ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் ஆபத்தான கங்கை நீருக்குக் கொட்டியழப்படும் கோடிகள்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கங்கையாறு பாய்ந்தோடும் முக்கியமான 63 இடங்களில் தண்ணீரை எடுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அப்போது வெளியான தண்ணீரின் தன்மைகள் குறித்த தகவல்கள் வருமாறு:

தண்ணீரில் ஆக்சிஜன் அளவு என்பது ஒரு லிட்டருக்கு குறைந்த பட்சம் 5 மி.கி. இருந்திட வேண்டும். 2014ஆம் ஆண்டில் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்த அளவில் 2.8மி.கி. அதிகபட்சம் 11.1மி.கி. அளவில் இருந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் 2.9 மி.கி.லிருந்து 11.6 மி.கி.அளவில் இருந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் 2.5லிருந்து 10.6 வரை ஆக்சிஜன் அளவு இருந்துள்ளது.

தண்ணீரில் உயிர்கள் வாழத் தேவையான ஆக்சிஜன் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் குறைந்த பட்சம் 3 மி.கி. அளவுக்கு மேல் இருக்கக் கூடாது. 2014ஆம் ஆண்டில் 6.3 மி.கி. லிருந்து 8.9மி.கி.வரையிலான அளவி லும், 2015ஆம் ஆண்டில் 6.7 மி.கி.லிருந்து 9.3 மி.கி.வரையிலும், 2016 ஆம் ஆண்டில் 6.3மி.கி.லிருந்து 8.7 மி.கி.வரையிலான அளவிலும் ஆக்சிஜன் உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் இருக்க வேண்டிய ஹைட்ரஜன் அளவானது 6.5 மி.கி.லிருந்து 8.5 மி.கி.வரை என்கிற அளவுவரை இருக்க வேண்டும்.

2014ஆம் ஆண்டில் 12.2 மி.கி. அளவிலும், 2015ஆம் ஆண்டில் 0.4 மி.கி. அளவில் தொடங்கி 16மி.கி. அளவிலும், 2016ஆம் ஆண்டில் 12.2 மி.கி. அளவிலும் இருந்துள்ளது.

குளியலுக்கு ஏற்ற தண்ணீர் தரம் குறித்து குறிப்பிடுகையில் 100 மிலி தண்ணீ¢ரில் கோலிஃபார்ம் எம்பிஎன் அளவானது 500 எம்பிஎன் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

கங்கையாற்றின் தண்ணீரில் 2014ஆம் ஆண்டில் 100 மிலி தண்ணீரில் 4 முதல் 50 இலட்சம் எம்பிஎன் அளவிலும், 2015ஆம் ஆண்டில் 14 இலட்சம் எம்பிஎன் அளவிலும், 2016ஆம் ஆண்டில் 21 எம்பிஎன் முதல் 5 இலட்சம் எம்பிஎன் வரையிலும் கோலிபார்ம் அளவு இருந்துள்ளது.

ஒதுக்கீடுகளும், செலவுகளும்

2014-2015 நிதியாண்டில் ரூ.2,053 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.170 கோடி மட் டுமே செலவிடப்பட்டது 2015-2016 நிதியாண் டில் ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ.602.60 கோடி செலவிடப்பட்டது. 2015-2017 நிதியாண்டில் ரூ.1,675 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு ரூ.756.01 கோடி செலவிடப்பட்டுள்ளது.

செலவிடப்படாத நிலையிலும் ஒதுக்கீடுகள் தொடரும் அவலம்

2014-2015 நிதியாண்டில் செலவிடப்படாத தொகை ரூ.1,883 கோடியாகும். 2015-2016 நிதி யாண்டில்   செலவிடப்படாத தொகை ரூ.1047.40 கோடியாகும். 2016-2017 நிதி யாண்டில் ரூ.918.99 கோடி ரூபாய் செல விடப்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner