இந்துத்துவாவின் ‘‘ஏகம்’’ என்ற கோட்பாடு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலி.பூங்குன்றன்

பி.ஜே.பி. - சங் பரிவார் கையில் எடுத்துக் கொண்டி ருக்கும் ‘மாடு’ என்பது  வெறும் இறைச்சி பிரச்சினை மட்டுமல்ல; முதலில் பசுவில் ஆரம்பித்தவர்கள் - அது இந்துக்களின் புனிதத் தன்மை, தெய்வத்தன்மை கொண்டது என்று சொன்னவர்கள், இப்பொழுது எருமை, காளை, ஒட்டகத்தையும் இணைத்து - இவைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்கிற கட்டத்திற்கு நகர்ந்துள் ளார்கள்.

உலகத்தில் எந்த நாட்டிலும் கேள்விப்பட்டிராத - உலகத்தோடு ஒட்ட ஒழுகாத - மற்ற நாட்டுக்காரர்கள் மத்தியில் நகைப்பிற்கிடமான முடிவாகும் இது!

பசு - புனிதமானது! இந்துக்கள் தெய்வமாகக் கருதி வழி படத்தக்கது என்று சொல்லி வந்தவர்கள் இவர்கள் பசுவதைத் தடுப்பு என்ற முழக்கத்தை ஜனசங்கமாக இருந்த காலந்தொட்டு அரசியல்படுத்தி வந்தனர்.

அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த பச்சைத் தமிழர் காமராசரை - பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் பட்டப்பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் - அவர் தங்கியிருந்த பங்களாவுக்குத் தீ வைத்து, அவரை உயிரோடு கொளுத்திட (7.11.1966) முனைந்ததை இந்த நேரத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். மயிரிழையில் உயிர் தப்பினார். அந்தக் கொலை முயற்சியில் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், நிர்வாண சாமியார்கள், பூரி சங்கராச் சாரியார் போன்றவர்கள் எல்லாம் ஈடுபட்டிருந்தனர்.

தந்தை பெரியார் பொங்கி எழுந்தார்; திராவிடர் கழகம் நாடெங்கும் கண்டன ஊர்வலங்களை நடத்தியது. ‘‘கத் தியை எடுப்போம் -

காவல் புரிவோம்’’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து நாடெங்கும் சமதர்ம மாநாடுகளையும் நடத்தியது.

காமராசர் கொலை முயற்சி, அதன் பின்னணி, நவம்பர் 7 (1966) அன்று நடைபெற்ற பயங்கரமான வன்முறை வெறி யாட்டங்கள் - ஏடுகளில் வெளிவந்த செய்திகள் அனைத் தையும் ஒன்று திரட்டி ‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்’’ என்ற நூலை அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியாரின் கட்டளைப்படி தொகுத்தார்.

ஆயிரக்கணக்கில் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப் பட்டது. அந்த நூல் மீண்டும் மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டு, விற்பனையில் இருக்கிறது.

மாட்டுக்காக மனிதனைக் கொல்லும் கலாச்சாரத்துக்குச் சொந்தக்காரர்கள் இந்தப் பாசிச இந்துத்து வாவாதிகள்.

பசு - இந்துக்களின் புனிதத் தெய்வம், அதனைக் கொல் லலாமா? என்ற ஒரு கருத்தை முன்வைத்து, அதனை எதிர்ப்பவர்களை எல்லாம் எதிர்ப்பக்கத்தில் தள்ளி, இவர்கள் மட்டும் தான் இந்துத்துவாவைக் காப்பாற்றக் கூடியவர்கள் என்னும் கருத்தை உருவாக்குவது - இதன் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் பார்ப்பனத்தனமே.

பசுதான் புனிதமா? ஏன் எருமை என்னாயிற்று? அது கருப்பாக இருக்கிறது என்கிற வருணாசிரமக் கண் ணோட்டமா என்ற பகுத்தறிவு வினாவை நாம் எழுப்பிய நிலையில், எருமையை இணைத்துக் கொண்டனர்; காளை சிவனின் ரிஷப வாகனம் - அதனைக் கொல்லலாமா என்று வினா எழுப்பிய நிலையில், அதனையும் கொல்லாமைப் பட்டியலில் இணைத்துக் கொண்டனர்.

இவ்வளவும் போதுமா? சிறுபான்மை மக்களை - இஸ் லாமியர்களைச் சீண்டாவிட்டால் அவர்களின் பிறப்புக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? எனவே, ஒட்டகத்தையும் கொல்லாமைப் பட்டியலில் கொண்டு வைத்துவிட்டனர்.

இதனை ஒட்டுமொத்தமாக இணைத்துப் பார்த்தால் ஒரு முக்கிய புள்ளியில் நமது சிந்தனை மய்யமிட்டே தீரும்.

இறைச்சி உணவு - புலால் உணவு என்பதை முற்றி லும் தடை செய்யும் கலாச்சாரம் இதற்குள் மூர்க்கத்தனமாக இருக்கிறது என்பதை கண்டிப்பாகக் கவனித்தாக வேண்டும் (இன்னும் ஆடும், கோழியும், மீனும் தானே எஞ்சியிருக் கிறது) பெரும்பாலும் சாப்பிடும் மாட்டிறைச்சியில் கைவைத்தால் உணவுப் பிரச்சி னையில் மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தும்.

எல்லாவற்றிலும் ‘‘ஏகம்’’ என்கிற கலாச்சாரத்தை வலியுறுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்.

மாநிலங்களே இருக்கக்கூடாது - இந்தியா ஒரே நாடு, (பாரத நாடு); ஒரே மொழி (அது சமஸ்கிருதம்); ஒரே கலாச்சாரம் (அது இந்துத்துவா கலாச்சாரம்) என்பது தானே அவர்களின் கோட்பாடு!

இதனைத் திட்டமிட்டே ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றனர். தேசிய புதிய கல்வி (அதில் இந்தி, சமஸ்கிருதத்துக்கு முக்கிய இடம்), மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு இந்தியா முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு (நீட்), நதிநீர்ப் பிரச்சினைக்கு தனித் தனி வாரியம் தேவையில்லை இந்தியா முழு மைக்கும் ஒரே மேம்பாட்டு வாரியம், இந்தியா முழு வதும் ஒரே வரி முறை (ஜி.எஸ்.டி.), திட்டக்குழு ஒழிப்பு, அய்ந் தாண்டுத் திட்டம் ஒழிப்பு என்பதையெல் லாம் ஒவ்வொன்றாக எண்ணி இணைத்துப் பாருங்கள் - அதற்குள் அவர்களின் ‘‘ஏகம்’’ கோட்பாடு - ஒரே இந்தியா - ஒரே கலாச் சாரம் - ஒரே மொழி கோட்பாட் டுக்கான திட்டமிட்ட ஏற்பாடுகள், செயல்பாடுகள் அவை என்பது பளிச்சென்று புரியும்.

இவர்கள் இந்தத் திசையில் சூழ்ச்சி யாகச் சன்னமாகச் செய்யச் செய்ய அதன் எதிர்விளைவு இன்னொரு பக்கத்தில் வெடித்துக் கிளம்புவதும் தவிர்க்க முடியாத தாகும்.

திராவிட நாடு கோரிக்கையை தமிழ் நாடுகூட கையில் எடுக்கவில்லை; கேரளா வில் அந்தக் குரல் வெடித்துக் கிளம்பி விட்டதே! (சமூக வலைதளங்களில் போடு போடு என்று போடுகிறதே!).

கேரளா, கருநாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங் கானா, மேற்கு வங்கம் எல்லாம் பி.ஜே.பி.யின் மாட்டுக் கறி தடையை எதிர்த்துப் பொங்கி எழுந்தி ருப்பது எதைக் காட்டுகிறது? மேற்கு வங்கம் என்று சொல் லும்பொழுது ஒரு காலத்தில் அங்கும் திராவிடர்கள் வாழ்ந்தார்கள், நாகர்கள் என்பவர்களும் திராவிடர்களே என்பார்- அண்ணல் அம்பேத்கர்.

திராவிட நாட்டைக் கைவிட்டபோது அறிஞர் அண்ணா ஒன்றைத் தொலை நோக்காகவே சொன்னார்;

‘‘நாட்டுப் பிரிவினையை நாங்கள் கைவிட்டிருக்கலாம்; ஆனால், அதற் கான காரணம் இருக்கவே செய்கிறது’’ என்றாரே - அதுதான் எவ்வளவுப் பெரிய துல்லியமான கணிப்பு!

திராவிட நாடு குரல் கேரளாவிலிருந்து அல்லவா கிளர்ந்திருக்கிறது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner