முதலில் ஒழிக்கப்பட வேண்டியது மதவாதமா? ஊழலா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியா முழுக்க ஒரு பெரும் முழக்கம்! “ஊழலை ஒழிப்போம்!’’ “ஊழல் கட்சிகளை ஒழிப்போம்!’’ இதுதான் அம்முழக்கம்.

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும்.

ஆனால், இந்த ஊழல் ஒழிப்பு அரசியல் ஆதாயத்திற் கும், அரசியலில் பழிவாங்குவதற்கும், அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கவும், எதிர்கட்சிகளை வீழ்த்தவும்  பயன்படுத்தப்படு வது ஊழலைவிட மோசமான செயல் ஆகும்! அதை பிஜேபி அரசு தனது செயல் திட்டமாகவே செய்து வரு கிறது. அப்படிப்பட்ட பிஜேபி கட்சியும், ஆட்சியும் ஊழல் ஒழிப்புப் பற்றிப் பேசுவதுதான், வேடிக்கையானது மட்டு மல்ல, வேதனைக்குரியதும் ஆகும்.

பிஜேபி ஊழல் செய்யாத கட்சியா?

ஊழலை ஒழிக்கப் பாடுபடுவதாய்த் தங்களைப் பற்றிக் கூறிக்கொள்ளும் பிஜேபி கட்சியினர் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா?
முதலில் ஊழல் என்பது பணத்திற்காக முறையற்ற செயல்களைச் செய்வது மட்டுமா? அல்லது அதற்கு மேலும் ஊழல்கள் உள்ளனவா என்பதில் நாம் தெளிவு பெற வேண்டும்.

பணத்திற்காக முறையற்ற செயல் செய்வது ஊழல் என்பது போலவே, வேறு பல மோசடி ஊழல்கள் உள்ளன. அவை பண ஊழலைவிட படுமோசமானவை ஆகும். எம்எல்ஏ., எம்பி.களிடம் குதிரைபேரம் பேசுவது; அரசி யலில் தனக்கு வேண்டியவர்களை  விட்டுவிட்டு வேண் டாதவர்களை சிபிஅய். - வருமான வரித்துறையினரை விட்டு பழி வாங்குவது. கார்ப்பரேட் கம்பெனிகளிடம் நன்கொடை என்ற பெயரில் கோடி கோடியாய் பணம் பெறுவது போன்ற எல்லாம் ஊழல்களே!

பிஜேபி.யின் (குஜராத் எம்எல்ஏ.க்கள்) குதிரை பேரத் திற்குக் குறுக்கே தடையாய் நின்றதால் கருநாடக அமைச் சர் டி.கே.சிவகுமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை.

ஊழல் பற்றி வாய்கிழியப் பேசுவதோடு, ஊழல் அற்ற வர்கள் நாங்கள் என்று கூறிக்கொள்ளும் பிஜேபி கட்சியினர் மேற்கண்ட அனைத்து வகை ஊழல்களையும் செய்கின்ற உலகமகா ஊழல் பேர்வழிகள் ஆகும்.

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கணக்கின்றி கோடிகோடியாய் நன்கொடை:

இது பிஜேபி அரசின் மகாமகா ஊழல். இந்த ஊழல் மூலம் பெறும் கோடிகோடி பணத்தைக் கொண்டுதான் அவர்கள் மாற்றுக் கட்சியினரை விலைக்கு வாங்குவது; தேர்தலில் கோடிகோடியாய் செலவு செய்வது, முக்கியத் தலைவர்களை விலைக்கு வாங்குவது போன்ற பல மோசடிகளைச் செய்கின்றனர்.

காங்கிரசு ஆட்சியின்போது அரசியல் கட்சிகள் நன் கொடை பெறுவதற்குச் சில கட்டுப்பாடுகள் வைத் திருந்தனர்.

ரூ.20,000 (இருபதாயிரம்) வரை இரசீது இல்லாமல் அரசியல் கட்சிகளுக்கு நன் கொடையளிக்கலாம். அதற்கு மேல் நன்கொடை பெற்றால் அரசியல் கட்சி இரசீது தரவேண்டும், நன்கொடை கொடுப்பவர் கணக்கு காட்ட வேண்டும்.

ஆனால், இந்த உலக மகா உத்தமர்களான(?) பிஜேபி கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்தார்கள் தெரியுமா?

அரசியல் கட்சிக்கு எந்த தனி நபரோ, கார்ப்பரேட் கம்பெனிகளோ கோடிகோடியாய் நன்கொடை கொடுத் தாலும் இரசீதும் வேண்டாம், கணக்கும் வேண்டாம் என்று கூறிவிட்டனர். அப்புறம் என்ன?

அம்பானி, அதானி முதல் எல்லா கார்ப்பரேட் முதலாளிகளும் கோடிகோடியாய் மோடியின் கட்சிக்கு நன்கொடையை குவித்துக் கொண்டுள்ளனர்.

அந்தப் பணத்தை வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய தலைவர்களை விலைக்கு வாங்குகின்றனர்; எம்எல்ஏ., எம்பி.களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்து தங்கள் ஆட்சியை ஏற்படுத்திக் கொள் கின்றனர்.

இதைவிட பெரிய ஊழலோ, மோசடியோ உண்டா? ஆனால், அவர்கள் கூறிக் கொள்கிறார்கள், ‘நாங்கள் ஊழல் அற்றவர்கள், ஊழலை ஒழிக்க வந்தவர்கள் என்று!

சிபிஅய், வருமானவரித் துறையை தவறாகப் பயன்படுத்துவது:

தங்களுக்கு எதிரானவர்கள், எதிரான அரசியல் கட்சி யினரை விரட்டி அச்சுறுத்தி, தங்கள் வழிக்குக் கொண்டு வர, வருமானவரித் துறையினரை விட்டு சோதனை நடத்துதல், கைது செய்தல் போன்றவற்றைச் செய்து அவர்களைத் தங்கள் கட்சிக்கு வரச் செய்கின்றனர் அல்லது, தங்களுக்கு அடிமையாக ஆக்கிவிடுகின்றனர்.

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியினரை இப்படி விரட்டியே தங்கள் அடிமைகளாக ஆக்கிவிட்டதே அதற்குச் சரியான சான்று.

அது மட்டுமல்ல, தங்களுக்கு கட்டுப்பட்டு நடப்ப வர்கள் எப்படிப்பட்ட ஊழல், கொள்ளை, குற்றம் செய் திருப்பினும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக் காமல் செல்லப் பிள்ளைகள் போல் நடத்துவது. இதற்குச் சரியான உதாரணம் ஓ.பன்னீர்செல்வம்.
தினகரன் மீது, விஜயபாஸ்கர் மீது, எடுத்த நடவடிக்கையை ஓ.பன்னீர் செல்வம் மீது எடுக்கவில்லை என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள் இந்த உண்மைப் புரியும்.

பிஜேபி., அதிமுக பேரம் பெரும் ஊழல் அல்லவா?

ஓபிஎஸ் அணியிடமும், ஈபிஎஸ் அணியிடமும் ஓர் ஊழல் உடன்படிக்கை செய்துகொண்டு தமிழகத்து அரசியலில் ஆதாயம் பெறுவது எப்படிப்பட்ட அயோக்கியத்தனமான ஊழல்?

“நீங்கள் கொள்ளையடித்து சம்பாதித்த சொத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், நாங்கள் சொல்லும்படிக் கேட்க வேண்டும்!’’ என்ற பிஜேபி.யின் நிபந் தனையின்படிதானே இன்று தமிழக ஆளும் கட்சியினர் பிஜேபி.யின் அடிமை களாய் ஏவல் செய்கின்றனர். இது உலகம் அறிந்த அப்பட்டமான உண்மையல்லவா?

ஊழல் செய்தவர்களைக் காப்பாற்று வதாய் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர் கள் ஊழல் கொள்ளைக்கு உடந்தையாய் இருந்து அரசியல் ஆதாயம் பெறுவது உலகமகா மோசடியல்லவா? இதைவிடவா பெரிய ஊழல் உள்ளது!

அரசியலில் ஊழல் ஒர் அங்கம்:

இந்திய அரசியலில் ஊழலை ஒழிப் பேன் என்று எவர் சொன்னாலும் அது ஓர் ஏமாற்று; நாடகம். ஊழல் என்பது நன் கொடை என்ற பெயரில் சூழ்ச்சியாகச் செய்யப்படுகிறது. கோடிகோடியாய் நன்கொடை கொடுப்பவன் அதைவிடப் பல மடங்கு முறையற்ற வழியில் சம்பாதிக்கத்தானே செய்வான்.

அப்படியென்றால் அது பல்வேறு ஊழல்களுக்கு வழிவகுக்கத்தானே செய் யும்? ஊழல் நடக்கத்தானே செய்யும்?

எனவே, ஊழலை ஒழிப்பேன் என்ப தெல்லாம் அரசியலில் ஏமாற்று; ஒரு மோசடி என்பதே உண்மை நிலை.

எனவே, ஊழலை மட்டும் காரணம் காட்டி ஒரு கட்சியை ஆதரிப்பதோ, வெறுப்பதோ செய்தால், அது மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.

பாஜக.வின் ஊழல்கள்:

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களை நன் கொடை என்ற பெயரில் பிஜேபி இலஞ்சம் பெறுவதோடு மட்டுமல்லாமல் அக்கட்சி யைச் சேர்ந்தவர்களும் ஊழலில் சிக்கிய செய்தி அவ்வப்போது வெளிவருகிறது.

தமிழக பிஜேபி பிரமுகர், தொலைக் காட்சி விவாதங்களில் பங்குபெறும், “திரு.கே.டி.ராகவனுடைய சகோதரர் இயக்குநராக இருந்து, குஜராத் அரசிட மிருந்து ஆர்டர் வாங்கி, சொன்ன வாக் கைக் காப்பற்றாமல் பலரை ஏமாற்றி கோர்ட் ஆர்டர் மூலமாக எட்செர்வ் நிறு வனம் மூடப்பட்டதற்கு காரண கர்த்தா இந்து மத காவலன் (அவரே சொல்லிக் கொள்வது) தனி மனித ஒழுக்க சீலன்!!” என்று பா.ஜ.க-வின் தலைவருள் ஒருவரும், நடிகரு மான எஸ்.வி சேகர் கேலியாக சாடியுள்ளார்.  ஒரு பா.ஜ.க  தலைவரே, மற்றொரு தலைவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக் கிறாரே! அது ஊழலற்ற கட்சியா?

அதேபோல், 2010ஆம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்த போது குஜராத் அரசின் தொழில் முனைவு மேம்பாட்டு மய்யம், குஜராத் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து குஜராத் இளைஞர் களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் பெற்றது. அதாவது குஜராத்தின் இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு குஜராத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலையும் பெற்றுக்கொடுக்கும் ஒப்பந்தம். இந்த ஒப் பந்தத்தை தான் எஸ்.வி சேகர் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு குஜராத் அரசு எந்த ஒப்பந்தப்புள்ளி கோரல் அழைப்பையும் (Tender Invitation) வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியிருக்க, குஜராத் அரசின் ஒப்பந்தம் மேற்கு மாம் பலத்திலுள்ள ஒரு அய்யங்கார் கம்பெனிக்கு எப்படி வந்தது?”

“பணக்காரர்களுக்கு, பார்ப்பனர்களுக்கு என்றால் சட்டம் வளைகிறது போலும்! இந்திய மில்லியனர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று  நடந்தது. ரூ. 500 கோடி செலவில் திரு மணம் செய்வதாக தகவல்கள் வெளியாகின.  சட்டவிரோதமாக சுரங்கத்திலிருந்து கனிமங் களை எடுத்த விவகாரத்தில் சிபிஅய்.யினால் 2011இல் கைது செய்யப்பட்டார் ரெட்டி. பிறகு, ஜனவரி 2015இல், உச்சநீதி மன்றத்தின் அனுமதியில், பெல்லாரி பகுதிக்குச் செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் பெயிலில் வெளிவந்தார். அப்பொழுது திருமண விசயமாக நவம்பர் 1லிருந்து 21 நாட்கள் பெல்லாரிக்குச் செல்லலாம் என்று அனுமதி பெற்றார். நான்கு ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக் கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்ட ஏற்பாடு களை செய்தது எப்படி? மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாகிவிட்ட நிலையில் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரத் திருமணம் நடைபெறுவது சாத்தியமா?” இந்த ஊழலுக்கு துணைநின்றவர்கள்தானே பாஜக.வினர்?

“கருநாடக முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, ஆளும் பிஜேபி கட்சியினர் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

நில ஊழல் புகார் தொடர்பாக முதல்வர் எடியூரப்பா மீதும், அம்மாநில உள்துறை அமைச்சர் அசோக் மீதும் வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அண்மையில் கருநாடக மாநில ஆளுநர் பரத்வாஜிடம் வழக்குரைஞர்கள் 2 பேர் மனு தாக்கல் செய்தனர்.”
அடுத்து, “நாடு முழுவதும் பெரும் விமர் சனத்திற்கு உள்ளாகி இருக்கும் மத்திய பிரதேச மாநில 'வியாபம்' ஊழல் நடந்தது குறித்து நாள்தோறும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக் கின்றன.

பல கோடி ரூபாய் பண முறைகேடுகள், 49 பேரின் மர்ம மரணங்கள் என்று நீளும் வியாபம் முறைகேடு, உச்ச நீதிமன்றம் தலையிட்டு சி.பி.அய். விசாரணைக்கு உத் தரவிடும் நிலைக்கு பிரச்சினைப் பெரிதாகி யுள்ளது. அதே நேரத்தில் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அக்கட்சிக்கும் நெருக்கடி அதி கரித்துள்ளது.

அமலாக்கப் பிரிவால் தேடப்பட்டுவரும் முன்னாள் அய்.பி.எல். தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ் தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானபோதும், பாஜக  தலைமை அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல மகாராஷ்ட்ரா அமைச்சர் பங்கஜா முண்டே மீது 100 கோடி ரூபாய் ஊழல் புகார் கூறப்பட்ட விவகாரத்திலும் பாஜக தலை யிடவில்லை. அதனால், ம.பி.விவகாரத் திலும் பாஜக மௌனம் சாதிக்கும் என்றே கூறப்படுகிறது.” இவை யெல்லாம் யோக் கியமான செயல்களா?

பாஜக.வின் தேசியத் தலைவர் அமித்ஷா 2007இல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு,
அசையா சொத்து ரூ.87.90 லட்சம்,
அசையும் சொத்து ரூ.4.69 கோடி
2012இல் எம்எல்ஏ.வாக இருந்தபோது,
அசையும் சொத்து ரூ.6.62 கோடி
அசையா சொத்து ரூ.5.14 கோடி
2017இல் பாஜக தேசியத் தலைவராய் இருக்கும்போது,
அசையும் சொத்து ரூ.19.01 கோடி
அசையாச் சொத்து ரூ.15.30 கோடி
‘(தரவு: ஜூனியர் விகடன், 06.08.2017)

இப்போது சொல்லுங்கள் இப்படிப்பட்ட பிஜேபி.யினர்தான் ஊழல் செய்யாத உத்த மர்களா?  இவர்களுக்கு ஊழல் ஒழிப்பு பற் றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

எனவே, இவர்கள் ஊழலுக்கு அப்பாற் பட்டவர்கள் அல்ல. ஊழலை தந்திரமாகச் செய்யும் சூழ்ச்சிக்காரர்கள். மற்ற கட்சி செய்யும் ஊழலுக்கும் இவர்கள் செய்யும் ஊழலுக்கும் வேறுபாடு இதுதான்.
ஆனால், நாம் இங்கு ஒரு முக்கியமான கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலஞ்சம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒரு பெரும் சமுதாயக் கேடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைவிட மிகமிக மோச மான, கொடுமையான, மாபெரும் அழிவைத் தரக் கூடியவை மதவாத (மத வெறிச்) செயல்பாடுகளும், பாசிச நடைமுறைகளும் ஆகும். எனவே, அவை தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.
ஊழலுக்கு எதிராகவும், வளர்ச்சி வேண்டும் என்பதற்காகவும் மக்கள் குறிப் பாக பிஜேபிக்கு வாக்களித்தனர். ஆனால், எந்த வளர்ச்சியாவது வந்ததா?

வளர்ச்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே! மற்றபடி நடுத்தர, ஏழை, பாட் டாளி, விவசாய பெருங்குடிமக்கள் நசுக்கப் பட்டு, உதவி மறுக்கப்பட்டு, வருவாய்க்கு வழியின்றி அன்றாடம் அல்லல்படுகின்ற னர். இடஒதுக்கீடு மறைமுகமாக ஒழிக்கப் பட்டு சமூகநீதி புதைக்கப்படுகிறது.

நீட் தேர்வு போன்ற மோசடித் தேர்வுகள் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் அறவே உயர் கல்வி வாய்ப்பு இழந்து ஒதுக்கப்படும் கொடுமை,
புதிய கல்வி என்ற பெயரில் பழைய குலக்கல்வியை கொல்லைப்புற வழியே கொண்டுவரும் அநியாயம்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்காது, அவர்களின் பழைய கடன் களை வசூலிக்கும் கொடுமை.
மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து வாராக் கடனாக உள்ள அவலம். மல்லையா அதற்கு ஓர் உதாரணம். அப்படி ஆயிரமாயிரம் மல்லையாக்கள் பிஜேபி ஆட்சியின் ஆதரவோடு வாங்கிய கடனைக் ஏமாற்றிக் கொண்டு வசதியாக வாழ்கிறார்கள்.

மாட்டுக்கறி உண்ணாதே, கோழிக்கறி உண்ணாதே என்று உண்ணும் உணவில் கூட தடை விதித்து, மாட்டை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து நசுக்கும் கொடுமை.
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் ஆதிக்கம்.
ஒரே கடவுள், ஒரே மதம் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்; அதை எல்லா தரப்பு மக்களும் ஏற்க வேண்டும்; ஏற்க மறுப்பவர்கள் நாட்டை விட்டு ஓடவேண்டும் என்று கூறும் அராஜகம்.
தங்களுக்கு ஒத்து வராதவர்களைப் பழிவாங்குவது, அச்சுறுத்திப் பணியவைப் பது, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில், அக் கட்சிகளைப் பல வகையிலும், அச்சுறுத்தி, வழக்கு  போட்டு சீர்குலைத்து தங்கள் ஆட் சியை எப்படியாவது எல்லா மாநிலங்க ளிலும் கொண்டுவர முயலும் சர்வாதிகாரப் போக்கு. மாநில உரிமைகளை முழுவதும் பறித்து, அதிகாரத்தை ஒரே மய்யத்தில் குவித்து ஒற்றையாட்சியை உருவாக்கும் முயற்சி.

இராணுவம் முதல் உயர் அதிகாரிகள், ஆளுநர்கள் வரை எல்லாவற்றிலும் ஆர்எஸ்எஸ்.காரர்களை நுழைத்து மத ஆதிக்கத்தை வளர்த்தல்.
அதன்வழி பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டல். பார்ப்பனர் அல்லாதாரை மீண்டும் சூத்திரர்களாக்கி, அடிமைகளாக சேவகம் செய்ய சதித்திட்டங்கள் என்று பல்வேறு பாசிசத் திட்டங்களை செயல் படுத்தி மக்களாட்சியை முடக்கும் இவர் களின் மதம் சார்ந்த சர்வாதிகார அடக்கு முறை ஊழலைவிடக் கொடியது அல்லவா? எனவே, இலஞ்சம் எதிர்க்கப்பட வேண்டி யது, ஒழிக்கப்பட வேண்டியது என்றாலும் அதைவிட முதலில் ஒழிக்கப் பட வேண்டி யது மதவாதமாகும்!
முதலில் மதவாத ஆட்சியை அப்புறப் படுத்திவிட்டு, அதன்பின் லஞ்சத்தை படிப்படியாய் அகற்ற முயல்வதே, அறி வுடைமையாகும். இலஞ்சத்தின் மீதான வெறுப்பால் மதவாத சக்தியை ஆள விட்டால், சர்வாதிகார ஆட்சியில் முடியும். மக்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து அடிமைகளாய் வாழ வேண்டிவரும்! எச்சரிக்கை!

 

- மஞ்சை வசந்தன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner