தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, புதுடில்லி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்தியில் அதிகாரப் பீடத்தில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ.) பச்சைப் பாசிசப் பார்ப்பன ஆட்சியாக - இந்து வெறித்தனத்தின் கோரைப் பற்களைக் கொண்ட ஒரு மிருகத்தனத்துடன் நடந்துகொண்டு வருகிறது.

இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவோம்; இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது மிகப்பெரிய பெரும் பான்மை கிடைத்தது என்றவுடன், கண்மண் தெரியாமல் நிர்வாண கோலத்தில் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. அதில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் நூற்றாண்டையொட்டி பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் கடிதத் தொடர்பிலும், விளம்பரங்களிலும் அவரின் உருவம் பொறித்த இலட் சினையையே (லோகோ) பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யார் இந்த உபாத்தியாயா? பெயருக்குமுன் பண்டிட் என்பதால் அவர் ஒரு பார்ப்பனர் என்பது பச்சையாகத் தெரிந்துவிட்டது.

 

யார் இந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா? அதுதான் முக்கியம். சும்மா ஆடுமா பார்ப்பனக் குடுமி?

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, (25 செப்டம்பர் 1916 -  11 பிப்ரவரி 1968) பாரதீய ஜன சங்கம் கட்சித் தலைவர் களில் முதன்மையானவர். தற்போதைய பாரதீய ஜனதா கட்சியின்  அன்றைய முன்னோடித் தலைவர்களில் ஒருவர். 1942 ஆம் ஆண்டிலிருந்து ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண் டவர். நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் மாநில அமைப்பில் இரண்டாண்டு பயிற்சிக்குப் பின் முழு நேரப் பிரச்சாரகர் ஆனவர்.

இந்துத்துவ கொள்கைகளைப் பரப்ப ‘ராஷ்ட்ர தர்மா’ எனும் மாத இதழை, 1940 இல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் ‘பஞ்சஜன்யா’ எனும் வார இதழையும், ‘சுதேசி’ எனும் நாளிதழையும் தொடங்கினார்.

1951ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்க கட்சியை நிறுவிய போது, தீனதயாள் உபாத்தி யாயா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். தீனதயாள் உபாத்தியாயா குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி கூறும்போது, ‘‘இரண்டு தீனதயாள் உபாத்தியாயாக்கள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல் முகம் மாறியிருக்கும்’’ என்றார்.

1953 இல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைந்த பின்னர், ஜன சங்கம் கட்சியின் தலைவரானார்.

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர். ஜனசங்கம் என்ற கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர் - தொடக்கக் கால ஜனசங்கத்தின் பொதுச்செயலாளராகவும், பின் தலைவராகவும் இருந்தவர்.
அத்தகையவரின் நூற்றாண்டை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடித் தொலையட்டும் - நமக்கு அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

மதச்சார்பற்ற ஓர் அரசு பச்சையான ஓர் ஆர்.எஸ். எஸ்.காரரை - இந்துத்துவாவாதியை அரசின் சார்பில் தூக்கிப் பிடிப்பது - முதன்மைப்படுத்துவது எப்படி சரியாகும்?

பொதுத் துறை நிறுவனங்களின் கடிதத்தில் உபாத்தியா யாவின் உருவத்தை இலட்சினையாகப் (லோகோ) பயன் படுத்தவேண்டும் என்ற ஆணையோடு நின்ற பாடில்லை. ஆர்.எஸ்.எஸ். நெருப்பு அதற்குள் அடங்கிவிடுமா?
பல்கலைக் கழகங்களுக்கும், அரசு மருத்துவமனை களுக்கும் அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதுதான் கவனிக்கத்தக்கது.

இதோ ஒரு பட்டியல்:

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சேகாவதி பல் கலைக்கழகம், சிகார், (இராஜஸ்தான்)

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்

தீனதயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்

தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, புதுடில்லி

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா கல்விக்கூடம், கான்பூர்

தீனதயாள் உபாத்தியாயா பெட்ரோலியம் பல்கலைக்கழகம், காந்தி நகர், குஜராத்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மருத்துவக் கல்லூரி, ராஜ்கோட், குஜராத்

தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, சிம்லா, இமாச்சலப் பிரதேசம் இத்தியாதி.... இத்தியாதி...

தந்தை பெரியார் பெயரிலும், அறிஞர் அண்ணா பெயரிலும் சாலைகளுக்குப் பெயர் வைத்தால், ‘தாம்தூம்’ என்று தாண்டிக் குதிக்கும் தர்ப்பைப் புல்லேந்திகள் பி.ஜே.பி. ஆட்சியின் இந்தப் போக்குக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

பெயரை மாற்றினால் போதுமா? இதனால் எல்லாம் மாற்றம் வந்து விடுமா? வளர்ச்சி வேண்டாமா? என்று வக்கணைப் பேசுவோர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
டில்லியில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்த அவுரங்க சாயபு சாலையின் பெயரை மாற்றினார்கள்; அரியானாவில் அக்பர் சாலையின் பெயரை மாற்றினார்கள்.
ஆனால், இதைப்பற்றியெல்லாம் நம் நாட்டு ஊடகங்கள் கவனத்தில் கொள்வதில்லை!

பார்ப்பனத் திமிருக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவை யும் ‘‘ஒரு தீ’’ பற்றிக்கொள்ளப் போகிறது - கெடுதியிலும் ஒரு நன்மை என்பது இதுதானோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner