ராம்நாத் கோவிந்த் யார்? யார்??

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் சிறப்பு உள் ஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ராம்நாத்கோவிந்த் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் தலித்துகளின் வெறுப்பு களுக்கு ஆளான பாஜக 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலித்துகளின் வாக்குகளை பெற ராம்நாத் கோவிந்தை தனது தரப்பு வேட்பாளராக அறிவித்துள்ளது, உண்மையில் ராம்நாத் கோவிந்த் தலித் என்பதை விட இந்துத்துவ வாதி என்பதே அவரை பாஜக தேர்ந்தெடுக்க முக்கிய காரணம், மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர செயல் பாட்டாளர்! இக்காரணங்களுக்காகவே கடைசி நேரத்தில் மோடி தனிப்பட்ட முறையில் மோகன் பாகவத்தின் ஆலோ சனையுடன் இவரை தேர்ந்தெடுத்தார்.

பாஜகவில் தலித் இஸ்லாமியர் என்ற போர்வையில் ஷநவாஸ் உசைன், முக்தார் நக்வி, உதித் ராஜ், போன்றோர் உள்ளனர். 2014 ஆம் ஆண்டுவரை தலித் அரசியலில் மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருந்த உதித்ராஜ் 2014 இல் பாஜக சார்பில் போட்டியிட்டு தெற்கு டில்லி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும், முழுமையான ஆர்.எஸ்.எஸ் தொண்டனாகவே அவதாரம் எடுத்தார். 2013 வரை மகிஸாசுரன் ஜெயந் தியைக் கொண்டாடிய உதித்ராஜ் 2014 முதல் அனுமன் ஜெயந்திக்கு வாழ்த்து அனுப்பு கிறார்.

ஆனால் இவர்களை விட தீவிர இந்துத்துவ சிந்தனை கொண்ட ராம்நாத் கோவிந்த் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கொள்கை உடையவர். ஆர்.எஸ்.எஸின் முக்கிய கொள்கையே இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்துசெய்யவேண்டும் என் பதுதான். அந்த அமைப்பின் கொள்கையை வழிமொழியும் வகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான மனப்பான்மை யுடைவர். இதற்கு ஓர் சம்பவமே சான்றாக உள்ளது.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடைபெற்றது, அப்போது ராம்நாத் கோவிந்த் பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை அன்றைய பாஜக உறுப் பினர் கோபிநாத் முண்டே வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்டு எதிர்ப்பு தெரி வித்தவர்தான் இந்த ராம்நாத் கோவிந்த். அதன் பிறகு, அய்.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும் போது நாங்கள் இடஒதுக்கீடே தேவையில்லை என்கிறோம். பெண்களுக்கான இட ஒதுக் கீடு அதில் உள் ஒதுக்கீடு என்ற கோரிக் கையை முற்றிலுமாக நிராகரிக்கின்றோம். இவர்களது கோரிக்கைகளை ஏற்கமுடியாது என்று அடித்துக் கூறினார். அப்போது கோபிநாத் முண்டே, ராம்நாத்கோவிந்த் இருவரும் ஒரே கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த நாள் இந்திய வரலாற்றில் இடம் பெறக்கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது, முதல் முறையாக பிருந்தாகாரத், நஜ்மா ஹெப்துல்லா, ரேணுகா சவுதிரி போன்ற அனைத்துக் கட்சி பெண் உறுப்பினர்களும் ஒரே குரலில் பெண்களுக் கான இடஒதுக்கீட்டை ஆதரித்து ஒரே தளத்தில் நின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும் பெண்களுக்கான உள் ஒதுக் கீட்டை பெரிய கட்சிகளான  அய்க்கிய ஜனதாதளம், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன என்பது நினைவூட்டத் தக்கது.

இந்துத்துவாவாதிகளுக்கே உரித்தான முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மீதான வெறுப்பு என்பதில் முதல் பரிசைத் தட்டி செல்பவராக இருக்கக் கூடியவர் இவர்.

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரங்கராஜ்மிஸ்ரா சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு மற்ற சிறுபான்மையினருக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தார். (அவர் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது)

அவ்வளவு தான் இந்த ராம்நாத் கோவிந்த் கூறிய கருத்து என்ன தெரியுமா?

இஸ்லாமியர்களும், கிறித்தவர் களும் வேற்றுக் கிரகவாசிகள் என்று சொன்னாரே! இவர் தான் மதச்சார்பற்ற இந்திய குடியரசுத் தலைவரா? சமூகநீதியின் காவலரா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை குடியரசுத் தலைவராகப் பரிந்துரை செய்ய திட்டம் இருந்தது. அவர் இல்லாவிட்டால் என்ன? ஆர்.எஸ்.எஸ். காரர்கள் யார் வந்தாலும் மதச்சார் பின்மைக்குப் பேராபத்தே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner