நோய்களைக் குணப்படுத்தும் பேலியோ!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நோய்களைக் குணப்படுத்தும் பேலியோ!

வி.சி.வில்வம்

அண்மையில் வெகு வேகமாகப் பரவி வரும் உணவுமுறையின் பெயர் ‘‘பேலியோ’’.  இது ஓர் ஆங்கிலச் சொல். இதன் தமிழாக்கம் ‘‘முன்னோர் உணவு’’. இதைப் ‘பேலியோ டயட்’ என்று கூறுகிறார்கள். ஆனால் இதை ‘டயட்’ என்று கூறக்கூடாது. ஏனெனில் குறைவான உணவு சாப்பிடுவதையே ‘டயட்’ என்கிறோம். ஆனால் ‘பசி அடங்கும் வரை சாப்பிடு’ என்பதே பேலியோவின் சிறப்பு! இந்த உணவு முறைக் குறித்த சிறு அறிமுகத்தைப் பார்ப்போம்!

நியாண்டர் செல்வன்

உணவு அறிமுகத்திற்கு முன், உணவை அறிமுகம் செய்த நியாண்டர் செல்வன் குறித்துப் பேசுவோம். ‘நியாண்டர்தால்’ என்பவரை முக்கிய ஆதி மனிதராக வரலாறு சொல்கிறது. அந்த ஆதி மனிதரில் பாதியை இணைத்து உருவானவரே ‘நியாண்டர்' செல்வன்.

கோயம்பத்தூரில் பிறந்து, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்! இயல்பாகவே ஆரோக்கிய உடலின் மீது அன்பு கொண்டவர். குறைந்த உணவும், மிகுந்த உடற்பயிற்சியும் செய்து வந்தவர். எனினும் சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் அவருக்கு வந்தது. எது வரக் கூடாது என்று நினைத்தாரோ, அது வந்தது.

‘‘மருந்து, மாத்திரை சாப்பிடாமல் உணவின் மூலம் குணப்படுத்த முடியுமா?'' என அவர் சிந்தித்தார். அதன் விளைவே பேலியோ! இந்தப் பேலியோ முறையைத்  தமிழக உணவுக்கு ஏற்ப மாற்றி, அதைக் கடைப் பிடிக்கத் தொடங்கினார். எதிர்பார்த்த வெற்றிகள் அனைத்தும் கிடைக்க, யாம் பெற்ற இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள முகநூலில் ‘‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’’ எனும் குழுமத்தைத் தொடங்கினார்.

பேலியோவின்
பெரு வெற்றி!

உலகில் எத்தனையோ ‘டயட்’ முறை கள் உள்ளன. இயற்கை உணவு, சைவ உணவு, பத்திய உணவு, பழங்கள் உணவு, காய்கறி உணவு, எண்ணற்ற இனங்கள், மதம், ஜாதிகளின் உணவு, சாமியார்கள் கூறும் உணவு எனப் பல விதங்கள் உள்ளன.  இதில் ‘உணவே மருந்து; மருந்தே உணவு!' என்கிற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். அந்த வரிசையில் தான் பேலியோவும் பார்க்கப்பட்டது. ஆனால் நாளடைவில் பேலியோ ஏற்படுத்திய மாற்றம் வியப்பானது.

ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுமத்தில் இன்றைக்கு இரண்டரை இலட்சம் மக்கள் உள்ளனர். இந்தப் பேலியோ உணவுமுறை அமெ ரிக்கா, அய்ரோப்பா உள்ளிட்ட பல நாடு களில்  உள்ளது. அறிமுகமான நான்கே ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பெரு வெற்றி பெற்றுள்ளது. காரணம்  அதன் பயன்பாடு. இதில் மருந்து மாத்திரைகள் இல்லை, லேகியம் பவுடர் இல்லை, எதையும் காட்டி காசாக்கும் போக்கு இல்லை! ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமத்தின் மய்யக் கருவே இலவச சேவைதான்!

எல்லாவற்றையும் கடந்து, இதன் வெற்றிக்கு ஒரு காரணம் உள்ளது! இதைக் கடைப்பிடித்த யாரும் இதுவரை தோல்வி அடையவில்லை. அப்படியென்ன இதில் சிறப்பு என்றால் ஒரே வரியில் பதில் சொல்லலாம். நாம் சாப்பிடும் உணவுகளே பல நோய்களுக்குக் காரணம். அந்த உணவை நிறுத்தும் போது, நோயும் நின்று போகிறது. எரிவதை அடக்கினால், கொதிப்பது நிற்கும்!    
பேலியோ உணவுகள்!

பெரும்பாலான டயட்  முறையில் சைவம் சாப்பிடச் சொல்வார்கள். அதுவும் குறைந்த அளவு. பேலியோ உணவில் அசைவமே முக்கிய உணவு. காரணம் நிறைய சத்துகள் இதில் உள்ளன. அதற்காக மூன்று வேளையும் அசைவம் சாப்பிடு வதில்லை. சைவர்களைவிட, அதிக காய்கறிகள் சாப்பிட வேண்டும். அந்த வகையில் பேலியோ உணவுகளை அய்ந்து வகையாகப் பிரிக்கலாம்.

காலை பாதாம் பருப்பு அல்லது பட்டர் டீ, மதியம் காய்கறிகள், இரவு முட்டை அல்லது கறி. இந்த உணவுகளைச் சாப் பிடுவதால் நம் உடலுக்கு கார்போ ஹைட்ரேட், கொழுப்புச் சத்து, புரதச்சத்து, உயிர்ச்சத்து, கனிமச்சத்து அனைத்தும் சரிவிகித அளவில் கிடைக்கின்றன. மேலும் இந்த உணவுகளில் முட்டை சேர்த்த சைவமும், முட்டை சேர்க்காத சைவ உணவும் உண்டு.

இந்த உணவுகளை எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ குழுமத்தில் ஏராளமான தகவல் உள்ளன. கூடுதல் செய்திகளுக்கு ஆரோக்கிய உணவுகள், மக்கள் உணவு, பேலியோ சந்தை,  Ancestral Foods, Paleo LCHF Diet - India, Paleo Changed My Life ஆகிய குழுக்களில் அறியலாம்.

மேலும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் File Section எனும் பிரிவில் Search Optionசென்று தேடினால் நான்கு ஆண்டு கால ஆவணங்கள் வந்து விழும். இந்த முகநூல் குழுக்கள் அல்லாமல் நியாண்டர் செல்வன் எழுதிய  ‘பேலியோ டயட்’ நூலில் மொத்த வரலாறும் இருக்கிறது! அவசியம் படிக்க வேண்டிய  நூல். மேலும் அமெரிக்காவில் வசிக்கும் சிவராம் ஜெகதீசன் எழுதிய ‘உன்னை வெல்வேன் நீரிழிவே’, ‘சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை’, சங்கர் எழுதிய ‘பேலியோ சாலஞ்ச்’, ஜி.முத்துராமன் எழுதிய ‘தைராய்டு ஏன்? எதற்கு? எப்படி?’ மற்றும் இந்த உணவு களை விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடும் சமையல் நூல்களும் உள்ளன.

பேலியோ நன்மைகள்!

மேற்கண்ட முகநூல் குழுக்களையும், நூல்களையும் வாசித்துப் பின்பற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை யும் சுருக்கமாகப் பார்க்கலாம். உடல் பருமன், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, சொரி யாசிஸ், உடம்பு வலி, முட்டி வலி, யூரிக் ஆசிட் பிரச்சினை, ஆஸ்துமா பிரச்சினை, கிட்னி பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை, மகளிர் தொடர்பான நிறைய பிரச்சினைகள், இரத்தம் குறைவு, கால்சியம் குறைவு, இரும்புச் சத்துக் குறைவு, வைட்டமின்-டி குறைவு, மாரடைப்பைத் தடுத்தல், புற்று நோயைத் தடுத்தல், வலிப்பு வராமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகிறது. பெரும்பாலான நோய்களை அறவே குணமாக, சில நோய்கள் கட்டுக் குள் வருகிறது.

இவை எப்படி சாத்தியம்?

இவை எப்படி சாத்தியம் என்று மீண்டும்  கேட்கலாம். உணவினால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அந்த உணவுகளை நிறுத்தும் போது, நோய்களும் காணாமல் போகின்றன. எந்த ஒன்றைக் கூறினாலும் சந்தேகம் வருவது  இயல்பானது தானே? இதோ எண்ணற்ற கேள்விகளை முன் வைக்கிறேன். விடையை மேற்கூறிய நூல் களிலும், முகநூல் குழுக்களிலும் அறிந்து பயன் பெறுங்கள்!

பேலியோ என்றால் என்ன? அதன் உணவு முறை யாது? மருத்துவப் பரி சோதனைச் செய்யாமல் இந்த உணவைத் தொடங்கக் கூடாது  ஏன்? பேலியோ குறித்துப் படித்து அல்லது தெளிவாக அறிந்த பிறகே தொடங்க வேண்டும் ஏன்? பேலியோ தொடர்பான சந்தேகம், பயத் தைப் போக்குவது எப்படி? அவசரமாக, ஆர்வமாக இந்த உணவைத் தொடங்குவ தால் ஏற்படும் சிரமங்கள் என்ன?

உணவைத் தொடங்கும் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? உணவைத் தொடங் கிய பிறகு கடும் பசி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? சோர்வு, மயக்கம், கிறுகிறுப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்த உணவு முறையில் செலவு அதிகமாகிறதே குறைக்க வழி இருக்கிறதா? வீட்டு வேலைகள் அதிகம் போலத் தெரிகிறதே, உண்மையா?

வெளி யூர் சென்றால் எப்படி சமாளிப்பது? உணவுமுறைத்  தொடர்பாய் ஒவ்வொரு வரும் தங்கள் அனுபவத்தை வேறு வேறாகக் கூறுகிறார்களே, உண்மை நிலையை எப்படி அறிவது? அவற்றை எவ்வாறு பகுத்தறிந்து  முடிவுக்கு வருவது? மேற்கொண்டு எழும் சந்தேகங்களுக்கு எங்கு பதில் பெறுவது?  இப்படி எண்ணற்ற கேள்விகள் நமக்கு வரும். அப்படியான ஆயிரம் கேள்விகளுக்கும்,  இங்கு அசத்த லான பதில்கள் இருக்கின்றன.

அவைகளை முழுமையாகப் படிப் போம்!
ஆரோக்கிய நல்வாழ்வு பெறுவோம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner