பவுத்தம் மலரட்டும் - பார்ப்பனீயம் மாளட்டும்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. ஆட்சியில் தலித்களுக்கு எதிராக அராஜகம் தொடர்வதால் உ.பி.யில் சுமார் ஒரு லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளனர்.

உ.பி.யில் ஒரு லட்சம் தலித் மக்களை ஒரே சமயத்தில் புத்த மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நிகழ்வு வரும் 14 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முசாபர்நகர் மாவட்டதில் சஹ ரான்பூர் அருகே உள்ள சாபிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் தங்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அராஜக போக்கிற்கு முடிவு கட்டும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஜெய் சிந்து சங் என்ற புத்த மத அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. புத்த மதத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சமூக வலை தளம் உள்ளிட்ட பல வகைகளில் அந்த அமைப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. வரும் 14 ஆம் தேதி நடத்தும் நிகழ்வில் ஒரு லட்சம் பேரை மதமாற்ற திட்டமிட்டு அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் சிங் போத் கூறுகையில், ‘‘அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன’’ என்றார்.

டியோ பேண்ட் பிம் ஆர்மி தலைவர் தீபக்குமார் கூறுகையில், ‘‘இந்த நிகழ்வில் புத்த மதத்திற்கு மாற தலித்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கிறது. ஏற்கெனவே முசாபர்நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்த நிகழ்வு தொடர்பான துண்டறிக்கைகள் மாவட்டம் முழுவதும் பரவலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவுரி சங்கர் பிரியதர்சி கூறுகையில், ‘‘தலித்கள் மதமாற்றம் தொடர் பான துண்டு பிரசுரங்களை நான் படித்துப் பார்த்தேன். ஆனால் இது தொடர்பாக யாரும் எங்களை அணுக வில்லை. எனினும் மத ரீதியிலான நிகழ்வுகளுக்கு தடை உத்தரவு அமலில் உள்ளது. அதனால் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதி வழங்கப்படமாட்டாது’’ என்றார்.

புரன் சிங் என்பவர் கூறுகையில், ‘‘மத்தியிலும், மாநிலத்திலும் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தலித்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் இந்த நிலை தான் உள்ளது. சமீபகாலமாக தாக்குதலும், அராஜகமும் அதிகரித்துள்ளன. காவல்துறையினர், தலித்கள்மீது தான் நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வரும் 14 ஆம் தேதி ராத்தெடி கிராமத்தில் ஒரு லட்சம் தலித்கள் கூடி புத்த மதத்தை தழுவ முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

அந்தத் துண்டறிக்கையில் தீபக்குமார் உள்ளிட்ட மூன்று பேர் கைப்பேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது குறித்து தீபக்குமார் கூறுகையில், ‘‘துண்டறிக்கைகள் விநியோகம் செய்தது முதல் எனது கைப்பேசிக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த கொண்டே இருக் கின்றன. எனது கைப்பேசி ஓய்வின்றி ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. பஞ்சாப் முதல் தமிழ் நாட்டில் இருந்தும் அழைப்புகள் வருகின்றன. தென் னிந்தியாவைச் சேர்ந்த ஒரு தலித் குழுவினர் 100 பேருடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்’’ என்றார். முசாபர்நகர் மாவட்டம் சையோனி ஆற்றங்கரையில் உள்ள சுக்ரத்தான் முகாமில்  துண்டறிக்கைகள் விநியோகம் செய்யும் நிகழ்வு நடந் துள்ளது. மேலும், அங்கு சகாரன்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கவேண்டும் என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

1956 அக்டோபர் 14 அன்று ஆறு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நாக்பூரில் அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு பவுத்தம் தழுவினார்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய எண்ணிக்கையில் இந்து மதத்துக்கு முழுக்குப் போடுவது (ஒரு லட்சம் பேர்) இப்பொழுதுதான் நடக்கிறது.

அதுவும் பி.ஜே.பி. உத்தரப்பிரதேசத் தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் இது நடக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

இந்துக் கலாச்சாரம்பற்றி இரைச்சல் போடுகிறார்கள் - இந்தியா என்பது இந்து நாடு என்கிறார்கள். ஏக இந்தியா என்று ஏ அப்பா - எப்படியெல்லாம் பேசுகிறார்கள்!

இந்துக்களே ஒன்று சேருங்கள்! நாம் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகிறோம். முசுலிம்களும், கிறித்தவர் களும் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் என்று பீதி யைக் கிளப்புகின்றனர்.

சிறுபான்மையினர் பக்கம் ‘சூ’ காட் டும் இந்தக் குள்ளநரிகள் இந்துக்கள் என்று சொல்லப்படுகிற பெரும் பான்மை மக்களான தாழ்த்தப்பட்டவர் களை எப்படி நடத்துகிறார்கள்? பிற்படுத்தப்பட்டவர்கள்பற்றி இவர்களின் மதிப்பீடு என்ன?

பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்ற இழி பட்டங்கள்தானே! உத்தரப்பிர தேசத்தில் தன்னைச் சந்திக்க வரும் தாழ்த்தப்பட்டவர்கள் சோப்புப் போட்டுக் குளித்து விட்டு வரவேண்டும் என்று ஒரு முதலமைச்சர் சொல்லு கிறார். சோப்புகள் அரசு சார்பிலும் வழங்கப்படுகின்றன என்றால், அதன் பொருள் என்ன?

பாபா சாகேப் அண்ணல் அம்பேத் கர் விழாவை நடத்தக் கூடாது என்று கூறி விழா மேடையைத் தகர்த்தவர்கள் யார்? தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு களைத் தீக்கிரையாக்கியவர்கள் யார்?

பி.ஜே.பி.தானே - சங் பரிவார்களைச் சேர்ந்தவர்கள்தானே! இந்து மதத்தில் உயர்ந்த ஜாதியினர் - என்ற நிலையில் உள்ளவர்கள் அதே இந்து மதத் தினைச்சேர்ந்த தாழ்த்தப்பட்டவர் களை ஒடுக்குவது, அவர்களின் வீடு களைக் கொளுத்துவது எதைக் காட்டுகிறது?

இந்த நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் இந்து மதத்தில் இருந்தாகவேண்டும்? என்னை வேசி மகன் என்று கூறும் இந்து மதத்தில் நான் ஏன் இருந்து தொலையவேண்டும் என்று சூத்திர மக்கள் நெஞ்சில் நெருப்புக் கனல் எரிய ஆரம்பித்து விட்டது.

இந்துவாகிய தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரி இந்த உயர்ஜாதி இந்துதானே தவிர - முசுலிம் அல்ல - கிறித்தவன் அல்ல.

ஆனால், இந்துத்துவாவாதிகள் இதை எப்படி திசை திருப்புகிறார்கள்?

முசுலிம்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது- கிறித்தவர்கள் எண்ணிக்கை யில் அதிகரித்து வருகிறார்கள் என்று கூறி அவர்கள் பக்கம் நம்மை ஏவி விடுகிறார்கள். இது அசல் திசை திருப்பும் எத்து வேலை!

ஒடுக்கப்பட்ட மக்கள் ‘எகிறிப் பாயவேண்டியது’ - இந்த இந்து உயர்ஜாதி கூட்டத்தை நோக்கியே தவிர -  அதன் தத்துவத்தை நோக்கி தானே தவிர - சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை நோக்கியல்ல!

நம்மை இழிவுபடுத்துபவர்கள் நம்மை சகோதரர்களாகப் பாவிக்கும் சிறுபான்மையினர்மீது ஏவிவிடுகிறார் கள். ஒடுக்கப்பட்ட மக்களே உஷார்! உஷார்!!

உத்தரப்பிரதேசம் வழிகாட்டுகிறது- பார்ப்பனீய நோய்க்கு மாமருந்து பவுத்தம்தான் - ஆம்! அன்று ஆரிய வருணாசிரம வைதீக மார்க்கத்தை எதிர்த்து எழுந்த யுகத் தலைவன்தான் கவுதமப் புத்தன்.

இடையில் சூழ்ச்சியால், வஞ்சகத் தால், பவுத்தத்திற்குச் சவக்குழி வெட் டியது இந்த சாணக்கியப் பார்ப்பனக் கூட்டம். இப்பொழுது அரசியல் அதி காரத்தைப் பற்றிக்கொண்டு மறுபடியும் மனுதர்மத்தைக் கோலோச்ச வைக்கக் குடுமியை அவிழ்த்துக் கொண்டு நிர்வாண ஆட்டம் போடுகிறது.

எனவே, மீண்டும் புத்தர் தேவைப் படுகிறார். புத்த மார்க்கம் தேவைப் படுகிறது.

உ.பி. வழிகாட்டுகிறது - ஒடுக்கப் பட்ட மக்களே புத்த மார்க்கத்தைப் புதுப்பிக்க இதுவே தருணம்! தருணம்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner