இட ஒதுக்கீட்டை பாஜக கும்பல் ஏன் எதிர்க்கிறது?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘இட ஒதுக்கீடு’ இல்லாத ‘தேசத்தின்’ பெரும் பதவி கள் ‘அனைத்தும்’ உயர்ஜாதி ‘பார்ப்பனர்கள்’ அபகரிப்பு...!

இதோ “தேசத் துரோகிகள்..’’

பாரத மக்களின் விரோதிகள்..! யாரென்று பாரீர்...!

“ஆளுநர்களில் 30 பேர் அதில் “பார்ப்பனர்கள் 13 பேர்’’

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர் அதில் பார்ப் பனர்கள் 9 பேர்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர் அதில் பார்ப் பனர்கள் 166 பேர்..

வெளிநாட்டுத் தூதர்கள் 140 பேர் அதில் பார்ப் பனர்கள் 58 பேர்

“பல்கலைகழகத் துணைவேந்தர்கள் 98 பேர் அதில் பார்ப்பனர்கள் 50 பேர்

மாவட்ட நீதிபதிகள் 438 பேர் அதில் பார்ப்பனர்கள் 250 பேர்

கலெக்டர் அய்..ஏ.எஸ். அதிகாரிகள் 3,300 பேர் அதில் பார்ப்பனர்கள் 2,376 பேர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர் அதில் பார்ப்பனர்கள் 190 பேர்

மாநிலங்களவை உறுப்பினர்கள் 244 பேர் அதில் பார்ப்பனர்கள் 89 பேர்

-குஷ்வந்த் சிங் (‘ஙிக்ஷீணீலீனீவீஸீ றிஷீஷ்மீக்ஷீ’, தலைப்பில் ‘சண்டே’ இதழ், 23-29 டிசம்பர் 1990)

மொத்த மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதம் மட்டுமே இருக்கும் Ôஅவாள்கள்Õ இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர்?  இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா?

மேற்கண்ட பதவிகள் எதுவும் திறமைகள் மட்டும் இருந்தால் கிடைக்காது எல்லாமே நியமனப் பதவிகள்....!

எல்லா “அய்.ஏ.எஸ்.’’ அதிகாரியும் “கலெக்டர்’’ ஆகமுடியாது.

எல்லா வக்கீலும் ‘நீதிபதி’ ஆகமுடியாது.

எல்லா பேராசிரியரும் ‘துணைவேந்தர்’ ஆக முடியாது.

எல்லா அரசியல்வாதியும் ‘ஆளுநர்’ ஆகமுடியாது...

மேலே உள்ள எந்தப் பதவிக்கும் இட ஒதுக்கீடு  கிடையாது.

அதனால் அவர்கள் அனைவரும் திறமையால் மட்டுமே பதவிக்கு வந்தார்கள் என்று கூறினால் அது நம்முடைய அறியாமையின் வெளிப்பாடு.

டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், கம்யூ னிஸ்ட்டுகள் மட்டும் இல்லையென்றால்... பிரா மணர்கள்தவிர வேறு எவரும் இந்தியாவில் உயர் கல்வியே கற்றிருக்க முடியாது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடும் முழுமை பெறவில்லை.

அவை வெறும் சட்டங்களாக மட்டும்தான் இருக்கின்றது. இதனை செய்தியாக்க வேண்டிய எல்லா ஊடகங்களிலும் அவாள் ஆதிக்கம்.

செயல்படுத்தவேண்டிய அரசின் உயர் மட்டத்திலும் அவாள் ஆதிக்கம்.

பார்ப்பனியத்தை தூக்கி  சுமக்கும் நால்வர்ண ஜாதியை போதிக்கும் பகவத் கீதையை பள்ளிப் பாடமாக மாற்றவேண்டும் என்று இணயதளத்தில் கணக்கெடுப்பு நடக்கிறது...!

ஆனால்..?

உலக பொதுமறையாக போற்றப்படும் திருக்குறள் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை.

ஒடுக்கப்பட்டவர்களின் அறிவுசார் சமூகம் ஒருங்கிணைய வேண்டும். சமூக முன்னேற்றத்திற்காக... அனைவரின் முன்னேற்றத்திற்காக வழிகாட்ட முன் வர வேண்டும்... இத்தகைய உயர்ஜாதி சதியை எதிர்த்து போராட முன்வர வேண்டும்.

- கல்லை அன்புமணி வாட்ஸ் அப் பதிவிலிருந்து 94436 67521

இந்த நிலையில் இப்பொழுது கொஞ்சம் மாற்றம் வருவதால்தான் இட ஒதுக்கீட்டை எதிர்க் கின்றனர் பார்ப்பனர்கள்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner