கனம் நீதிபதி அவர்களுக்கு... பகுத்தறிவு கசப்பது ஏன்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கவிஞர் கலி.பூங்குன்றன்

சிறீசிறீ ரவிசங்கர் நிகழ்ச்சியால் அழிக்கப்பட்ட யமுனையின்
சதுப்பு நிலக்கரை


இதைக் கேட்டால் எல்லோருக்குமே ஆச்சரியமாக இருக்கும். இராமகோபால னும், குருமூர்த்திகளும், சங்கராச்சாரியார் களும் பகுத்தறிவைப் பற்றிக் கேலி செய்தால் நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

பகுத்தறிவு தேவையில்லை என்ற நிபந்தனையின் பேரில்தான் கடவுளையும், மதச்சடங்குகளையும் (பஞ்சகவ்யம் என்று மாட்டு மூத்திரத்தைக் குடிப்பது வரை) அவர்கள் கட்டிக் கொண்டு அழுவார்கள்.

பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் வீழ்ந்தான் என்பதில் ஆரம்பித்து மூடநம் பிக்கையின் மொத்த குத்தகைக் கதையின் வடிவமான தீபாவளிக்கு வக்காலத்து வாங் குவதில் பகுத்தறிவுக்கு இடமில்லைதான்.

ஆனால் ஒரு நீதிபதி பகுத்தறிவைச் சிறுமைப்படுத்தி மதத்தைத் தூக்கி நிறுத்து வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் “பகுத்தறிவு என்ற பெயரால் மதக் கட்டுப் பாட்டை மீறுவதால் இயற்கை அழிக்கப் பட்டு கடுமையான சிரமத்துக்கு உள்ளா னோம்” என்று வெட்டவெளியில் அல்ல - திறந்த நீதிமன்றத்தில் கூறியுள்ளார் - ஒரு விசாரணையின் போது!

“நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லித் தந்த பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் எல்லாம் பொய்யானவையல்ல - அவை அறிவியல் ரீதியானது” என்றும், வக்காலத்து (பொதுவாக வக்கீல்கள்தான் வக்காலத்துப் போடுவார்கள்) வாங்கிப் பேசியிருக்கிறார் நீதிபதி.

நம்முன்னோர்கள் தீர்த்த யாத்திரை சென்று கோயில் குளத்தில் மூழ்கி நீரைப் பருகி பாவங்களைப் போக்கிக் கொள் வார்கள். இன்றைக்கு கங்கை நீரைப் பரு காதீர்கள் - அதில் புற்றுநோய்க் கிருமிகள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.

கும்பகோணம் மகாமகக் குளத்து நீரில் மலக் கழிவு 28%, சிறுநீர்க் கழிவு 40% இருப்பதாக ஆய்வின் அடிப்படையில் தரச்சான்றை மாவட்ட  ஆட்சியரே அறிவித்துள்ளார்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று நம் முன்னோர்கள் நம்பினார்கள் - இன்றைக்கு நோய்கள் பரவுவதில் முதலிடம் வகிப்பது தண்ணீ ரால்தான். ஒவ்வொரு பயணியும் கையில் தண்ணீர்ப் பாட்டிலுடன்தான் பயணிக்கின் றனர். (நீதிபதி அவர்கள் எப்படியோ!)

அம்மைக்குக் காரணம் மாரியாத்தாள் கோபம் என்றும், காலராவுக்குக் காரணம் காளியாத்தாள் கோபம் என்றும் நம் முன்னோர்கள் நம்பி அந்தக் கோயில் களில் கூழ்காய்ச்சி ஊற்றினார்கள். சாவுகள் தொடர்ந்து கொண்டுதானிருந்தன.
இப்பொழுது நிலை என்ன? அவை நோய்கள் என்று கூறப்படவில்லையா? தடுப்பு நடவடிக்கைகளை (PROPHYLATIC MEASURES) மேற்கொள்ளவில்லையா? அந்நோய்கள் ஒழிக்கப்படவில்லையா?’ இவையெல்லாம் பகுத்தறிவுக்கு விரோதம் என்று கனம் நீதிபதி பகர்வாரோ!

சரி - சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது - புவி வெப்பம் அதிகரிக்கிறது - மரம் வள ருங்கள், வாகனப்புகையைக் கட்டுப்படுத் துங்கள் என்று கூறுவதெல்லாம் கூட பகுத்தறிவு - அறிவியல் அடிப்படையில் தானே!

உண்மையைச் சொல்லப் போனால் பண்டிகைகளும் கோயில் கொண்டாட் டங்களும் தான் சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதிக்கும் காரணிகள் என்பது - உலகுக்கே நீதி சொல்லும் அறிஞருக்கு தெரியாமல் இருக்க முடியாது என்று கருதுகிறோம்.

மும்பையின் நிலைமை என்ன?

மும்பை மாநகராட்சி மற்றும் மகா ராஷ்டிர அரசு சுகாதாரத்துறைக்கு ஆண் டாண்டிற்கு 100 கோடிக்கும் மேல் நிதிச் சுமை அதிகரித்து வருகிறது.

அதிகரித்துவரும் வெப்பத்தால் மும் பையின் இயற்கையான சூழல் சீர்கெடத் துவங்கியுள்ளது. இதனால் குறிப்பிட்ட வகைத் தாவரங்கள், மற்றும் மும்பை புறநகர் சதுப்பு நிலத்தில் வாழும் லட்சக்கணக்கான நாரைகள், காட்டு வாத்துகள், நீர்க்காக்கை போன்றவை மிகவும் விரைவாக அழிந்து வருகின்றன.   ஆண்டாண்டிற்கு பிள்ளை யார் சிலை மிகவும் அதிக அளவு கரைப் பதால் மும்பை கரையில் இருந்து 8 கிலோ மீட்டர் வரை மீன்கள் இல்லாத பகுதியாக மாறிவிட்டது.  இதனால் மீனவர்கள் மிகவும் நீண்ட தூரம் சென்று மீன்பிடித்து வரும் நிலை உருவாகியுள்ளது.

தீபாவளி  

நாடு முழுவதும் தீபாவளி நாள் மற்றும் அதற்கு முந்தைய பின் சில நாள்கள் தொடர்ந்து பட்டாசு வெடிப்பதால்  பற வைகள், அணில்கள் மரணமடைகின்றன. முதியவர்கள் மற்றும் குழந்தை களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாகின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, மும்பை, சண்டிகர், போபால், அய்தராபாத் போன்ற நகரங்களில்  8 மாதங்களில் ஏற் படக்கூடிய காற்றுமாசு ஒரே நாளில் ஏற்படு கிறது என்று  ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இதழ் 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பிறகு பசுமைத்தீர்ப்பாயத்தின் ஆய்வு அறிக் கையை மய்யமாக வைத்து செய்தி வெளி யிட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உரியடி என்னும் நிகழ்ச்சியில் மனித பிரமீடு அமைப்பதால் நடக்கும் விபத்துகளில் இந்தியாமுழுவதும் ஆண்டுதோறும் 50-க் கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்படு கின்றன. 120 பேருக்கு மேற்பட்டோர் உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் மும்பையில் 12 பேர் மரணமடைந்துள்ளனர். 43 பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

நதிமாசு

கங்கையில் பிணங்களை மிதக்க விடுவது, நாடு முழுவதும் உள்ள நதிகளில் வீட்டில் உள்ள பழைய தெய்வ வழி பாட்டுக்குரிய பொருட்களை கொட்டுவது போன்ற செயல்களால் நதிகளின் உயி ரோட்டம் குறைந்து குடிக்கவும், மீன்கள் வாழவும் தகுதியற்ற சூழலுக்கு நதிகள் மாறிவருகின்றன.

யாகம் என்ற பெயரில் அரசு விழாக் களில் கடந்த 2008 முதல் 2016ஆம் ஆண்டுவரை 63 தீவிபத்துகள் நடை பெற்றுள்ளன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் விரயமாகியுள்ளது, கடந்த ஆண்டு ஆந்திராவில் புதிய தலை நகர் அமைக்க நடந்த யாக பூசையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 300 கோடி மதிப் பிற்குள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

டில்லியில் யமுனைக் கரையில் சிறிசிறி ரவிசங்கர்  என்ற கார்ப்பரேட் சாமியார் கடந்த 2016 மார்ச்சு திங்களில் மூன்று நாள்கள் உலகக் கலாச்சார விழா என்ற பெயரில் பெருங்கூத்து அடித்தாரே! அவருக்காக பிஜேபி ஆட்சியில் இராணு வமே நதியில் பாலமெல்லாம் போட்டுக் கொடுத்ததே - அதன் விளைவு என்ன? என்பதை கனம் நீதிபதி பெருமான் அறிய மாட்டாரா?

இவர்கள் யமுனை நதியில் இருந்து நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்கு நறுமணம் வரவேண்டும் என்று கூறி பல்வேறு விதமான வேதிப்பொருட்களை யமுனை நதியிலும், கரையிலும் லட்சக்கணக்கான லிட்டர் பேரல்களைத் தெளித்தனர்.

அப் போதே  இவை, அறிவியல் ரீதியாக பரிசோதிக்கப்படாதவை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நுண்ணு யிர்கள் மடிந்து போகும்; அப்படி மடிந்து போனால் நதிக்கரையில் பசுமைச்சுழற்சி முற்றிலும் நின்றுபோகும் என்றும் புகார் கூறப்பட்டது, ஆனால் இது குறித்து ரவிசங்கர் கவலைப்படவில்லை.

பசுமைப் தீர்ப்பாயமும் இயற்கை ஆர்வ லர்களும் மத்திய அரசின் மிரட்டலால் அடங்கிப் போனார்கள். நிகழ்ச்சி 3 நாள்கள் பிரமாண்டமாக நடந்தேறியது.

இந்த நிலையில் யமுனைக்கரையில் இந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து விசாரணை நடத்த 4  பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக்குழு,  47 பக்க விசாரணை அறிக்கை ஒன்றை பசுமைத்தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது, அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய மான பகுதிகள் வருமாறு:

“இந்த நிகழ்ச்சியால் கரைகள் முற்றிலும் சேதமடைந்ததுள்ளன. சேதமடைந்த கரையை மறுசீரமைக்க வாழும் கலை அமைப்பு ரூ.100-120 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.

இக்கரையில் பசுமைச்சுழற்சியை உருவாக்கும் நுண்ணுயிர்கள் விழாவின் போது பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட் களால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிதைந்து விட்டன.  இனி இந்த நுண்ணுயிர்களும் இந்த பகுதியில் தோன்றாது, அப்படியே செயற்கையாக நுண்ணுயிரிகளை இங்கு கொண்டுவந்து வளர்த்தாலும் குறைந்த பட்சம் இந்த சூழலுக்கு அவை வளர்ந்து பரவுவதற்கு 10 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் ஆகும்.

மேலும் நாணல்கள், அதைச்சார்ந்துள்ள சிறு உயிர்கள் போன்றவைகளும் முற்றிலும் அழிந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் உயிர்வாயுவான ஆக்சிஜன் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது, இதனால் இந்த கரைப்பகுதி உயிரினங்கள் வாழத் தகுதியற்ற ஒன்றாக மாறிவிட்டது.

சில இடங்களில் அவர்கள் தெளித்த ரசாயனங்களின் பாதிப்பு அகல 20 ஆண்டுகள் ஆகலாம். மேலும் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு கழிவுகளை அகற்றாமல் சென்றுவிட்டனர். இவை அனைத்தும் கரையில் புதைந்து விட்டன. இவற்றை அகற்றுவதற்கு 10 கோடி ரூபாய் வரை செலவாகும். அப்படியே அகற்றினாலும் மண்ணின் தன்மை பழையபடி மாறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு!”

இவ்வாறு நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக பசுமையான, அழகான சுற்றுப்புறச்சூழல் கொண்ட யமுனைக் கரையை மூன்று நாள் நிகழ்ச்சியில் சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டார் பார்ப்பன கார்பரேட் சாமியார் சிறி சிறி ரவிசங்கர். இந்த சீரழிவிற்கு மோடியும் உடன் நின்று துணைபோனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் ஒப்புக் கொள்வதற்கு மத எண்ணமும், பழைய வழக்கங்களின் மீதான கசிந்துருகும் நம்பிக்கையும் நீதிபதி அவர்களுக்குத் தடையாக இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது - கொஞ்சம் பகுத்தறிவுக்கும் வேலை கொடுத்தால் புரியும்.

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்க வேண்டும், பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி-லீ) கூறுகிறது. ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதியோ அதற்கு மாறாக பகுத்தறிவைக் கேலி செய்வதும் - பழமைக்குப் பால் வார்ப்பதும் கொழுத்த “நகைச்சுவை” தான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner