மோகன் பாகவத்தை குமுதம் கண்டித்ததுண்டா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. வுக்கு ஞானக்குருவாக இருக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் என்ன சொல்லுகிறார் - இந்தக் காலத்திலும் அதைப் பற்றி எல்லாம் ‘குமுதம்’ கண்டுகொண்டது உண்டா? சிலா கித்தது உண்டா?

இந்தூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் (30.10.2014) பேசிய மோகன் பாகவத்:

“இன்று பெண்கள் அதிகம் கல்வி கற்க ஆரம்பித்து விட்டனர். திருமணத்தின் போது கணவன் மனைவி இருவரின் கல்வியும் சரிசமமாக இருந்து விடுகிறது, சில வேளைகளில் கணவனை விட மனைவி அதிகம் படித்தவளாக இருக்கிறாள் அல்லது திருமணத்திற்குப் பிறகு படித்து பட்டம் பெற்றுவிடுகிறாள்.

சிலர் கணவனை விட உயர் பதவிக்கு சென்றுவிடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கிவிட்டது. இந்த இடத்தில் கணவனின் மனநிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டுவிடும். இங்கு ஈகோவும் தோன்றிவிடுகிறது, இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிகமான விவாகரத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறது” என மோகன் பாகவத் கூறினார்.

பெண்கல்வியையும், பெண்ணின் சுதந்திரத்தையும் மறைமுகமாக தாக்கிப் பேசிய மோகன் பாகவத் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய உரையை கூறினார். அதாவது “மனைவி கணவனுக்கு (அடிமைச்)சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ளவேண்டும். பெண்கள் இந்தக்கடமையில் இருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கி விடுவது நல்லது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் (சோசியல் காண்டிராக்ட்) மாத்திரமே” என்று தன்னுடைய பேச்சில் கூறினார்.

“மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தரவேண்டும். இது பெண்ணின் கடமை; இந்தக் கடமையில் இருந்து ஒரு பெண் விலகிவிட்டால்  அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. விலக்கிவிடவேண்டும். கணவனின் தேவைகளை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை  முடித்து விடவேண்டும்.” என்றும் கூறினார்.

பாரதமும், இந்தியாவும்

பாரதத்தில் கற்பழிப்பு நடக்க வில்லை; இந்தியாவில் தான் கற்பழிப்பது நடக்கின்றதாக முன்பு ஒரு முறை கூறியதால் மாட்டிக் கொண்டு கடும் விமர்சனத்துக்கு ஆளானார் இதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் கல்வி பற்றி இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியைப் பெரியார் வலியுறுத்தியது என்பது சாதாரணமா? பெண்கள் பெரியார் பற்றி சிலாகிப்பது பஞ்சமா, பாதகமா? குமுதத்திற்கு ஏன் இந்த பார்ப்பனியப் புத்தி?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner