இவர்தான் ‘பாரத ரத்னா’ வாஜ்பேயி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு  27ஆம் தேதி ஒரு முக்கிய சம்பவம் ஆக்ராவில் நடந்தது, சுதந்திரப் போராட்டவரலாற்றில் முதல் முதலாக ஒரு அரசு கட்டடத்தில் இந்திய மூவண்ணக் கொடி பறந்த அந்த நாள், இன்றைய அரசால் வலுக்கட்டாய மாக மறக்கடிக்கப்பட்டும் வரலாற்றில் இருந்து அந்த சம்பவத்தை அழிக்கவும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

ஆக்ராவில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பத்தேஷ்வர் கிராமத்தில்  ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அந்தக் கூட்டத்திற்குத்  தலைமை யேற்ற லீலாதர் என்ற 22 வயது இளைஞர் காந்தியாரின் போராட்ட அறிவிப்பை வாசித்துக்கொண்டிருந்தார்.

தனது வீர உரை முடிந்த உடன் அந்தக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு தொலை வில் இருந்த ஆங்கிலேய அரசு கட்டடத் தின் உச்சியில் ஏறி இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். சுற்றி இருந்த மக்கள் அனைவரும் தேசவிடுதலைப் பாடலைப் பாடினர்.

இந்த நிகழ்வு குறித்த தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, பெண்கள் சிறுவர்கள் உள்பட 200 பேரைக் கைதுசெய்கிறது. கொடி ஏற்றிய லீலாதரன் மேலும் பல இடங்களில் கொடி யேற்றிவிட்டு சிறைக்குச் செல்வேன் என்று சூளுரைத்துவிட்டு ஆக்ராவை நோக்கிச் சென்றார். அங்கே ஒரு கோவிலில் தஞ்சம் கேட்டபோது அந்த கோவில் பூசாரியால் காட்டிக்கொடுக்கப்படுகிறார்.

கோவில் பூசாரியான பார்ப்பனரே தன்னைக் காட்டிக்கொடுக்கத் துணிந்து விட்டார் என்பதை அறிந்த பிறகு கோவிலி லிருந்து வெளியேறி ஆக்ரா தெருவில் மூவண்ணக்கொடியை எல்லா இடங்களி லும் ஏற்றுங்கள் என்று முழங்கிக் கொண்டே இருந்தபோது காவல்துறை அவரை கைதுசெய்கிறது.

கைதுசெய்யபட்ட லீலாதரன் பிரிட்டீஷ் அரசாங்கதிற்குத் துரோகமிழைக்கும் வகை யில் நடந்துகொண்டார் என்ற கடுமையான குற்றச்சாட்டை சுமத்தி அவருக்குத் தண் டனை கொடுக்க சாட்சிகளை வரவழைத்தது, ஆனால் சுமார் 3000 பேர் கலந்துகொண்ட மூவண்ணக்கொடி ஏற்றப்பட்ட நிகழ்வில் கைதுசெய்யப்பட்ட 200 பேரில் 198 பேர் ஆங்கிலேய நீதிமன்றத்தில் லீலாதரனுக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வரவில்லை.

சுமார் அய்ந்து நாள் ஆங்கிலேய அர சாங்கம் எவ்வளவோ முயன்றும் ஒருவரும் சாட்சி சொல்ல வராத நிலையில் இரண்டு சகோதரர்கள் தாங்களாகவே முன்வந்து சாட்சி சொல்கிறார்கள்.

சாட்சி பெயர் விவரம்

தந்தை பெயர் : கிருஷ்ண பிகாரி         வாஜ்பாய்

எனது ஜாதி : பிராமணன் வயது  20

தொழில்  மாணவர் குவாலியர் கல்லூரி

முகவரி  பத்தேஸ்வர், பி.எஸ். பாஹ்,

ஆக்ரா மாவட்டம்.

அதில் கிருஷ்ண பிகாரி வாஜ்பாயின் மகன் இவ்வாறு வாக்குமூலம் தருகிறார், ஆகஸ்டு 27, 1942 அன்றைக்கு பத்தேஸ்வர் சந்தையில் லீலாதரும், மாகனும் மக்களி டையே உரையாற்றினர். அவர்கள் பேச்சால் மக்களை உணர்வுப் பூர்வாக வன்முறையில் ஈடுபட தூண்டுவது போல் இருந்தது. மேலும் மக்களை அரச சட்டங்களை மீறுமாறு தூண்டினர்.

அந்தக்கூட்டம் முடிந்த பிறகு பலர் வன அலுவலகத்திற்கு கூட்டமாகச் சென்றனர். நானும் எனது சகோதரனும் அந்தக் கூட்டத் தைத் தொடர்ந்தோம். கூட்டம் பத்தேஸ்வர் வன அலுவலகத்தை அடைந்தது. நானும் எனது சகோதரனும்  அந்தக் கூட்டத்தை விட்டு விலகி மாய்புராவிற்கு சென்றோம்.

மேலே குறிப்பிட்ட நபர்கள் அந்த ஆட்டு மந்தைக் கூட்டத்தை வழிநடத்தினர். கூட்டம் பிச்கோலியை நோக்கி நகர்ந்தது. பத்து அல்லது பன்னிரண்டு பேர் வன அலு வலகத்தில் இருந்தனர்.  நான் கட்டடத்தை இடிக்க எந்த உதவியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து எங்கள் வீடுகளுக்கு நாங்கள் திரும்பி விட்டோம் என்பதுதான் அந்த வாக்குமூலம்.

வாக்குமூலத்தைப் பதிவு செய்து அதில் கிருஷ்ணபிகாரியின் மகனிடம் ஒப்பம் பெற்றுக்கொள்ளும் மாஜிஸ்டிரேட், அதன் கீழ் தனது குறிப்பையும் பதிவு செய்கிறார். அவ்வாறு வாக்குமூல பத்திரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாஜிஸ்டிரேட்டின் குறிப்பின் தமிழாக்கம்.

நான் இவர்களிடம் வாக்குமூலமும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை யென்பதையும், கொடுக்கப்படும் வாக்கு மூலம் எதுவும் அவருக்கே எதிராக கூட பயன்படுத்தப்படலாம் என்பதையும் தெரி வித்து விட்டேன். இந்த வாக்குமூலம் அவரால் சொந்த முறையில் அளிக்கப்பட்டது ஆகும். எனது முன்னிலையில் வழங்கப் பட்ட இந்த வாக்குமூலத்தை அவரிடம் வாசித்துக் காட்டி அதில் உள்ளவை சரியானது தான் என்று அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

மேலே குறிப்பிட்டதைப் போல் விடு தலைப் போராட்ட இயக்கத்தைக் காட்டிக் கொடுத்த கிருஷ்ண பிகாரியின் மகன் அடல் பிஹாரி வாஜ்பேயிதான் பின்னாளில் இந்திய அரசின் பிரதமராக அமர்ந்தார். இந்திய சுதந்திரவரலாற்றில் முதல் முறையாக மூவண்ணக்கொடி ஏற்றிய அன் றைக்கு அவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட பல ஆண்டுகள் கொடூர சிறைதண்டனை பெற்ற விடுதலை வீரனான லீலாதரனை பற்றி யார் பேசுகிறார்கள்? விடுதலை வீரன் வெளி உலகத்துக்கு தெரியவில்லை; காட் டிக்கொடுத்தவரோ கம்பீரமான மனிதனாக, இந்நாட்டின் பிரதமராக போற்றப்படுகிறார்.   காட்டிக்கொடுப்பது என்பது காவிகளுக்குக் கை வந்த கலையே.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner