மோடி அரசின் மூன்றாண்டு கால ஆட்சி! வேதனையா? சாதனையா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

1.கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜம்மு-காஷ்மீர் நிலை மோசமாகியுள்ளது,

2. தீவிரவாதச் செயல், பாலியல் மோசடி, போன்ற குற்றச்சாட்டின் கீழ் பாஜக முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுகின்றனர்.

3. பாஜக அல்லாத மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.

4. மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட மோடி அரசில் இதுவரை ஒரு அமைச்சர் கூட அதி காரப்பூர்வமான துறை ரீதியான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திடவில்லை, எல்லாம் மோடி தான் அறிவிப்பார்.

5. ராணுவத் தளவாடங்களில் அந்நிய நிறு வனங்களின் நுழைவு என்பது வளர்ச்சியடையாத ஆப்பிரிக்கா நாடுகளில் தான் நடக்கும். ஆனால் இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ராணுவமும் தனியார் மயம், ராணுவ வீரர்கள் யமுனையை சீரழித்த சிறீ சிறீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதை எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்திருந்தனர்

6. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதலான பதான்கோட் விமானப்படை தளத் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியது; மத்தியப் பிரதேச பாஜகவின் மிகவும் முக்கியமான தலைவர்களுள் ஒருவரான துருவ் சின்கா என்பவர் கைதானார், அவ ருடன் மபி பாஜகவின் பல முக்கிய பிரமுகர்களும் கைதானார்கள்.

7. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் விவ சாயிகளின் தற்கொலை 8 மடங்கு அதிகரித்துள்ளது, 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஒரு நாளைக்கு 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும்,  இதை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் என்றும் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிக்கை வாசித்தார்.

8. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஆந்திரா வரை இருந்து வந்த விவசாயிகள் தற்கொலை, இம்மூன்றாண்டுகால ஆட்சியில் வளமான பகுதி என்றழைக்கப்படும் பஞ்சாப் மாநிலத்தில் கூட துவங்கிவிட்டது, 2016ஆம் ஆண்டு கடன் தொல் லையால் 13 பஞ்சாபிய விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

9. உலகின் அனைத்து நாடுகளும் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை இயற்றி வரும் போது இந்தியாவில் இறக்குமதிக்கான கதவுகளை திறந்துவிட்டு இந்தியாவின் உற்பத்திப்பொருட்களை தேக்கநிலையில் வைத்து தொழிற்சாலைகளின் கதவுகளை மூடவைத்தார்.

10.  பெண்களுக்கு எதிராக அதிக அளவு வன்முறைகள் நிகழ்ந்ததும் மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைத்துளிகளில் ஒன்றாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner