குருமூர்த்தியின் சர்டிபிகேட்டுகள் தேவையில்லை மானமிகு வீரமணி அவர்களுக்கு....

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- மின்சாரம்

திருவாளர் ‘சோ’ ராமசாமி மறைந்த பின் ‘துக்ளக்’  ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் ரொம்பத்தான் துள்ளுகிறார், யாரையும் எடுத்தெறிந்து  எழுதுவது என்ப தைத்தான் இயல்பாகக் கொண்டுள்ளார்.

எழுத்துகளில் நிதானம் இல்லை - யாரைப் பற்றி எழுதுகிறோம் என்ற மரியாதையும் கிடையாது. பூணூல் கோத்திரத்துடன் துள்ளிக் குதிக்கிறார்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு அவாளின் அதிகாரம் வந்தவுடன் இறக்கை முளைத்து விட்டது. திமிர் தனத்துடன் எழுதும் கொழுப்புத் தலைக்கேறி விட்டதாகத் தெரிகிறது.

ஆடட்டும் - ஆடட்டும் - துள்ளிய மாடு பொதி சுமக்கும் என்பது நம்நாட்டு சொல வடை அல்லவா?

கேள்வி: 30.8.2017 ‘துக்ளக்’கில், ‘அய்யோ பாவம் சிதம்பரம்‘ கட்டுரையில், ப.சிதம்பரம் பிராமணியத்தை கீழ்த்தரமாகப் பேசியது பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனால் 13.9.2017 துக்ளக் கேள்வி - பதில் பகுதியில்,  அதே சிதம்பரத்தை, ‘சட்டமும், பொருளாதாரமும் படித்து விஷயமறிந்த ப.சிதம்பரம்’ என்று கூறியிருக்கிறீர்கள். இரண்டு வாரத்தில் ‘துக்ளக்’ இப்படி மாற்றி எழுதியுள்ளதே?

பதில்: ப.சிதம்பரம் பிராமணியத்தை கீழ்த்தரமாகப் பேசியது உண்மை. அதை எழுதினோம். அவர் சட்டம், பொருளாதாரம் படித்து விஷயமறிந்தவர் என்பதும் உண்மை. அதையும் கூறினோம். ப.சிதம்பரம் பிராமணியத்தை இழிவுபடுத்திப் பேசியதால், அவர் சட்டம், பொருளாதாரம் அறியாதவராகி விடுவாரா? அவ்வளவு விஷய மறிந்தவர்,  இப்படி கி.வீரமணி போல தாழ்ந்து பேசியிருக்கிறாரே என்று துக்ளக் கேட்பது போல் உங்களுக்குத் தோன்ற வில்லையா?

(“துக்ளக்“ -27.9.2017 பக்கம் 15)

திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாளே, என்ன தரம் தாழ்ந்து பேசினார் திராவிடர் கழகத் தலைவர்? திராணியிருந்தால் எடுத்துக்காட்டி எழுதட்டும்; வீரமணி அவர்களைப் பற்றி உமக்குத் தெரியாமல் இருக்கலாம்-  உமது சகதோழராக இருந்து அண்மையில் மரணம் அடைந்த திரு வாளர் சோ.ராமசாமியின் கணிப்பு வீரமணி அவர்களைப்பற்றி என்னவென்று தெரி யுமா?

தெரியாவிட்டால் என்ன - தெரிய வைக்கத்தான் நாங்கள் இருக்கிறோமே.

எவ்வளவு குறுக்குக் கேள்விகள் கேட்டாலும் பொறுமையாகப் பதில் கூறுகிறார். இத்தனைக்கும் இவர் கருத்துக்களும், என் கருத்துக்களும் அநேகமாக வேறுபட்டே நிற்கின்றன. இப்பேட்டியில் நான், வீரமணியிடம் கேட்ட கேள்விகள் - பல வகையானவை. சில கேள்விகள் - என் கருத்தை பிரதிபலிப்பவை; வேறு சில கேள்விகள் பொதுவாக திராவிடர் கழக கொள்கைகளுக்கு எதிராக பலரால் நினைக்கப்படும் கருத்துக்கள்; மேலும் சில கேள்விகள் - எதிர்வாதமாக எழுபவை.

...... இப்படி கேள்விகள் அமைந்ததால், இப்பேட்டி பல இடங்களில் ஒரு விவாதமாகவே மாறியும் கூட, அவர் தனது பொறுமையை இழக்காமல் பதில் கூறிய விதம் என்னைக் கவர்ந்தது.

பேட்டியைப் பிரசுரிக்கும் முன்பாக, அவருடைய நற்பண்பை மனதாரப் பாராட்டுவது என் கடமை.

- ‘துக்ளக்’  11.1.1982

வீரமணி தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார் என்பதற்கு இதுதான் அடையாளமா?

சோவுக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான் - தங்களிடம் எதிர்பார்ப்பதும் தவறுதான்!

‘துக்ளக்‘ மட்டுமல்ல;  அக்ரகார வார ஏடாகிய ‘ஆனந்த விகடன்’ என்ன எழுதுகிறது?

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றவர் பேசும் போது குறுக்கே பேச மாட்டார். கவனமாக சில சமயம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மை யாகக் கேட்பார். வயதில் சின்னவர் களைக் கூட ‘வாங்க போங்க’ என்றுதான் சொல்லுவார். (‘ஆனந்த விகடன்’ - 22.5.1983)

தரத்தைப் பற்றி இந்தப் பார்ப்பனர்களா பேசுவது? தமிழ்நாட்டின் மூத்த தலைவர் - அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச் சராக இருந்த கலைஞர் பற்றி இவர்களின் தரம் குறையாத தாக்குதல் என்ன தெரி யுமா?

கேள்வி: ‘கருணாநிதி’ என்று அவரது பெயரைச் சொல்லி அழைப்பதை அவர் தவறாகக் கருதுகிறார். இனிமேல் ‘திருக் குவளை தீயசக்தி’ என்று அழைப்பேன் என ஜெயலலிதா திருச்சி பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளாரே; இது சரியா?

பதில்: இந்தப் பட்டங்களுக்கு ஜெயலலிதா பொறுப்பல்ல. ‘தீயசக்தி’ என்பது எம்.ஜி.ஆர். கொடுத்த பட்டம். திருக் குவளை என்பது பிறந்த ஊர்! இவற்றைக் கூறுகிற ஜெயலலிதாவை குற்றம் சொல்வதில் நியாயம் இருக்குமா?

(‘துக்ளக்’ - 1.9.2010 - பக்கம் 20, 21)

குரு மூர்த்திகளின் ‘துக்ளக்’கின் தரத்தைப் பார்த்தீர்களா? எம்.ஜி.ஆர். சொன்னால் என்ன? எம்.ஜி.ஆரின் பாட்டன் சொன்னால் என்ன? அதை நியாயப்படுத்த முடியுமா? எம்.ஜி.ஆர். சொன்னாலும் தவறுதான் - அதையே ஜெயலலிதாவும் சொன்னாலும் தவறுதான் - ஒரு மூத்த தலைவர் கலைஞர் - வயது கருதியாவது உரிய மரியாதை கொடுக்க வேண்டாமா? என்று எழுதியிருந்தால் பரவாயில்லை, பார்ப்பனர்களுக்குக் கூட கொஞ்சம் பண் பாடு ஊறுகாய் அளவாவது இருக்கிறதே என்று கொஞ்சம் மகிழ்ச்சி அடையலாம்.

ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, சோவாக இருந்தாலும் சரி,  குரு மூர்த்தியாக இருந்தாலும் சரி,  பூணூல் திமிர்த்தனம் அவர்களின் பிறவிக் குணம் என்றுதானே கருத வேண்டியுள்ளது.

‘துக்ளக்’ மட்டுமல்ல! ‘கல்கி’யின் கர்வம் என்ன?

கேள்வி: கருணாநிதியை தீயசக்தி என்று தான் அழைக்க வேண்டும் என்று ஜெயலலிதா பேசியது இன்னும் கூட அவர் திருந்தவில்லை என்பதைத் தானே காட்டுகிறது.

பதில்: இப்போது ‘தீயசக்தி’ என்று அழைப்பதென்ன! வெகுகாலமாகவே அப்படித்தான் கூறி வந்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவருக்கு கலைஞர் பெயரில் விரோதம் வளர்ந்து விட்டி ருக்கிறது. அதானால் தான் தனிநபர் தாக்குதலும் பழகிப்போனது.

(‘கல்கி’, 5.9.2010 - பக்கம் 5)

(குறிப்பு: இந்தக் கேள்வி சிறப்புப் பரிசு பெறுகிறது என்றும் கல்கி அறிவித்துள்ளது)

இந்தக் கூட்டம் தான் தரம் பற்றியெல் லாம் தம்பட்டம் அடிக்கிறது.

இன்றைக்கும் ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு ‘நாங்கள் பிராமணர்கள் - துவி ஜாதியினர் - இரு பிறப்பாளர் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் - நீங்கள் எல்லாம் சூத்திரர்கள், வேசி மக்கள்’ என்று சொல்லாமல் சொல்லும் கூட்டம் தரத்தைப் பற்றியெல்லாம் பேசத் தரமுண்டா? தகுதி யுண்டா?

வரலாறு அறிந்தவர்களும், நடப்பு களைத் தெரிந்தவர்களும் பார்ப்பனர்களின் ஜாதி ஆணவத்தையும், சூழ்ச்சியையும் குறித்து கூறிய வார்த்தைகள் தான் - வரலாறு நிறைய கூறப்பட்டு இருக்கிறதே! காலந்தாழ்ந்தாவது சிதம்பரங்கள் பேசும் நிலையை உருவாக்கியதே குருமூர்த்தி வகையறாக்கள்தானே!

ஆத்திரப்பட்டு என்ன பயன்? இன்னும் சுமக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. குருமூர்த்திகளே - தயராக இருங்கள்! இருங்கள்!!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner