‘சைவ இந்தியா’ என்ற கட்டுக்கதை 70% இந்தியர்கள் இறைச்சி உணவு சாப்பிடுபவர்களே!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் மோடி அமீரகம் செல்லும் போது தனது சொந்த ஊர்க்காரரான குஜராத்தியுமான, மரக்கறி சமையல்காரர் சஞ்சீவ் கபூரை உடன் அழைத்து, குஜராத்தின் சுத்த பத்தமான சைவ உணவு அவருக்கு வழங்கப்பட்டது என வெளி யுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்வீட்டர் பக்கத்தில் பெருமிதப்பட்டுக்கொண்டார். அமீரகம் சென்றும் கூட சைவ உணவை அருந்திய பிரதமரின் செயலைக்கண்டு அவருக்கு பெருமை தாங்க முடியவில்லை போலும்.

அண்மையில் மோடி மெக்சிகோ சென்றபோது அந்நாட்டு அதிபர் என்றிக் பெனா நீட்டோவுடன் வெகு பெர்சனலாக மெக்சிகோவில் உள்ள சைவ உணவு விடுதிக்கு சென்று பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளுடன் ஒரே மேசையில் பகிர்ந்து கொண்டதை அதே அதிகாரி ஸ்வரூப் புகைப்படங்களுடன் தனது ட்வீட்டர் எனும் கீச்சொலி பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இந்தியா, மரக்கறி உணவை சாப்பிடுபவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என உலகம் நம்பிக் கொண்டு இருக்கிறது. அதனை வலுப் படுத்தும் விதமாக மோடி போன்றோரின் பரப்புரை அமைந்துள்ளது. சாதிகளின் பெயராலும் மத நம்பிக்கையின் பெயரா லும் இந்நாடு காய்கறி உண்ணியாக இருப் பதை எப்படியாவது வலுப்படுத்தும் முயற் சியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றனர்.  அதனைத்தொடர்ந்து ஹரியானா 68.5% ஆண்களும் 70% பெண்களும் சைவ உணவு சாப்பிடு பவர்களாக உள்ளனர். பஞ்சாப்பில் 65.5% ஆண்களும், 68சதவீத பெண்களும் காய்கறி சாப்பிடுபவர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் 97.65%

மாநில வாரியாக பார்த்தோமானால் தமிழகத்தில் அசைவம் சாப்பிடுவர் 97.65%. சைவ உணவு சாப்பிடுவர் 2.35 சதவீதம். கேரளாவில் 97% மக்கள் அசைவம், காய்கறி மட்டும் சாப்பிடுபவர்கள் 3 சதவீதம். ஆந்திராவில் மாமிசம் சாப்பிடுபவர்கள் 98.25, சைவம் 1. 75 சதவீதம். கருநாடகம் அசைவம் 78.9 அசைவம் சாப்பிடுபவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் 21.1 சதவீதம், தெலங்கானா அசைவம் 98.7% மக்களும், சைவ பட்சிணிகளாக 1.3 விழுக்காடு மட்டுமே. மராட்டியத்தில் அசைவம் 59.8ம், சைவம் 40.2% குஜராத்தில் விகிதம் வேறுபடுகிறது. அசைவம் சாப்பிடுபவர் களை விடசைவம் சாப்பிடுபவர்க்ள் மிகுந்து காணப்படுகின்றனர். இங்கு மரக்கறி உணவு சாப்பிடுபவர்கள் 60.95, ம.பியிலும் கிட்டத்தட்ட குஜராத் நிலையே நிலவுகிறது. இங்கு அசைவம் சாப்பிடுவோர் 49.4% சைவம் 50.6% சத்தீஸ்கரில் அசைவம் 82,05ம் சைவம் சாப்பிடுவோர் 17.95ம், ஒடிசாவில் அசைவம் சாப்பிடு வோர் 97.35 ஆனால் சைவம் 2.65%, ஜார்கண்ட்டில் அசைவம் சாப்பிடுவோர் 96.75, சைவ உணவு சாப்பிடுவோர் 3.25 மட்டும் தான். பிகாரில் அசைவம் சாப்பிடுவோர் 92.45 சதவீதமும், சைவ உணவு சாப்பிடுவோர் 7.55 சதம். அஸாமில் அசைவ சாப்பாடு சாப்பிடுவோர் 79.4 சதவீதமும் சைவம் 20.6 சதவீதமும் உள்ளனர்.

நாடு தழுவிய ஆய்வு ஒன்றை மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பதிவாளர் அலுவலகம் வெளியிட்டது. அதில் உண்மைகள் வெளிப்பட்டன. பொய்மைகள் உடைபட்டன. மாதிரி பதிவு முறைமை எஸ்.ஆர்.எஸ். சாம்பிள் சிஸ்டத்தின் அடிப்படையாக வைத்து இந்திய பொது பதிவாளர் வெளியிட்ட ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 71% மாமிசம் சாப்பிடுபவர்கள் என ஆய்வு குறிப்பிடு கிறது.

தெலுங்கானா 98.8%

ஆய்வின்படி தெலங்கானா அசைவம் சாப்பிடும் மக்களில் நாட்டிலேயே முன் னிலையில் உள்ளது. 98.8% ஆண்களும் 98.6% பெண்களும் இங்கு அசைவம் சாப்பிடுபவர்கள். அதனை அடுத்து மேற்குவங்கத்தில் 98,55 % அசைவம் சாப்பிடுபவர்கள். மூன்றாவது இடத்தை ஆந்திரா பிடிக்கிறது இங்கு 98.25% மாமிசம் சாப்பிடுபவர்கள் 4ஆவது இடத்தில் ஒடிசாவும் (97.35). 5வது இடத்தில் கேரளா வும் (97%) இடம்பிடிக்கிறது. காய்கறி சாப்பிடுபவர்களில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம் 73.2 சதவீத ஆண்களும் 76.6 பெண்களும் சைவ உண்ணிகளாக உள்ளனர்.

உ.பி.யில் அசைவ உணவு

உ.பி.யில் அசைவ உணவு சாப்பிடு வோர் 52.9 சதவீதமும், சைவ உண்ணிகள் 47 சதவீதமும் உள்ளனர். ராஜஸ்தானில் அசைவம் உண்போர் 25.1 விழுக்காடு மட்டுமே. ஆனால் சைவம் சாப்பிடுவோர் 74.9 சதவீதமும் டில்லியில் அசைவம் சாப்பிடுவோர் 60.5 சதம் சைவம் சாப்பிடு வோர் 39.5% பேர். ஹரியானாவில் அசை வம் உண்ணுவோர் குறைவு 30,75 சதம் அசைவ உணவு பழக்கம் கொண்டோர். ஆனால் சைவ உணவுப்பழக்கம் கொண் டவர்கள் 69.25 ஆவர். பஞ்சாப்பில் அசைவ உண்ணுவோரை விட சைவ உண்ணிகள் அதிகம் அசைவ உணவாளர்கள் 33.25% சைவ உணவு உண்போர் 66. 75% உத்தர்காண்ட்டில் அசைவத்தினர் 68.55 விழுக்காட்டினரும் சைவ மரக்கறி உணவு சாப்பிடுவோர் 31.45% சாப்பிடுகின்றனர். வடமேற்கு மாநிலங்களை பற்றி சொல்லவே வேண்டாம் மாமிசத்தை விரும்பும் மக்களை முழுக்க முழுக்க கொண்ட பகுதியாகும்.

இத்தனை இருந்தும் இது ஒரு மரக்கறி உணவு பூமி போன்று புனைந்து பரப்புரை செய்யும் சக்திகளை நினைத்தால் சிரிக்கத் தான் தோன்றுகிறது இல்லையா?.

(நன்றி: மக்கள் உரிமை, 2.6.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner