ஆர்.எஸ்.எஸின் பாசிசம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் வலியுறுத்தினார்.

ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்றுநாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, உபி முதல்வர் ராம் பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நிறைவு நிகழ்ச்சியில் சுதர்சன் ஆற்றிய உரை விவரம்:

பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும் பிற மதங்களின் கருத்தையும் பிற மதங்களின் கருத் துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.

சிறீராமபிரான், சிறீகிருஷ்ண பகவான் ஆகியோ ருடைய ரத்தம் தான் தங் களுடைய நரம்புகளில் ஒடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அந்நிய நாட்டிலிருந்து நமது நாட்டின்மீது படை யெடுத்த பாபரை எதற்காக முஸ்லிம்கள் சொந்தம் கொண் டாட வேண்டும்? பாபருடைய கல்லறைக் கருத்துகளை முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானமே புறக்கணித்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் முன்னோர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்லர். எனவே முஸ்லிம்களின் முன்னோர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான்.

ஈரானிலுள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென சுபியி சத்தை வகுத்துக் கொண்டனர். எனவே இஸ்லாமிய புதிய அமைப்பை ஏற்படுத்துவது பற்றி இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவைத் துண்டாடியது மனித வரலாற்றின் மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் தலைவர் அல்தாப் ஹுசைன் தெரிவித்துள்ள கருத்தை முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.


அனைத்து மதங்களும் சமமானதல்ல என்று வாடி கனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடம் வெளி யிட்டுள்ள அறிக்கை கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள  கிறிஸ்தவ அமைப்புகளை (கத்தோலிக்க மிஷினரிகளை) இந்தியா வில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
மதமாற்றம் கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கருத்து.

வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை யிடத்தின் கருத்துக்கு பெரும்பாலான இந்திய கிறிஸ்த வர்கள் கட்டுப்பட்டுள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவை தங்களுக்கென சுதேசி சர்ச் கருத்துகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
எனவே இந்தியக் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்க தலை மையிடத்தின் ஏற்க முடியாத கருத்தை உதறித் தள்ளிவிட்டு, அதனுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ரட்சிப்புக்கு இதர பல வழிகள் உள்ளன.

‘தினமணி’ 16.10.2000

இயேசுநாதர் இமயமலைக்கு வந்து இந்து சாமியார் களிடம் உபதேசம் பெற்றுதான் பைபிள் எழுதினாராம்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் பாடத்தில் இடம் பெறும் செய்தி இது.

இந்திய வரலாறு  தலைமுறைகளை அழிக்கும் குண்டு களைத் தயாரிக்கும் ஆலைகளாக (BOMB FACTORIES) மாற்றுகிறது.
(“FRONT LINE”)

விவேகானந்தர் இயேசு - கிறித்தவம் பற்றிச் சொல்வ தற்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சொல்லுவதற்கும் எத்தனை முரண்பாடு என்பதை எண்ணிப்பாரீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner