‘‘நான்தான் சேலம் முத்துக்கிருஷ்ணன் பேசுகிறேன்!’’

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நான்தான் சேலம் முத்துக்கிருஷ்ணன். ஆதி திராவிடர்ப் பெருங்குடியில் பிறந்தவன்.

இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் அதுவும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிக்க ஆசைப்பட்டேன்.

நான் ஆசைப்பட்டது தப்பா? ‘மாடு தின்னும் புலையா - உனக்கு மார்கழி திருநாளா?’ என்று அன்று அய்யமார் கேட்டார்கள் நந்தனைப் பார்த்து.

இந்த நந்தனை அந்தப் பச்சை வார்த்தையால் அடிக்கவில்லைதான்.

ஆனாலும், நான் எடுத்து வைக்க ஆசைப்பட்ட அடியை அடி தெரியாமல் அடித்து நொறுக்கி விட்டார்களே!

என்ன சொல்லுகிறார்கள் அந்த அக்ரகாரவாசிகள்?

‘பெரியார் பாடுபட்டு, அம்பேத்கர் முயற்சித்து இட ஒதுக்கீடு உங்களுக்குக் கிடைத்துவிட்டால்...

நாங்கள் சும்மா இருப்போமா? எங்கள் கை பூப்பறித்துக் கொண்டா கிடக்கும்?

நீங்கள் எப்படித் தேர்வு எழுதுவீர்கள் பார்ப்போம்? அப்படியே தேர்வு எழுதினாலும் மார்க் போடுவது  அக்னி குடிகொண்டிருக்கும் எங்கள் கைதானே - சுட்டு எரித்துவிட மாட்டோமா?

பட்டம் பெற அய்ந்தாண்டுகள் தேவைதான் - அவ்வளவு சுலபமாக உங்களைக் கரை ஏறிட விடுவோமா?

அய்ந்து வருடம் உங்களைப் படிக்க விட்டால்தானே! - அன்றாடம் அணுஅணுவாக நாங்கள் கொடுக்கும் சித்ரவதையையும் தாண்டித் தாக்குப் பிடிக்க முடியுமா உங்களால்?

நாங்கள் உங்களைத் தீண்டமாட்டோம்; நீங்களே ஒரு தூக்குக் கயிற்றைத் தீண்டுவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா?

எத்தனை சாம்ராஜ்ஜியங்களை கவிழ்த்தவர்கள் நாங்கள். சோழவேந்தனின் வாரிசு ஆதித்த கரிகால னையே தீர்த்துக் கட்டிய தீட்சதர்க் கூட்டமாயிற்றே நாங்கள்.

சூத்திரனையும், பஞ்சமனையும் படிக்கவிட்டு, நாங்கள் சலாம் போட்டுக் கொண்டு இருப்போம் என்று எண்ணாதீர்கள்!

இஸ்லாமியர்கள்மீது படையெடுப்பை நிகழ்த்தி நாட்டை உருவாக்கினான் சூத்திர சிவாஜி - அவனை ஆளவிட்டோமா?

என்ன இருந்தாலும் அவன் சூத்திரன்தானே!

ஒருவனை அரியாசனத்தில் உட்கார வைக்கும் சூத்திரக் கயிறு எங்கள் கையில்தானே இருக்கிறது.

அவனை என்ன செய்தோம் என்ற வரலாறு தெரியுமா உங்களவாளுக்கு?

அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் ரோகித் வெமுலாவுக்கு என்ன நடந்தது? அவனும் பஞ்சமன் தானே!

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் சரவணனுக்கு என்ன நடந்தது?

தெரிந்துகொண்டுமா டிகிரி வாங்க டில்லிப் பட்டணம் வந்தாய்?

அவனை சாகடித்து அந்த ஒரு இடத்தைப் பிடித்தது எங்களாத்துப் பெண்ணுதானே!

கான்பூர் அய்.அய்.டி.யில் - 20

கோரக்பூரில் - 13

மெட்ராசில் - 13

பாம்பே - 11

டில்லி - 6

ரூர்கி - 5

கவுகாத்தி (அகமதாபாத்) - 4

அய்தராபாத் - 4

இவையெல்லாம் அய்.அய்.டி.,களில் தற்கொலைக் குத் தள்ளப்பட்ட கீழ்ஜாதிக்காரன் பட்டியல்.

டில்லி எய்ம்ஸில் ஒருவர்.

இவ்வளவு நடந்த பிறகும் ஏன் உங்களவாளுக்கு மேல்படிப்பு?

என்ன நாலு நாளைக்குக் கத்துவேள் - போராட்டம், கீராட்டம் நடத்துவேள் - உங்க கட்சிக்காரன் வந்து கொடி பிடிப்பான் - ஏதோ இரண்டு பத்திரிகையில் ரெண்டு நாளைக்கு எழுதுவான்?

அதுக்குமேல் என்ன செய்ய முடியும்?

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் எல்லாம் எங்களவாள்... அதுவும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற ‘பொறுக்கி’ எடுக்கப்பட்டவாள்!

ஒவ்வொரு துறையிலும் ‘ஹெட்’ எங்களவாள். ரிஜிஸ்ட்ரார் எங்களவாள்!

மத்தியில் ஆட்சி அதிகாரம் எங்கள் கையில்? நீதிமன்றம் மட்டும் என்ன வாழுது?

ஏதோ தமிழ்நாட்டுல உங்கப் பருப்பு வேகுது; நாயக்கர் ஆட்கள் இருக்காள் - ஆட்சி அதிகாரமுன்னு கொழிக்க றேள்.

மற்ற ஸ்டேட்டு எல்லாம் எங்கள் ரியல் எஸ்டேட்டுதானே!

தமிழ், கிமிழ்னு சத்தம் போட்டுக் கிடக்கவேண்டியதுதான். வெள்ளைக் காரன் காலத்திலேயிருந்து இங்கிலீ ஷைப் படிக்க ஆரம்பிச்சோம். என்ன தான் குட்டிக்கரணம் நீங்கள் போட்டா லும் எங்களைப் போல் நுனி நாக்கு இங்கிலீஷ் உங்களால் பேச முடியுமா?

இந்த இங்கிலீசு எங்களிடம் இருக்கும்வரை உங்களால் எங்களை ஆட்ட முடியாது - அசைக்க முடியாது!

சோஷலிசம், தேசிய மயமுன்னு கத்தினேள் - இப்ப என்னாச்சு? எல்லாம் பிரைவேட்டைசேஷன். அங்கெல்லாம் டாப்பில் எங்களவாள்தானே!

ரிசர்வேஷன் எல்லாம் கவர்ன்மென் டுக்குள்ளேதான்.

இங்கே நாங்க வைச்சதுதான் சட்டம். கருவிலே இருக்கிற அக்ரகார சிசுவுக் குக்கூட நாங்கள் எங்களுக்குள்ளே ரிசர்வ் செய்து வைத்துவிட்டோமே!

உங்களால் என்ன செய்ய முடியும்?

இதுதான் பார்ப்பனர்களின் இன் றைய நிலைப்பாடு.

வறட்டுத் தத்துவம் பேசிக்கிட்டு, பார்ப்பன ஆதிக்கத்தை வளரவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இங்குள்ள இடதுசாரித்தனத்தின் போக்கா?

ஒரு பாசிசம் - ஒரு மத வாதம் - மதம் பிடித்துத் திரிகிறதே அதனை அடக்குவதற்கு எந்த ‘ஆயுதம்’ கிடைத் தாலும் பயன்படுத்திக் கொள்வோம் என்ற யுக்தி கிடையாது.

விளைவு....

பாசிசத்திற்குத் தண்ணீர்ப் பாய்ச்சல்!

மதவாதத்திற்கு வேலி கட்டல்!

பார்ப்பனீயத்துக்கு பாதை அமைத் தல்!

ராமராஜ்ஜியத்துக்கு முடிசூட்டல்!

இன்னும் எத்தனை எத்தனை  முத் துக்கிருஷ்ணன்களும், ரோகித் வெமு லாக்களும் தற்கொலை செய்துகொண் டால் யதார்த்த நிலைக்கு இவர்கள் வருவார்கள்?

காங்கிரசும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இறங்கி வரவேண்டாமா?

தேசியம் மட்டும் பேசினால் வெறும் தேங்காய் மூடிதான். மாநிலக் கட்சிகளின் தோள்களில் கைபோட்டும் பேசுங்கள் - கவனம்! கவனம்!!

- மின்சாரம்

Comments  

 
#1 Pugazhendhi 2017-03-29 16:22
இன்றைய தினமணியில் (29 -3 -2017 )ஒரு "அவாள்"சாது ஸ்ரீராம் என்ற பெயரில் "தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுகவின் ஆறாவது விரலாக மாறிவிட்டதா? " என்று குட்டிகதையெல்லா ம் சொல்லி,ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.ஆர்கே நகர் தொகுதியில் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்க க்கூடாது தனித்து போட்டியிட்டிருக ்கவேண்டும் திமுகவின் முடிவுகளை அப்படியே ஆதரித்தால் காங்கிரசின் தனித்துவம் போய்விடும் என்று ஹிதோபதேசம் செய்துள்ளார் திமுகவுக்கு பெருகிவரும் பேராதரவை கண்டு "அவாள்' எல்லாம் அரண்டுபோய் கிடக்கிறார்கள் கங்கை அமரன் வெற்றி மூலமாவது "அவாளின்" பாஜக தமிழகத்தில் வேர் ஊன்றமுடியாதா என்ற பிலாக்கணமே அந்த கட்டுரை
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner