திராவிடர் கழகம், எந்தக் கட்டத்தில் அரசியலில், தன் கருத்தை வெளிப்படுத்தும்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியர் விடையளிக்கிறார்

திராவிடர் கழகம், எந்தக் கட்டத்தில் அரசியலில், தன் கருத்தை வெளிப்படுத்தும்?

கேள்வி 1: பார்ப்பன ஏடுகள், இதழ்கள் சசிகலாவைத் தூற்றுவது ஏன்?
- சே.அரங்கசாமி, துவாக்குடி

பதில்: அக்கிரகாரத் தலைமை என்று நாம் இதுவரை மகிழ்ந்த எண்ணம் - வரலாறு அவரால் மறைகிறதே. அதற்குக் காரணமாக ஒரு சூத்திர இனப்பெண் வந்துவிட்டாரே என்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமல்ல! இதுதான் அடி எண்ண நீரோட்டம், அவை தான் ‘அர்ச்சனைக்கு மேல் அர்ச்சனை’

கேள்வி 2: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் நிலையில் அங்குப் பணியாற்றும் இந்தியர்களுக்குப் பிரச்சினை வரும் என்ற கருத்துபற்றி....?
- இரெ.ஜோசப்ராஜ், தூத்துக்குடி

பதில்: ஓரளவு கவலை கொள்ளலாம்; ஆனால் அது ஆட்சி அமைத்த பின்பு சாத்தியப்படாது என்று “டிரம்பே” முடிவுக்கு வருவார். நம்மூர் தேர்தல் பிரச்சார சரவெடி போலத்தான் அது!

கேள்வி 3: உ.பி.யில் குடும்பச் சண்டையால் பி.ஜே.பி.க்கு ஆதரவான நிலை ஏற்படாதா?
- கு.இராமதாசன், சிங்கம்புணரி

பதில்: நிச்சயமாக; முன்பு அச்சத்தில் இருந்த பா.ஜ.க. இப்போது ஆனந்தத்தில் குளிக்கும் நிலை அதனால் உருவாகியுள்ளது.

கேள்வி 4: தமிழ்நாட்டில் விவசாயிகள் மரணம்?
- சொ.பாரதி, மாவூர்

பதில்: நூறைத் தாண்டியாகி விட்டது வேதனை, வெட்கம். தமிழக ஆட்சிக்கும், மத்திய ஆட்சிக்கும் கரும்புள்ளிகள். உடனடியாக பரிகாரம் தேவை.

கேள்வி 5: ‘துக்ளக்’ ஏடு அடிக்கடி கழுதைக் கார்ட்டூன் போடுவதன் காரணம் என்ன?  
- தீ.பார்த்திபன், சென்னை-101

பதில்: அதுவா? யோசித்து யோசித்து பார்த்தேன்; பழைய நாட்டுபுறப் பழமொழி தான் உங்கள் கேள்வியால் கிடைத்தது. “ஆசை இருக்கு தாசில் பார்க்க. அம்சம் இருக்கு ‘துக்ளக் அட்டையாகி’ அதை மேய்க்க.”

கேள்வி 6: திராவிடர் கழகம், எந்தக் கட்டத்தில் அரசியலில், தன் கருத்தை வெளிப்படுத்துகிறது?
- மா.க.கி.மூர்த்தி, மயிலாடுதுறை

பதில்: கொள்கை அடிப்படையில் எதையும் பார்ப்பது - கருத்து தெரிவிப்பது - தலையிடுவது எந்த நேரத்தில் என்றால் - பிரச்சினைகள் வரும்போது.

கேள்வி 7: ரூபாய் நோட்டுப் பிரச்சினையால் அவதி ஒரு பக்கம், பெட்ரோல் - டீசல் உயர்வால் விலைவாசி ஏற்றம் இன்னொரு பக்கம் - மக்கள் என்னதான் செய்வார்கள்?        
- அ.அ.பாட்சா, மேட்டுப்பாளையம்

பதில்: மோடி ராஜ்யத்தின் வலிமை - சாதனையை - இப்படி பற்பல சோதனைகள் மூலம் வாக்களித்தவர்கள் வகையாகப் புரிந்து கொள்வார்கள்.

கேள்வி 8: சில தனிப்பட்டவர்களிடம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் லட்சக்கணக்கில் குவிந்தது எப்படி?
- ஜெ.ஆசீர்வாதம், நாகர்கோவில்

பதில்: இதுதான் பிரதமரும், நிதி அமைச்சரும் பதில் அளிக்காத, பதில் அளிக்க முடியாத ஒரு மில்லியன் டாலர் கேள்வி

கேள்வி 9: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தால்  தகுதி நீக்கம் செய்யப்பட்டதுபற்றி....?
- செ.க.முருகன், மதுரை-4

பதில்: தேசிய அவமானம்; அரசுக்கு மாபெரும் தலைகுனிவு - ஜெ அரசின் வேதனை.

கேள்வி 10: மார்கழி மாதத்தில் சபாக்களில் பாடும் பாடல்கள் - யாருக்குப் புரிகிறது?
- து.மங்கை, சென்னை-14

பதில்: அவாளுக்கு - ஆனந்தத்தைத் தருகிறதே. அதுபோதாதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner