ஏசுவை எதிர்த்தால்- விவேகானந்தரை எதிர்த்ததாகும்! என்ன சொல்லுகிறீர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களே!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஏசுவைப் பற்றி விவேகானந்தர் சொல்லியிருப்பதைப் பகுத்தறிவுவாதிகள் ஏற்கவில்லைதான். அதே நேரத்தில் விவேகானந்தரைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பி.ஜே.பி. பார்வையில் ஏசுவைப்பற்றி விவே கானந்தர் கூறியுள்ளதை ஏற்க வேண்டும் அல்லவா!

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை சரிவரப் புரிந்து கொள்ளாத சில இந்து நண்பர்கள் அவ ரைக் குறித்தும், அவருடைய மார்க்கத் தைக் குறித்தும் இழிவாகப் பல மேடை களில் பேசி வருகின்றனர். ஆனால் அவர்களால் போற்றப்படும்  விவே கானந்தரோ இயேசு கிறிஸ்துவைப் பற்றி புகழ்ந்து கூறுவதை அவரது நூற்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாகச் சென் னையில் மயிலாப்பூர் சிறீராம கிருஷ்ண மடத்துத் தலைவரால் வெளியிடப்பட்ட சுவாமி விவே கானந்தரின் ஞானதீபம் (சுவாமி களின் நூற்றாண்டு விழாப் பதிப்பு - பழைய பதிப்பு) என்னும் நூல் வரி சையிலிருந்து அவருடைய கருத் துக்கள் இங்கே திரட்டித் தரப் படுகின்றன.
இதோ விவேகானந்தர் பேசுகிறார் கேண்மின்! கேண்மின்!

1) “கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால், எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவ ரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே.” (சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்; (சு.நூ.வி.பதிப்பு) சுடர் 2; பக்கம் 453)

2) “ஏசு கிறிஸ்துவை, மனித உருக்கொண்ட தெய்வத்தை, நாம் தெய்வ மாக வணங்க வேண்டும்... உங்களுக்கு வீடுபேறு வேண்டுமானால், ஏசு கிறிஸ்து வுடன் நெருங்கிய தொடர்பினைக் கொள் ளுங்கள். ஏனெனில், உங்கள் எண்ணத் தால் எண்ணுகிற எந்தக் கடவுளைக் காட்டிலும் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் ஏசுவே. ஏசு ஒரு மனிதரே என்று நீங்கள் நினைப்பீர்களாயின், அவரை நீங்கள் வணங்க வேண்டாம். இயேசுவே கடவுள் என்ற உண்மை உங் களுக்குப் புலப்படுகின்றபோது அவரை நீங்கள் வணங்கலாம். ஏசுவை ஒரு மனிதர் என்று சொல்லுகிறவர்கள் அவரைக் கடவுளாக வணங்கினால், அவர்கள் தெய்வ நிந்தனை என்ற குற்றம் புரிந்த வர்கள் ஆவார்கள்.” (சுவாமி விவேகானந் தரின் ஞானதீபம்; (சு.நூ.வி.பதிப்பு) சுடர் 7; பக்கம் 270)

3) “சிலுவை மீது இருந்த சான்றோரை நினைப்பீர்களாக! அவர் நம்முடைய வெற்றிக்காகப் படை படையாகவுள்ள தேவ தூதர்களை அழைத்திருக்கக்கூடும். ஆனால், அவர் எதிர்த்துப் போராட வில்லை. தம்மைச் சிலுவையில் அறைந்த வர்கள் மீது இரக்கங் காட்டினார். ஒவ் வோர் அவமானத்தையும், இடும்பையை யும் பொறுத்தார். எல்லாப் பாவச் சுமைகளையும் தாமே ஏற்றார். அல்லலுறும் மக்களே, பெருஞ்சுமை தாங்கி நிற்கும் வையகத்தீரே, என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு அமைதியை அளிக்கின்றேன் என்றார். இவ்வண்ணம் நடந்து கொள்வது தான் உண்மைப் பொறையாகும். நம் வாழ்வின் முறையைக் காட்டிலும் அவர் எவ்வளவு உயர்ந்த நிலையில் திகழ்ந்து நிற்கின்றார். பாருங்கள்! அடிமை வாழ்வு நடத்துகின்ற நாம் அதை அறிய முடி யாதபடி அது அப்படி நிமிர்ந்து காட்சி அளிக்கின்றது. என் கன்னத்தில் ஒருவன் அடித்த அத்தருணத்தே என் கை திரும்பி அவனை அடிக்கின்றது, பளீர் என்ற சத்தமும் வெடித்து எழுகின்றது. சிலுவை யில் அறையப்பட்ட அந்தப் பெருந்தகை யாரின் சிறப்பையும் அருளையும் நான் எப்படி அறிய முடியும்? அதன் பெரு மையை நான் உணர முடியுமா?” (சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்; (சு.நூ.வி. பதிப்பு) சுடர் 2; பக்கம் 371-372)

4) “மகனைப் பார்த்தவர் தந்தையைப் பார்த்தவராவர் என்பது விவிலிய வேத வாக்கு, மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண உங்களால் இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவிலாத் தத்துவம், பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால், ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்” (சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்; (சு.நூ.வி.பதிப்பு) சுடர் 7, பக்கம் 270-271)

5) “கிறிஸ்துவானவர் தொட்டவுடனே மனிதனுடைய ஆன்மாவே மாறுதலடை கின்றது. கிறிஸ்துவைப் போல அவன் மாறிவிடுவான். அவனது வாழ்க்கை முழு வதும் புனிதமாகிவிடும். நல்ல ஆன்மீகச் சக்தி, அவனது உடலிலுள்ள மயிர்க்கால் தோறும் பொசிந்து எட்டிப்பார்க்கும்.” (சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்; (சு.நூ.வி.பதிப்பு) சுடர் 4; பக்கம் 500)

6) “தீமையைத் தீமையால் எதிர்க்காதே” என்ற இயேசுநாதரின் போதனையை இந்த உலகம் கடைப்பிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ள தாக இருக்கிறது. (சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்; (சு.நூ.வி.பதிப்பு) சுடர் 7; பக்கம் 119)

7) “மலையின் மேல் செய்த சொற் பொழிவு அவரை ஏற்ற அய்ரோப்பாவை வாழ வைத்தது. மனித ஆன்மா உண் மையைத் தழுவி பொய்புனைந்ததை உதறித் தள்ளிவிட்டது.” (சுவாமி விவே கானந்தரின் ஞானதீபம் (சு.நூ.வி.பதிப்பு) சுடர் 4; பக்கம் 500)
இப்படியெல்லாம் இடி முழக்கமாக முழங்கிய விவேகானந்தரை ஏற்கப் போகிறீர்களா? விலக்கப் போகிறீர்களா?
விவேகானந்தர் ஜெயந்தி என்று ஊருக்கு ஊர் பள்ளிக்கு பள்ளி ஊர்வல மாய் எடுத்துச் செல்கிறீர்களே - அவர் மதித்த, செபித்த ஏசுநாதரை என்ன செய்ய உத்தேசம்?
கிறித்தவர்கள் ஏசுவைக் கும்பிடக் கூடாது. கிருஷ்ணனைக் கும்பிட வேண் டும் என்று கொக்கரிக்கிற ஆர்.எஸ்.எஸ். காரர்களே! உங்கள் பதில் என்ன? விவே கானந்தரை வெட்டிவிடப் போகிறீர்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner