கடவுள் நம்பிக்கை இல்லை; புத்த வழிபாடு பிடிக்கும் அக்ஷரா ஹாசன் விளக்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தையைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், புத்த வழிபாட்டில் கவனம் செலுத்துவது பிடிக்கும் என்று கமல்ஹாசனின் மகள் நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடிப்பில் அடுத்து வெளி வந்துள்ள விவேகம் படத்தில் நடிகை அக் ஷரா ஹாசன் நடித்துள்ளார். அப்படத்தில் நடித்தது தொடர்பாக சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்கள் தந்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவர். உங்கள் அக்கா ஸ்ருதியோ கடவுள் நம்பிக்கை உள்ளவர். நீங்கள் எப்படி? என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அக்ஷரா ஹாசன், “கடவுள் நம்பிக்கை விசயத்தில் நானும் அப்பா மாதிரிதான். அதில் எனக்கு நம் பிக்கை இல்லை. ஆனால், கடவுளை நம்பு கிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். என் அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அளவுக்கு நான் கடவுள் பற்றி யோசிப்பதில்லை. எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விசயங்கள் கற்றுவருகிறேன். அதனால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன்” என்றார்.

- ‘தி இந்து’ 27.7.2017
தகவல்: சீ.இலட்சுமிபதி, தாம்பரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner