பஞ்சாங்கம் - இலண்டனுக்கும்-இந்தியாக்குவும் ‘லடாய்’

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பஞ்சாங்கம் -
இலண்டனுக்கும்-இந்தியாக்குவும் ‘லடாய்’

எனது அன்பார்ந்த இந்து மக்களே!
ஈஸ்ட் ஹாம் இளம் பக்தர்கள் அமைப் பினால் (East Ham Youth Devotees Association) ஈஸ்ட் ஹாம் முருகன் ஆலயத்தில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் தெரிவித்துக் கொள் கிறேன்.

எனது அருமை இந்து மக்களே இலண்டன் ஈஸ்ட் ஹாம் முருகன் ஆலய நிர்வாகத்தில் தலைவர், செயலாளர், கணக்காளர், பிரதம அறங்காவலர்களின் நிலைப்பாடு என்னவெனில் சரியான முறைப்படி ஏனைய ஆலயங்களுடன் சேர்ந்து லண்டன் நேரப்படி கணித்த நாட்காட்டியை உபயோகிப்பதேயாகும்.

சில நாட்களுக்கு முன் ஈஸ்ட்ஹாம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ஈஸ்ட் ஹாம் மகாலட்சுமி ஆலயத்தின் தலைவர் கனம் ரங்கமைனார் மிகவும் பெருந்தன்மையுடன் ஈஸ்ட் ஹாம் முருகன் ஆலய நிர்வாகத்தினருக்கு பின்வரும் விடயங்களை விளக்கினார். அதாவது, பிர்மிங்ஹாம் (Birmingham) பாலாஜி ஆலயம், அமெரிக்காவில் அமைந்துள்ள பெருமாள் கோவில் போன்ற எல்லா ஆலயங்களும் அந்நாட்டு சூரியோ தயப்படி கணித்த பஞ்சாங்கத்தையே பாவிக்கின்றன.

இந்திய நாட்காட்டியை பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தவறு. காலம் கடந்த பின்னர் விரதங்கள் கொண்டாடப்படுகின்றன. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகின் றனர். இந்திய பஞ்சாங்கத்தில் சூரிய, சந்திர கிரகணம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இவ்வேளையில் ஈஸ்ட்ஹாம் முருகன் ஆலயம் மூடப்படுகின்றது.

முக்கியமாக 35 ஆண்டுகளுக்கு முன் இந்தியா, இலங்கையில் உபயோகத்தில் இருந்த பஞ்சாங்கங்கள் மாத்திரமே இந்நாட்டில் கிடைக்கப்பெற்றன. அக் காலகட்டத்தில் இலங்கை பஞ்சாங்கத்தை உபயோகித்த ஆர்ச்வே (Archway) முருகன் ஆலய நிர்வாகம் அது பிழை யெனத் தெரிந்தவுடன் பக்தர்களின் நலன் கருதி அதை மாற்றி சரியானமுறையில், இங்கிலாந்து நேரப்படி கணித்த பஞ் சாங்கத்தை உபயோகிப்பது உண்மை யிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம்.

ஆனால் அங்கிருந்த ஈஸ்ட்ஹாம் முருகன் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இக்கருத்திற்கு செவி சாய்க்க வில்லை. அதற்குக் காரணம்  போர்டு கம்பெனி (Ford Car Company) ஒன்றில் சாதாரண ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவ்வாலயத்தின் உபதலைவரின்  தவறான விளக்கம். அதாவது 35 ஆண்டுகளாக நாம் இந்திய நாட்டில் கடைப்பிடிக்கும்  அமாவாசை விரதத் தினை கடைப்பிடித்து வந்ததால்தான்  எமது ஆலயம் இவ்வளவு பிரம்மாண் டமாக வளர்ந்தது. இதுதான் எமது ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் இறுதி முடிவு, அதை யாராலும் மாற்ற முடியாது என்கின்ற இறுமாப்புப்பேச்சு. இவை எமக்கு இன்னுமொரு ஆலயத்திலும் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன விடயங்கள்.

அதே நேரம் அக்கூட்டதில் மாமேதை திரு.அன்பானந்தன் ஒரு கூற்றை முன் வைத்தார். அதாவது கிரீன்விச் நேரமும், இந்திய நேரமும் சமமானதாம். அதனால் இந்திய நாட்காட்டியை இங்குப் பயன் படுத்துவதே சரியானதாகும் என்று ஆணித்தரமாக முன்வைத்தார். உண்மை யிலேயே இவர் போன்ற கணிதமேதைகள் எமது சமுதாயத்தில் இருப்பது எமது முன்னோர் செய்த மாபெரும் நற்செயல் என்றால் அது மிகையாகாது.

இன்னுமொரு மனவேதனைக்கும், ஆச்சரியத்திற்க்குமான விடயமென்ன வெனில் அங்குள்ள ஒரு சிவாச்சாரியாரால், அவ்வாலய நிர்வாகத்திற்கு கூறப்பட்ட சில விடயங்கள். அதாவது, நடராஜ தரிசன பூஜையை இந்தியாவில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் கடைப் பிடிக்கும் அதே சமயத்தில் இங்குள்ள சைவ முன்னேற்றச்சங்கத்தினர் கடைப் பிடிக்கின்றனராம். அடுத்து ஏன் புரட்டாசி சனி விரதம் சனிக்கிழமைகளில் வர வேண்டும் - அது வேறு ஒரு நாளில் வரலாம்தானே என்றும் விவாதித்தார்.

வணக்கத்துக்குரிய பிள்ளையார் பட்டியின் பரம்பரையில் இருந்து இவ்வாறான  ஒரு கருத்து வந்தது அவமானத்தின் உச்சமே. சைவமுன்னேற்ற சங்கத்தின்  குறிப்பிட்ட ஒரு உபயதாரரைத் திருப்திப்படுத்தும் இம் முயற்சி, எம்மால் கண்டிக்கப்பட்டதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒரு விடயம்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக் கிழமையே புரட்டாசி சனிக்கிழமை என் பதை இச்  சிவாச்சாரியார் அறிந்து கொள் ளாமைதான் பெரும் வேடிக்கையாக இருந்தது.

அதேநேரத்தில் ஆலய தலைமைக் குருக்கள் சிவசிறீ கைலை நாகநாத சிவம், பலமேடைகளில் பகிரங்கமாக திருக்கணித பஞ்சாங்கமே இந்நாட்டு பாவனைக்கு உகந்தது. இருந்தாலும், எந்த சந்தர்ப்பத் திலும் எமது நிர்வாகத்தின் முடிவை என்னால் மாற்றமுடியாது என்று கூறி யிருந்தார். ஆனால் இத்தவறை  தமது நிருவாகத்திக்கு எடுத்துக்கூறி அதை மாற்றி அமைப்பது இவரது தலையாய கடமை யாகும்.

என் அன்பார்ந்த இந்து மக்களே, மிகவும் தாழ்மையான வேண்டுகோள்!

ஈஸ்ட்ஹாம் முருகன் ஆலய நிர் வாகத்தின் இந்த உதாசீனத்தையும், இவர்களின் நாட்காட்டியின்படி விரதங் களை கடைப்பிடிப்பதால் எந்தவித பயனும் இல்லை என்பதை உங்கள் நண்பர்களுக் கும், உறவினர்களுக்கும் விளக்குங்கள்.

நன்றி!
எம்.கோபாலகிருஷ்ணன்
ஈஸ்ட் ஹாம் முருகன் ஆலய நிர்வாகி

குறிப்பு: எந்தப் பஞ்சாங்கமாக இருந்தாலும் அறிவியலுக்குப் புறம்பானதே! நவக் கிரகங்களில் பூமியை ஒதுக்கிவிட்டு நட் சத்திரமான சூரியனைக் கிரகப் பட்டியலில் வைப்பதுதானே சோதிடமும் - பஞ்சாங்க மும் அது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner