‘ஆடிப் பெருக்கு’ பித்தலாட்டம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபட வும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ் வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய் வார்கள்.

காவிரிக்கரை

காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

தமிழகத்தின் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேட்டூர் அணை,
பவானி கூடுதுறை,
ஈரோடு,
பரமத்தி வேலூர்,
குளித்தலை,
திருச்சி,
புகார்

சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசை யாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம் பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற் குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடி யில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத் தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண் டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகே னக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரை யோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழு வதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு விழாவின்போது என்ன நடக்கும்?

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட் களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட் டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமா கியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதி கப் பெண்கள் என்று எல்லாப் பருவத் தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம் புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம் பித்துவிடும்.

ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலை நான்கு மணியில் இருந்தே வேலை தொடங்கி விடும். ‘‘கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு கொடுங்களேன், தேங்காயை துருவி கொடுங்களேன்’’ என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க் கரைப் பொங்கல் என்று எல்லாம் செய்து முடித்து அவற்றை ஆற்றுக்கு எடுத்துப் போக பாத்திரத்தில் அடைத்துவைப்பார்கள். அதன் பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்து முடிப்பார்கள். அதன் பிறகு ஆற்றுக்குக் கிளம்பும் நிகழ்வு தொடங்கும்.

பெண்கள் செம்பில் மஞ்சளை வைத்து எடுத்துக்கொண்டு தன் பிள்ளைகள், ஓரகத்தி, அவர்களின் பிள்ளைகள், நாத்த னார், பக்கத்து வீட்டுத் தோழி என்று பட்டாளத்தோடு தேர் அசைவதுபோல தெருவைக் கடப்பார்கள்.

சிறு பிள்ளைகள் பனைச் சக்கரத்தால் செய்யப்பட்ட சிறிய சப்பரத்தை இழுத்துக் கொண்டு முன்னே போவார்கள். எல்லோரு மாக ஆற்றை அடைந்ததும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்துவைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள்.

அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருக மணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள்.
பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் உயிர்ப்பை உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்குமாம்.

வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடு வார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகை யான பதார்த்தங்களையும், கலப்பு சாதத் தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப் பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார் கள். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.
தண்ணீரில்லா காவிரியிலும் ஆடிப்பெருக்கு மடமை

ஆனால் கடந்த பல ஆண்டுகளாகக் காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப் பெருக்கு அத்தனை உற்சாகமாகக் கொண் டாடப்படுவதில்லை. ஆடிப்பெருக்கு என்பது மற்றுமொரு பண்டிகைக் காலம். காலையில் எழுந்ததும் இறைச்சிக் கடை களை நோக்கிக் குவிகிறார்கள் மக்கள். தேவைக்குத் தகுந்தபடி இறைச்சி வாங்கி மதிய சாப்பாட்டைக் கொண்டாடிப் பண் டிகையை முடித்துக்கொள்கிறார்கள். அன் றைய நாளில் மது விருந்துக்கு பஞ்சமில் லையாம்!
வீட்டிலேயே கொண்டாடலாம்..!

காவிரியின் கரையோரம் உள்ளவர் கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடு வார்கள்; நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைப்பட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமா கக் கொண்டாடலாம் என்கிறார் ஆச்சாள் புரம் சம்பந்த சிவாச்சாரியார்.

எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார்: “ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பூஜை அறையில் விளக் கேற்றி வைத்து அதன் முன் செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும். கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, ‘எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்ட துபோல் நாங்களும் வழிபடுகிறோம். அவர்களுக்கு அருள் செய்ததுபோல எங்களுக்கும் அருள் செய்யுங்கள்’ என்று மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்டுங் கள். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த தும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்தால் ஆடிப்பெருக்கு விழா நிறை வாகும்” என்கிறார் சம்பந்த சிவாச்சாரியார்.

ராமனின் பிரம்மஹத்தி தோஷம்

ராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ராமன் கொல்ல நேர்ந்தது. ராமன் கொன்றது அசுரர்களை என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்ட தால் ராமனை பிரம்ஹத்தி பிடித்துக்கொண் டது.

இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும் என்று வசிஷ்டமுனிவரி டம் கேட்ட ராமனிடம், “இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக காவேரியில் நீராடு. ஆடிப்பெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றாராம் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிப்பெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டானாம் ராமன்.

ஆடிப்பெருக்கு கட்டுக்கதைகள்

ஆடிப்பெருக்கானது ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படு கிறது. இது பதினெட்டாம் பெருக்கு எனவும் அழைக்கப்படுகிறது, ஆடிப்பெருக்கு விழாவானது நமது நீராதாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படு கிறது.

இவ்விழா தமிழர்களால் குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயி களால் தங்களது ஜீவாதாரமாக விளங்கும் காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இத்திரு நாளில் தமிழக மக்கள் தங்கள் குடும்பங் களுடன் சென்று காவிரி நதிக்கு பூஜை செய்து, புனித நீராடி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர். இந்நாளில் திருமணம் ஆகாதவர்கள், தங்களுக்கு திருமணம் ஆகவும், திருமணமான பெண்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்பம் செழிக் கவும் வழிபாடு நடத்துவர். பெண்கள் புதிய மஞ்சள் பூசிய கயிற்றை கட்டிக்கொள்வர்.
ஆடிப் பெருக்குச் சமயத்தில் ஆற்றில் புது வெள்ளம் பெரும் அளவில் நுரை தள்ளி வருவதால் அந்தத் தருணத்தில் காவிரித் தாய் கர்ப்பிணி என்பது ‘அய்தீகமாம்’(?)

ஆற்றில் பதினெட்டுப் படியும் நீர் வழிந் தோடும். புதுமணத் தம்பதிகள் நீராடுவர், தாலியைப் பிரித்துக் கட்டுவார்களாம்! அப்படிச் செய்தால் கல்யாணம் ஆகாத பெண்களுக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்க ளுக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிட்டும்.

இந்த புரட்டுகள் எல்லாம் இந்த ஆடிப் பெருக்கில்தானாம்!

ஆற்றில் விடப்படுவது ரங்கநாதனின் சீர் வரிசையாம்

கர்ப்பிணிப் பெண்ணான காவிரியின் சகோதரர்தாம் சிறீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதராம். இந்த நாளில் தன் தங்கை காவிரிக்குச் சீர்வரிசை செய்வாராம். அதன்படி கர்ப்பிணிப் பெண்கள் விரும்பி உண்ணும் சித்ரான்னங்களான புளியோ தரை, மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் வெல்லமும் தேங்காயும் சேர்ந்த வெல்ல சாதம் முதலியவற்றை காவிரித்தாய்க்கு நிவேதனம் செய்து அனைவரும் உண்டு களிப்பர்.

ரங்கநாதரின் சீர்வரிசையாக முறம் ஒன்றில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத் துணி, கருகமணி, திரு மாங்கல்ய சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, தேங்காய் உடைத்து மற்றொரு முறத்தால் மூடி, தீபங் களை ஒரு வாழை மட்டையில் வைத்து முறத்துடன் ஆற்றில் மிதக்க விடுவார் களாம்.
இந்தச் சீரைத் தன் தங்கைக்கு செய்வ தற்காகவே ரங்கநாத பெருமாள் அம்மா மண்டபத்தில் காலையிலேயே எழுந்தருளி மாலைவரை அங்கு இருந்து அருள் பாலிப்பாராம்!

காதலி காவிரி

காவேரி ஆறை ஒரு காதலியாக உருவ கித்து, ஆற்றில் குளிக்க சென்றவனை தன்னோடு அழைத்துக்கொண்டாள் என பரணர் ஒரு பாடலில் ஆதிமந்தி, ஆட்ட னத்தி காதல் கதையோடு எழுதியுள்ளார். ஆதிமந்தி சோழ மன்னன் கரிகாலனின் மகள் எனவும், ஆட்டனத்தி என்பவன் சேர அரசன் எனவும் மரபாக நம்பப்படுகிறது.

....” முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலர் காட்டிப்
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்”.....
[அகநானூறு 222, பரணர்.]

கழார்ப் பெருந்துறை என்ற ஊரில் காவேரி ஆற்றங்கரையில் புதுப்புனல் விழா! அந்த விழாவில் குன்றைப்போல் தோள் படைத்த ஆட்டனத்தி நடனமாடுகிறான். (ஆட்டனத்தி ஆடல் கலையில் பெயர் பெற்றவன்). அவன் அழகில் மயங்கிய காவேரி மங்கை அவன் அழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அவனை உடனழைத்துச் சென்றது. (ஆட்டனத்தி காவேரி வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டான்).
ஆட்டனத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.

அங்கே நீராடிய மீனவன் தலைவனின் மகள் மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனுக்கு தேவையான வைத்தியம் செய்தாள். அவனும் மெல்ல மெல்ல தேறி னான். மருதிக்கு அவன் மேல் ஒரு மோகம் - ஒரு காதல் அரும்ப தொடங்கிற்று. அவனே தன் தலைவன் என முடிவும் எடுத்து விட்டாள். அப்படி இருக்கும் தருவாயில், ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி புலம்பிக் கரையோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட் டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கரையிலே பின்சென்று, “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். ஆதி மந்தி கூறிய அடையாளங்கள், தான் காப்பற்றிய, தன் மனதைக் கவர்ந்த, தன் தலைவனாக முடிவெடுத்த இவனின் அடையாளங்களுடன் ஒத்துப் போவதைக் கண்டு மருதி திடுக்கிட்டாள். ஆட்டனத் தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட மருதி கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். இந்தக் கதைக்கு நீட்சியாக அதே பரணர் அக நானுறு 376 பாடலில் தொடர்ந்துள்ளார்.

ஆதிமந்தி, ஆட்டனத்தி காதல்கதை குறுந்தொகை 31ஆவது பாடலில் பயிலப் பட்டுள்ளது.

“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.”

அதாவது என் காதலனை, அந்த நீச்சல்-நடன விளையாட்டு வீரன் ஆட்டனத்தி என்பவனை, பலம் உடைய போர்வீரர்கள் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக் கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் காணமுடியவில்லை. நானும் ஓர் ஆடுகள மகள் [ஆட்டக்காரி]. அந்த ஆட்டக்காரனை நினைத்து என் சங்கு கைவளையல் நழுவுகிறது தோழி என நாணம் கடந்து வருந்தி முறையிட்டாள்.

உ.வே.சா. வின் என் சரித்திரம்

உ.வெ.சா பழம்பெரும் ஓலைச் சுவடிகளை தேடி அலைந்தது தெரியும். இதைப்பற்றி விலாவாரியாக ‘ என் சரித் திரம்’ என்ற நூலில் எழுதியுள்ளார். ஒரு முறை ஈரோடு அருகில் கொடுமுடியில் ஒரு பெரியவரிடம் பழைய ஓலைச்சுவடிகளை இருப்பது அறிந்து அந்தப் பெரியவரிடம் தன்னிடம் ஒப்படைக்குமாறு மன்றாடுகிறார். ஆனால் பெரியவரோ விடியற்காலையில் ஆடிப்பெருக்கத்தில் பழைய ஓலைச்சுவடி களை ஆற்றில் மிதக்கவிடுவேன் என்ற அபத்தமான சடங்கை சொன்னபோது உ.வெ.சா திடுக்கிட்டுள்ளார். உடனடியாக பக்கத்து வீட்டு திண்ணையில் அன்றிரவு உறங்கி, விடியற்காலையில் பெரியவரை பின்தொடர்ந்து ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளை பத்திரமாக மீட்டெடுத்துள்ளார்.

அப்படியானால் ஆட்டனத்தியை உடனழைத்துச் சென்ற அதே காவேரி ஆறுதான் பழந்தமிழ் இலக்கியங்களையும் அழைத்துச் சென்றிருக்குமா?

தமிழர்களுக்கு சற்றும் பொருத்தமில்லாத கட்டுக்கதைகளை அள்ளிவிட்டு, பார்ப் பனர்கள் தங்களின் வயிறு வளர்¢க்கின் அதே நேரத்தில், தமிழர்களிடையே உள்ள பழம் பெரும் இலக்கியங்கள், பண்பாட்டு ஆதா ரங்களை அழிக்கின்ற பணிகளையும் தொடர்ந்து செய்த வந்தார்கள் என்று Ôஆடிப்பெருக்குÕ மூலமாக வெளிச்சத்துக்கு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner