ஒரு தீவட்டியோடு வாருங்கம்மா!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிஞர் கலி.பூங்குன்றன்

வாருங்கள் வாருங்கள் வாருங்கம்மா - ஒரு
தீவட்டி யோடு வாருங்கம்மா!

ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும்
மனுதர்ம எரிப்புப் போரில் வெல்லும்
போர்க் குணப்புலியாய் வாருங்கம்மா - ஒரு
தீவட்டி யோடு வாருங்கம்மா!

மனிதத்தைக் குடிக்கும்  மூட்டைப் பூச்சி
மனுதர்மம் என்னும் ஆரியநூல் - சீச்சீ!
பொட்டுப் பூச்சிகளாம் பெண்கள் எல்லாம்
பூண்டறுக்க வாருங்கள் வீதியெல்லாம்
- வாருங்கள்!

துரோகச் சிந்தனைக்கே பிறந்தவளாம்
துரோபதை தானாம் பெண்கள் எல்லாம்
படுக்கைக்கே படைக்கப் பட்டவர்களாம்
பாய்ந்திடுவீர் பார்ப்பனீய வேரறுப்போம்
- வாருங்கள்!

ஒரு தாயின் வயிற்றினில் பிறக்கலியா -
ஒரு மகளின் தந்தையாய் இருக்கலியா?
பெண்ணெலாம் விபச்சாரி என்று கூறும்
பூணூல் ஏட்டுக்குப் பாடை கட்டிடுவோம்
- வாருங்கள்!

தந்தை பெரியாரும் எரிக்கச் சொன்னார்
அண்ணல் அம்பேத்கரும் ஆணையிட்டார்
வீறு கொண்டு எழுவீர் வேங்கைகளாய்
வேதியத்தை வீழ்த்தும் வீர மங்கைகளாய்
- வாருங்கள்!

தமிழர் தலைவர் ஆணையிட்டார்
தணல் கரங்களோடு தடம்பதிப்பாய்!
உமியாகப் பறக்கட்டும் உச்சிக்குடுமியின்
ஒவ்வொரு அங்குல வஞ்சக மெலாம்!
அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
அனல் சீற்றப் பெண்களின் உரிமை வாள்
அன்று இராவண லீலா கண்ட தாய்
அடிபற்றி அனல்மூட்டி கதை முடிப்பாய்
- வாருங்கம்மா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner