பிரதமர் நரேந்திர மோடி ராம்தேவின் விளம்பரத் ‘தாதா’வா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சமீபத்திய நாளிதழ்களின் முகப்புப் பக்க விளம்பரம் மோடி ரிப்பன் வெட்டக் காத்திருக்கும் பதஞ்சலி ஆய்வு நிறுவனத்தின் விளம்பரம்தான். இதன்மூலம் மோடி மாடலாக அறிமுகமாகும் நிறுவனங்களின் பட்டியலில் புதிதாகப் பதஞ்சலியும் இணைந்துள்ளது.

பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி பி.ஜே.பி. ஆதரவோடுதான் வியாபாரக் களத்திலேயே குதித்தது. பதஞ்சலி என்னும் சட்ட விரோத உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

12 மாநிலங்களில் நில அபகரிப்பு, கொலை, கொள்ளை ஆள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள பதஞ்சலி நிறுவனத்துக்கு தற்போது மாடலாகி இருக்கிறார் மோடி.

இவர் முகம் காட்டும் நிறுவனங்கள் எல்லாம் பி.ஜே.பி.,க் குத் தேர்தல் நேரத்தில் வாரி இறைத்தது கொஞ்சமா - நஞ்சமா?
கருப்புப் பணப் புகழ் ராம் தேவ் நிறுவனத்தில் மோடி விளம்பரம்

1994 ஆம் ஆண்டு முதல் அவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பல கோடி சொத்துச் சேர்ந்தது எப்படி என்பதுபற்றி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். ஆயுர்வேத மருந்து விற்பனை யில் ஈடுபடும் இவருக்கு யோகா குரு என்ற பெயரில் வருமான வரிச்சலுகை எப்படி அளிக்கப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

1995 ஆம் ஆண்டில் திவ்யா யோக மந்திர் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கிய ராம்தேவ் அங்கு யோகாசனங்களைக் கற்றுத்தந்து வந்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் ஆஸ்தா டி.வி.யில் யோகா கற்றுத் தரத் தொடங்கியதில் இருந்து பிரபலமானார்.

பின்னர் உ.பி.மாநிலம் ஹரித்துவாரில் பதஞ்சலி என்ற யோகா பீடம் அமைத்து அதில், ஆயுர்வேத மருத்துவமனை, பல்கலைக் கழகம், மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலை, அழகு சாதனத் தொழிற்சாலை எனப் பெரும் வணிகராக மாறியுள்ளார்.

இவருக்கும், இவரது கூட்டாளிகளுக்கும் 200 நிறுவனங்கள் உள்ளன. தனது யோகா வியாபாரத்தை நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்த ஆஸ்தா டி.வி.யையும் விலைக்கு வாங்கிவிட்டார்.

ஸ்காட்லாந்தில் 684  ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவை 2 மில்லியன் பவுண்ட்களுக்கு  ராம்தேவ் வாங்கி யுள்ளார். அந்தத் தீவில் ஒரு முழுமையான நவீன வசதிகளுடன் கூடிய ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாராட்டிரா, உத்தராகண்ட், குஜராத், அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஏக்கர் கணக்கில் நிலத்தை சட்ட விரோதமாக கைப்பற்றியுள்ளதாக கடந்த ஆட்சியில் புகார் கூறப்பட்டு அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன.

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாறிய பிறகு அந்தப் புகார்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன. அதுமட்டுமா? மகராட்டிராவில் சர்ச்சைக்குரிய 180 ஏக்கர் நிலம் பதஞ்சலி நிறுவனத்திற்கு மிகவும் ரசியமாக கைமாறியது, இது குறித்து கேள்வி எழுப்பிய பாஜக அமைச்சர் மீது விரைவிலேயே பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

அதில் அவர் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுடன்  பேசினார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு!  பிறகு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார். எப்படி? மோடி ஆட்சியின் நேர்மைப் பூஷணம்?

மாடு மற்றும் பல்வேறு உயிரினங்களின்  எலும்புகளைக் கலந்து மருந்து தயாரித்த ராம்தேவ் பாபாமீது நடவடிக்கை எடுக்கக் கூறி தகுந்த ஆதாரங்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் பிருந்தா காரத் 2006 இல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி யிடம் புகார் கூறினார்.

சுகாதார அமைச்சகம் திவ்ய யோக பார்மசி தயாரித்து விற்பனை செய்த மருந்துகளைப் பரிசோதித்தது. ஆயுஷ் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் நவீன ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு, ராம் தேவ் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் விலங்குகளின் பாகங்களும், மனித மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகளும் கலந் திருப்பது உறுதி செய்யப்பட்டது.

அப்போதைய அமைச்சர் டாக்டர் அன்புமணி அந்த ஆய்வுக் குறிப்புகளை உத்ராஞ்சல் மாநில அரசு வழியாக அங்குள்ள மாநில அரசு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். ராம் தேவின் நண்பர் என்.டி.திவாரி தலைமையிலான உத்ராஞ்சல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அகில இந்திய மருந்து சட்டங்களின்படி (ஞிக்ஷீuரீs & சிஷீsனீமீtவீநீ கிநீt, ஞிக்ஷீuரீs & விணீரீவீநீ ஸிமீனீமீபீவீமீs கிநீt) இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை பெறும் அளவிலான குற்றங்களைச் செய்தவர் இந்த ராம்தேவ். தனியார் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் போலியான மருந்துகளை விற்பனை செய்தவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது.

இவரது மருந்து விற்பனை மோசடிகளையும், விலங்கு களின் பாகங்கள் - மனித எலும்புக் கலப்படங்களையும் அம்பலப்படுத்தியதற்காக  பிருந்தாகாரத் அப்போது அனைத்து அரசியல் கட்சிகளாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் குரல் என்றும் குற்றம்சாட்டப்பட்டார். சங்பரிவார் கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அலுவலகமான ஏ.கே.ஜி. பவனை முற்றுகையிட்டு தாக்குதலையும் நடத்தியது.  காலித்தனத்தின் தர்பார்தான்!

நில அபகரிப்பு, கருப்புப் பணம் பதுக்கல், ஹவாலா பணம் கடத்தல், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமந்துகொண்டு திரியும் ராம்தேவிற்கு மத்திய அரசு குடியரசுத் தலை வருக்குத் தரும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்தை தந்துள்ளது. அவரது நிறுவனத்திற்கு மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையாம்! நடப்பது சாமியார் ராஜ்ஜியம்தானே!

இவரது பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் மத்திய மருந்து மற்றும் உணவு கண்காணிப்புத் துறையின் அனுமதியில் லாமல் வெளிவருகின்றன. இதைப் பல முறை பத்திரிகைகள் சுட்டிக்காட்டியும் இவர் மீது இவரது நிறுவனத்தின் மீதும் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை - எல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரம்.

சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்ற மோடி கென்யா நாட்டில் இருந்து  பருப்பு வகைகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்க அதானி புட் பிரைவேட் லிமிடேட் மற்றும் பதஞ்சலி நிறுவனத்துடன் பெரிய ஒப்பந்தம் செய்வதற்கு துணையாக இருந்தார் என்று நாளிதழ்களில் செய்திகள் குவிந்தன. என்ன பயன்? விளக்கெண்ணெய்க்குத்தான் கேடு!

2012 ஆம் ஆண்டு 120 கோடி ரூபாய் வருவாயாக இருந்த இவரது பதஞ்சலி நிறுவனம் தற்போது எந்த ஒரு பங்குதாரர் முதலீடுமின்றி சுமார் ரூ.12,000 கோடி லாபத்தை காட்டியுள்ளது. 20, 30 ஆண்டுகளாக பல்வேறு இரண்டாம் நிலை கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தும் 500 கோடிகளைக் கூட லாபம் காட்டாத நிலையில், ராம்தேவ் நிறுவனம் இவ்வகையில் பெரும் லாபத்தைக் குவித்திருப்பது எப்படி?

நாட்டில் உள்ள பல்வேறு சட்ட விரோத கருப்புப் பணம் ராம்தேவ் மூலமாக வெள்ளையாக மாற்றபட்டு வருகிறது என்றும், இவர் செய்யும் இந்தப் பொருளாதார கொள்ளையை மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது என்றால், மோடிதான் உத்தமப் பிரகாசராம்!

ராம்தேவ் பாபா அவரின் பதஞ்சலி நிறுவனத்தின் மீது நாடு முழுவதும் பல்வேறு குற்றச்சாட்டுகள்!  முக்கியமாக நில அபகரிப்பு, மற்றும் வரி ஏய்ப்பு போன்ற வழக்குகள் - இவரது சகோதரர் மீது கொலைக் குற்றச்சாட்டு, ஆட்கடத்தல் மற்றும் போலி கடவுச்சீட்டு தயாரித்தல் போன்ற கிரிமினல் வழக்குகள் உள்ளன. இருவருமே நிபந்தனை பிணையின் கீழ்தான் உள்ளனர்.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பிணையில் உள்ள நபர்களுக்கும், அவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும் மோடி தலைமையினால் ஆன மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வாரி கொட்டுகிறது.

பாஜக ஆளும், மாநிலங்கள் அனைத்திலும் யோகா வகுப்பு என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதற்கான பெரிய தொகைகள் ராம்தேவிற்குக் கொட்டிக் கொடுக்கப்படுகின்றன. அரியானா மனோகர்லால் கட்டார் தலைமையினாலான அரசு ராம்தேவிற்கு 420 ஏக்கர் நிலத்தை நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலவசமாக வழங்கியுள்ளது, அந்த நிலத்தில் யோகா ஆய்வுப் பல்கலைக்கழகம் கட்ட ராம்தேவிற்கு சிறப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பல்வேறு உணவுப் பொருட்கள் மத்திய அரசின் தரச்சான்றிதழ் பெறாமலும், உரிமம் பெறாமலும் சந்தையில் வந்துள்ளன என்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. ஆனால், இந்த வழக்குகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல், தொடர்ந்து பதஞ்சலி பொருட்கள்  ஜாம் ஜாம் என்று விற்பனை செய்யப்படுகின்றன.

சமீபத்தில் இவரது சோற்றுக்கற்றாழை சாறு என்ற பெயரில் வெளிவந்த ஒரு குளிர்பானத்தில் உடலுக்குத் தீங்கிழைக்கும் சில நுண்ணுயிர்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அதைத் தடை செய்ய உணவு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், இந்தத் தடையைப் பற்றி கவலைப்படாமல், மீண்டும் சந்தையில் தனது பொருட்களை விற்பனை செய்து குடிமக்களின் உயிரைக் குடித்துக் கொண்டுள்ளார்.

பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது என்று மத்திய - மாநில அரசுகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ராம்தேவ் ஆண் குழந்தை பிறக்க மூலிகை மருந்து என்று கூறி, விளம்பரம் செய்தார். இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் சரத்யாதவ் 2015 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

தொலைக்காட்சியில் இது தொடர்பாக ராம்தேவிடம் கேள்வி கேட்டபோது ஆயுர்வேத மருந்துகளின் அருமை தெரியாதவர்கள், ஆங்கில மருந்து நிறுவனங்களிடம் விலை போனவர்கள் இப்படி பேசுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்மீது குற்றம் சாட்டினார் - எவ்வளவுக் கிலோ கொழுப்பைப் பார்த்தீர்களா?

சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆச்சார் யாவின் டிகிரி, பாஸ்போர்ட் எல்லாமே போர்ஜரி செய்யப்பட்டவை என அம்பலமாகி உள்ளன. அண்மையில் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலை ஹருன் ஆய்வு நிறு வனம் வெளியிட்டிருந்தது.

இதில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணா வும் இடம் பிடித்திருந்தார்.

அத்துடன் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களான பஜாஜ் ஆட்டோ நிறுவனத் தலைவர் ராகுல் பஜாஜ், மாரிகோ தலைவர் ஹரிஷ் மரிவாலா, பிரமல் என்டர் பிரைசஸ் நிறுவனத்தின் அஜய் பிரமல் ஆகியோரை விட இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் ஆச்சார்யா பால் கிருஷ்ணா.

இவரின் சொத்து மதிப்பு ரூ.25,600 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா 26 ஆம் இடத்தில் இருக்கிறார். 2007 ஆம் ஆண்டு சிறிய மருந்தகமாக தொடங்கப்பட்டு தற்போது முன்னணி நிறுவனமாக பதஞ்சலி தாண்டிக் குதித்துள்ளது. பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆச் சார்யா, ஆயுர்வேதத்தில் தலைசிறந்த வல்லுநர்; சஞ்சீவி மூலிகையை மீண்டும் கண்டுபிடித்தவர் என்றெல்லாம் பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகா பீட  ஆசிரமம் அள்ளி விடுகிறது.

ஆனால் உண்மையில் சமஸ்கிருதத்தில் படித்ததாக ஆச்சார்யா காட்டும் டிகிரி சான்றிதழ் போலியே! கடந்த 2012 ஆம் ஆண்டே போலி ஆவணங்களைக் கொடுத்த தாக ஆச்சார்யா மீது புகார் இருக்கிறது.

இது தொடர்பாக விசாரித்த சிபிஅய், ஆச்சார்யா கொடுத்த போலியான பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் அடிப்படையில்தான் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் ஆச்சார்யா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஒன்றும் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்ததும் கைவிடப்பட்டது என்றும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு தெரிவித்துள்ளது.

நடப்பது ‘தாதா’க்கள் ராஜ்ஜியம்! சாமியார்களுக்குமுன் அதுவும் ஒரு பூஜ்ஜியமே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner