மோடிக்கு ஒரு பத்திரிகையாளரின் முடங்கல்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடிக்கு ஒரு பத்திரிகையாளரின் முடங்கல்!

மன்னிக்கவும் மோடி!

நான் இங்கே மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே என்று குறிப்பிட வில்லை, காரணம் நான் உங்களைவிட பெரியவன் என்ற திமிரால் அல்ல; சமீபத்தில் உங்களது முன்னேற்பாடில்லா நடவடிக்கையால் அல்லலுற்ற மக்களின் நிலையைக் கண்டு கோபத்தில், அந்த ‘மதிப்பிற்குரிய’ என்ற வார்த்தையை எடுத்துவிட்டேன்,  நீர் எப்படி ஒரே இரவில் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க வைத் தீரோ, அதே போன்று 50 நாட்களுக்குப் பிறகு உம்மீதான மதிப்பும் போய்விட்டது.

என்னுடைய இந்தக் கடித்தத்தை நீர் எளிதாக எடுத்துக்கொள்வீர். அது எனக்குத் தெரியும், நூற்றுக்கணக்கான மக்கள் வங்கி வரிசையில் நின்று இறந்த செய்திகளை உமது கைப்பாவை ஊடகங்கள் வெளி யிட்டும் அதற்கு சிறிதும் அசைந்து கொடுக் காத நீர்  இந்த கடிதத்திற்கா மதிப்பளிக்கப் போகிறீர்? இருப்பினும் இதை எழுதுவது எனது கடமை, உமக்காக அல்ல, இந்த மக்களுக்காக இந்தக் கடிதத்தை எழுதுவது எனது கடமையாகும்.

சிறுவயதில் நீர் மிகப் பெரிய வீரன் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன், உமது ஊர்க்காரர்கள் நீர் ஒரு முதலையை பிடித்ததாகக் கூறிப் பெருமைப்படுவார்கள். ஆம், உமது வீரத்தை நினைத்து அவர்கள் பெருமை பட்டுக்கொள்வார்கள். ஆனால் அது பொய்க்கதையாக இருக்குமென்று உமது தற்போதைய நடவடிக்கை தெரி கிறது, ஆம்!

நீர் பெரிய பெரிய முதலை களை விட்டு விட்டு, சுதந்திரமாக அமைதி யாக தன்னுடைய வழியே செல்லும் சிறிய மீன்களைப் பிடித்து சித்திரவதை செய்கிறீர். அதுமட்டுமா? பெரிய பெரிய முதலைகள் எல்லாம் உமது நண்பர்களாக உம்மைச் சுற்றி வருகின்றனர். இப்போது உமது 56 இன்ச் மார்பளவு சுருங்கிப்போய் விட்டதா?

உம்முடைய தாய் எத்தனை கனவு களோடு உம்மை வளர்த்திருப்பாள்? உமது நல்ல எதிர்காலம் கருதி ஜோஷ்தாபென் என்ற பெண்ணை உமக்காகத் தேர்ந் தெடுத்து மணமுடித்துவைத்தார். ஆனால் நீர் அப்பெண்ணை அபலையாக விட்டு விட்டு, தாயையும் தவிக்கவிட்டுவிட்டு ஓடிவிட்டீர், இமயமலை சென்றீர் என் கிறார்கள்.

வங்காளத்தில் உள்ள ராம கிருஷ்ணா மடத்திற்கு சென்றீர் என் கிறார்கள், ஆனால் அந்த ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்ன செய்தார் தெரியுமா? தான் துறவு வாழ்வு மேற்கொண்ட போதிலும் இறுதிவரை தனது தாய்க்கு மகனாக நின்று தனது கடமைகளைச் செய்தார், ஆனால் நீர் என்ன செய்தீர் என்பதை உமது மனசாட்சி யிடம் கேட்டுப்பாரும். நீரோ, சில நபர்கள் மூலம் உமது மனைவியின் செயல்களை உளவு பார்த்தீர் என்று கூறுகிறார்கள், இது உண்மையாக இருக்குமோ என்று என் மனதிற்கு இப்போது தோன்றுகிறது,

இந்திய அரசியலில் பெரும் மாற்றம் தேவை, இந்திய அரசியலை மாற்றிக் காட்டுவேன் என்பது உமது கனவு தானே, நீர் மதம் மற்றும் ஜாதி அரசியலை வெறுப் பவர் என்று கூறிக்கொண்டு, தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வலம் வந்தீரே, ஆனால் உமது மறுபக்கம் என்ன வென்று தெரிந்துவிட்டதே, நீர் தலைமைப் பதவிக்கு வர உமது கட்சியும், உம்மை ஆட்டிப்படைக்கும் காவித்தலைமையும்,

ஏன் நீரும் மதத்தைப் பயன்படுத்தினீரே, உம்மை பிற்படுத்தப்பட்டவன் என்று காட்டிக்கொள்ள அரசாணை வெளியிட்டு உமது ஜாதியையே உயர் ஜாதியிலிருந்து இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிக்கு மாற்றி னீரே, அது மட்டுமா? உமது கட்சி சமஸ் கிருதம், லவ் ஜிகாத், உருது இதர மாநில மொழிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததே இவை எல்லாம் உமக்குத் தெரியாமல் நடந்ததா?

நான் மிகவும் எளிமையானவன் என்று கூறிக்கொண்டே 10 லட்சம் மதிப்புள்ள ஆடையை அணிந்துகொண்டு வலம் வந்தீரே, இன்றும் உம்முடைய உடைக் காகவே அயல்நாட்டு தையல் பணியாளர் களை வைத்துள்ளீரே, உமது ஆடை வடிவமைப்பாளர்களுக்கு சிறப்பான வெகுமானம் மாதாமாதம் வழங்கப்படு கிறதே, இதுதான் எளிமைக்கு எடுத்துக் காட்டா?

நீவிர் காலையில் பார்க்கும் போது ஒரு ஆடை அணிந்திருக்கிறீர்? நாடாளுமன்றத் தில் ஒரு ஆடை என்றால், அடுத்தசில மணிநேர மேடையில் மற்றோரு ஆடை, பெரிய பெரிய பரம்பரை வசதிபடைத்த அரசியல் தலைவர்கள் கூட இப்படி ஒரே நாளில் மூன்று விலையுயர்ந்த ஆடை களை அணிந்ததில்லையே, உம்முடைய தேர்தல் பிரச்சாரப்பயணச் செலவே கோடிகளைத் தாண்டியதே! நீரா இந்திய அரசியலை மாற்றப்போகிறீர்?

நீர் சுதாமா போன்றவன் என்று கூறிக் கொண்டீர், ஆனால் எல்லா சுதாமாவிற் கும் ஒரு கிருஷ்ணன் கிடைப்பதில்லை, ஆனால் நீரோ, இந்த நாட்டில் உள்ள எல்லா மிகபெரும் பணக்கார கிருஷ்ணாக் களின் உற்ற நண்பனாக வலம் வருகிறீர், ஊரெல்லாம் கதராடைப் பிரச்சாரம் செய்துவிட்டு, உலகின் 10 விலை உயர்ந்த ஆடை நிறுவனங்களில் இருந்து ‘கோட் சூட்’ வகை ஆடையை வடிவமைத்து வரவழைத்து அணிகிறீர், உமது சில நண்பர்களிடம் இந்தியாவில் 80 விழுக்காடு பணம் இருக்கிறது,

நீர் அவர்களின் பணத் திற்காக பணிபுரிகிறீர் என்பது அனை வருக்கும் வெளிப்படையாகத் தெரிந்து விட்டது, கிருஷ்ணனுக்காக ஒரு கைப்பிடி அவல் கொடுத்த சுதாமா அல்ல, உமது கிருஷ்ணனுக்காக ஒட்டுமொத்த நாட் டையே கொடுத்த நரேந்திர சுதாமா மோடி தான் நீவிர்.

இந்த நாட்டினை வளமாக்குவீர் என்ற ஆசையை மக்களிடையே விதைத்து அதன் பலனைப் பெற்றீர்! ‘அச்சே தீன்’ (நல்ல நாள் வரும்) சுதந்திர இந்தியாவில் ஏதோ நீர் வந்துதான் அனைத்தையும் ஒழிக்கப்போகிறீர், இதற்கு முன்பு இருந்த அரசெல்லாம் ஊழல் அரசு, தோல்வியான அரசு என்று மேடைக்குமேடை பிரச்சாரம் செய்தீர், ஏதோ மாயாஜாலம் செய்து நாட்டை முன்னுக்குக் கொண்டுவந்து விடுவேன் என்று முழங்கினீர், ஆனால் என்ன ஆயிற்று?

உமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்குமேல் கடுமையான குற்றம் செய்த குற்றவாளிகள்! கொலை வழக்கு, கொள்ளை வழக்கு, கடத்தல் வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு என்று பல குற்றங்கள் உமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் நீதிமன்றங்களில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, அவர்கள் அனை வரும் உம்முடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனரே, உத்திரப்பிரதேசம் வந்த போது உம்முடன் மதிய உணவு சாப்பிட்டவர் ஒரு விபாச்சர விடுதி மற்றும் மதுபான விடுதியை நடத்தி பல மோசடி களைச் செய்தவராயிற்றே, இவர்களை எப்படி நீவிர் உமது அருகே வரவிட்டீர்? சாதாரண தொண்டன் பற்றிகூட அறியக் கூடிய நீவிர், ஒரு குற்றவாளி உமது அருகில் அமர்ந்து உணவு உண்கிறான் - அதை கவனிக்கத் தவறிவிட்டது ஏப்படி?

நீவிர் பதவியில் அமர்ந்த உடன் உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்து விட்டதே, நீர் அதன் பலனை மக்களுக்கு அளித்திருக்கலாமே. ஆனால் நீர் என்ன செய்தீர்? எண்ணெய் விலையை உயர்த் திக்கொண்டே போனீர்,  நீர் ஆட்சிக்கு வந்த உடன் ஒரு சில மாநிலங்களில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்தனரே, அந்த எண்ணிக் கையை கவனிக்கவில்லையா?

கருப்புப் பண ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு என்று கூறிக்கொண்டு நாட்டு மக்களை துன்பத்தில் ஆழ்த்திவிட்டீர், கருப்புப் பண முதலைகளைப் பிடித்து சிறையில் அடைக்க உமக்கு முழு சுதந் திரம் உள்ளதே, இப்போது காஷ்மீரில் உமது கட்சி கூட்டணி ஆட்சிதானே நடக்கிறது, ஆனால் நடப்பது என்ன? ஒரு சில கருப்புப் பணமுதலைகளுக்காக ஒட்டுமொத்த நாட்டையே வரிசையில் நிற்கவைத்து அதைக் கண்டு இன்புற்று அறிக்கை விடுகிறீர், வரிசையில் நிற்பவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள் என்று பச்சைப் பொய் யைக் கூறுகிறீரே?

இந்தியாவை சோமாலியாவாக மாற்றிவிடாதீர் மோடி, எங்களுக்கு மிகவும் வெட்கமாக உள்ளது, உண்மையைக் கூறிவிட்டு  உம்முடைய மனதில் என்ன நினைத்திருக்கிறீர் என்று, உம்முடைய முகமூடியை கழற்றி வைத்துவிடு, அல்லது உம்முடைய முகமூடிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்திடுவீர்!

வினோத் சர்மா என்ற மூத்த பத்திரி கையாளர் மற்றும் எழுத்தாளர் மோடிக்கு இந்தியில் எழுதிய கடிதம் ஆச்தக், என்.டி. டி.வி போன்ற செய்தி இணையதளங் களிலும், இதன் சுருக்கம் செய்யப்பட்ட பகுதிகள் தைனிக் ஜாகரன் போன்ற இந்தி நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

தமிழில்: சரவணா ராஜேந்திரன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner