந்து கொள்ளும் வீரமணி பார்த்ததில்லையா?

இவரை ‘தமிழர் தலைவர்' என, என்றாவது, ஏதாவது, தமிழன் சொல் லியிருக்கிறானா?

பெருத்த, ‘தமாஷ்’ பேர்வழி!

சடங்கு செய்வது எல்லாம் அவர் கள் இஷ்டம். இதில் மற்றவர்கள் தலையிட முடியாது. பழசாகி போன பாத்திரங்கள் எல்லாம் பரண் மேல் ஏத்தணும். இது ஒரு பழைய சினிமா பாட்டு, அதுபோல், வீரமணியும் காலத்துக்கு ஏற்றாற்போல், அவர்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் எல்லா விதங்களிலும் மாறிவிட்டோம்; நீங்கள் தான் இன்னும் மாறவில்லை!”

இது சேஷாத்ரி வா(லி)ளின் கடிதம்.

பிராமணர்களைக் கண்டு ஏன் மிரளுகிறார் என்று தெரியவில்லை என்று எழுதுகிறார். ‘கொசுக்களைக் கண்டு ஏன் மிரளுகிறீர்கள், நச்சுப் பாம் பைக் கண்டு ஏன் விலகி ஓடுகிறீர்கள், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து ஏன் மருந்தடிக்கிறீர்கள்?’ என்று கேட்டாலும் கேட்பார்கள் போலிருக்கிறது!

பார்ப்பனர்கள் பூணூல் அணியும் ஆவணி அவிட்டம் கொண்டாடுவதை யும் தேவர் குருபூஜை கொண்டாடுவதை யும் எப்படி சன்னமாக முடுச்சிப் போடு கிறார் பாத்தேளா?

குருபூஜை கொண்டாடும் அந்த மக்களையும் சேர்த்து, பார்ப்பனர் அல்லாதார் எல்லோரையும் சூத்திரப் பட்டத்திலே தானே வைத்துள்ளார்கள் - பார்ப்பனர் அல்லாதோர் இந்தக் கொடுமையை உணரும்பட்சத்தில் ஒரே ஒரு கால் நொடியில் அக்கிரகாரம் பூகம்பத்தில் புதைந்து போயிருக்குமே; அது அவ்வளவு சுலபத்தில் நடக்காது என்ற அசட்டுத் தைரியத்தில் தானே பார்ப்பனர்கள் மஞ்சள் குளித்துக் கும்மாங் குத்துப் போடுகிறார்கள்.

தமிழர் தலைவர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறாராம் வீரமணி. அட அசடு! முத்தமிழ் அறிஞர் மானமிகு சுயமரியாதைக்காரரான கலை ஞர் அவர்களே கூட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களை “தமிழர் தலைவர்” என்று தான் அழைப்பார் என்பது தெரியுமா?

காஞ்சிமடம் என்னும் குண்டு சட்டி யிலே உட்கார்ந்து கொண்டு இருப்ப வரை  ‘லோகக் குரு’ ‘ஜெகத்குரு’ என் கிறீர்களே அது போன்றதல்ல - தமிழர் தலைவர் என்ற விளிப்பு!

சடங்கு செய்வது எல்லாம் அவர்கள் இஷ்டம் - இதில் மற்றவர்கள் தலையிட முடியாதாம் - எவ்வளவு திமிரைப் பார்த்தீர்களா?

சடங்கு செய்யலாம்தான் - அது அடுத்தவர்களைச் சீண்டுவதாக இருக்கக் கூடாது - இழிவுபடுத்துவதாக அமையக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப் பாடு.

ஒரு தெருவில் முதல் வீட்டில் மட்டும் ‘இது படிதாண்டா பத்தினி வீடு’ என்று எழுதியிருந்தால் அந்த வீட்டுக்காரர் நிலை என்ன என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் இதற்குப் பதில்.

உங்கள் ஆத்தில் கத்திரிக்காய் சாம் பார் வைக்கிறேளே -  ஏன் கருவாட்டுக் குழம்பு வைக்கக்கூடாது என்றா கேட்கி றோம் - கத்திரிக்காய் சாம்பார் வைப்பது உங்கள் இஷ்டம்; அதே நேரத்தில் கத்திரிக்காய் சாம்பார் சாப்பாடு சாப்பிடு பவர்கள் எல்லாம் தான் ஒரிஜினல் அப்பாவுக்குப் பிறந்தவர்கள் என்று சொன்னால் சும்மா சொறிந்து கொண்டு கிடப்பார்களா?

கடைசியில் என்ன சொல்லி முடித் தார்? “நாங்கள் எல்லாவிதங்களிலும் மாறி விட்டோம்; வீரமணி காலத்திற்கேற்றாற் போல மாறவில்லை” என்று குற்றப் பத்தி ரிகை படிக்கிறார் திருவாளர் சேஷாத்ரி.

முதல் பத்தியில் என்ன சொல்லு கிறார்? சடங்கு செய்வதெல்லாம் எங்கள் இஷ்டம். மற்றவர்கள் தலையிட முடியாது என்று திமிராக எழுதிவிட்டு, அடுத்த பத்தியிலே நாங்கள் எல்லாம் மாறிவிட்டோம் என்கிறாரே - பத்திக்குப் பத்தி புத்தி முரண்படும் இந்த முப்புரி களை என்ன பெயர் சொல்லி அழைப்ப துவோ!

குறிப்பு: ‘தினமலரி’ல் கபாலி என்ற பெயரிலும், சேஷாத்ரி என்னும் பெயரி லும் வரும் இதே கடிதங்கள் - இதே ‘தினமலர்’ நடத்தும் ‘காலைக்கதிர்’ நாளேட்டில் பெயர் மாற்றி வெளிவரும் - அந்தளவுக்கு அறிவு நாணயஸ்தர்கள் இவர்கள். எடுத்துக்காட்டுடன் இது குறித்து ‘விடுதலை’ எழுதியதுண்டு. ஆதாரம் வேண்டுமா? 19.6.2004 நாளிட்ட ‘விடுதலை’ ஞாயிறு மலரைக் காண்க.

இந்தப் பித்தலாட்டக்காரர்களுக்குப் பத்திரிகை ஒரு கேடா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner