வானிலை ஆய்வு மய்ய அறிக்கையின் பின்னணி?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்திய வானிலை ஆய்வு மய்யம் 2017 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான நாடு முழுவதும் பெயத மழை விபரத்தை ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிட்டுள்ளது, இதில் தமிழகத்தில் தேவைக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது அதாவது +30 விழுக்காடு மழைபெய்துள்ளதாக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் மழையின்மையினால் கடுமையான வறட்சி நிலவுகிறது என்று தினசரி செய்திகள் வெளிவருகின்றன. மேலும்  ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மழையின்மையால் நீர்வளத்தைப் பாதுகாக்க ஏரி மற்றும் குளங்களை தூர்வாரிக்கொண்டு இருக்கின்றனர்.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, மேலும் தஞ்சை, திருச்சி, நாகை, போன்ற மாவட்டங்களில் மழையின்மையால் நிலத்தடி நீர் அதிக ஆழத்திற்கு சென்றுவிட்டது, இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது,

மேலும் தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்கள் மட்டுமே வடகிழக்கு பருவமழை பெய்யும், இந்த பருவமழை காலத்தில் தானே புயல், சென்னை வெள்ளம், வார்தா புயல் போன்றவை ஏற்பட்டன. 2017- ஆண்டு இரண்டு புயல்கள் சென்னையைத் தாக்கக் கூடும் என்று தென்கிழக்கு ஆசிய காலநிலை கண்காணிப்பு மய்யம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்தில் அளவிற்கு அதிகமாக மழைபெய்துவிட்டது என்று அறிக்கை ஒன்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் மற்றுமொரு வேடிக்கை என்னவென்றால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலத்தை இரண்டு மூன்றாக பிரித்துள்ளது, அதாவது மேற்கு ராஜஸ்தான் கிழக்கு ராஜஸ்தான் என்று பிரித்துள்ளது. இதில் மேற்கு ராஜஸ்தானின் மிதமிஞ்சிய மழை என்றும் கிழக்கு ராஜஸ்தானில் மழையே பெய்யவிலை -1 என்று குறிப்பிட்டுள்ளது, அதே போல் கடுமையான மழையால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்திலும் மழை அளவை மிகவும் குறைவாக காட்டி யுள்ளது,

இதில் கருநாடகம் மற்றும் கேரளாவை மழை குறைவாக பெய்த பகுதிகள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,  இந்த அறிக்கையின் அடிப்படையில் இனி தமிழகத்திற்கு தண்ணீர் தரப்போவது கிடையாது என்பது உறுதியாகிறது, அதே போல் இந்த அறிக்கையின் படி வறட்சி நிவாரணம் எதுவும் தமிழகத்திற்கு கிடைக்கப்போவதில்லை.    மத்திய அரசு ஒவ்வொரு விவகாரத்திலும் தமிழகத்தை ஏதோ ஒருவகையில் நெருக்கடி கொடுத்து தமிழகத்தின் வாழ்நிலையை மேலும் மேலும் சிக்கலுக்கு ஆளாக்கி வருகிறது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner