தாது வருஷப் பஞ்சம் போய் மோடி வருஷப் பஞ்சமும் வந்ததே!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜஸ்தான், ஜார்கண்ட் சத்தீஸ்கர் மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற ஏழைகளின் வாழ்வு மிகவும் மோசமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயத்தொழில் மிகவும் முடங்கிவிட்டதால் விவசாயக்கூலிகள் நகரங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆரம் பித்தனர். இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நகரங்களில் ஏழைகளின் வேலைக்கு வேட்டுவைத்தது.

வட இந்தியாவில் 83 விழுக்காடு கிராமங்கள் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன.  இந்த நிலையில் இக்குடும்பங்களுக்கு ரேசன் உணவுப் பொருள்கள் மட்டுமே பசியைப் போக்கும் ஒரு வழியாக இருந்தது, ஆனால் இதற்கும் ஆதார் அட்டை பெரும் தடையாக இருக்கிறது, இதனால் பல குடும்பங்கள் காட்டுத்தாவரங்களையும், வனத்தில் கிடைக்கும் கிழங்குகளையும் சாப்பிடும் நிலையை ஏற்படுத்தி விட்டது. இதனால் பெரியவர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு உடல் நலக்குறைபாட்டிற்கு ஆளாகி மரணமடைந்து வருகின்றனர்.  

உத்தரப்பிரதேசத்தில் வடமேற்கும் தெற்குப் பகுதி மாவட்டங்களிலும் பட்டி னிப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  முக்கிய மாக  வறுமையின் பிடியில் உள்ளவர் களுக்கு ரேசன் உணவுப்பொருள் மட்டுமே உணவுக்கான காரணியாக இருந்த நிலையில், ரேசனில் உணவுப்பொருள் வழங்காத காரணத்தால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.  

வடகிழக்கு மாவட்டமான பரேலியில் பதேகஞ்ச் என்ற பகுதியில் சகீனா என்ற அய்ம்பது வயது பெண் ஒருவர் பட்டினியால் மரணமடைந்தார். இவரது கணவர் மோகிம் கான் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். இவர்களுக்கு ரேசன் பொருள் மட்டுமே உணவாக இருந்து வந்தது. இந்த நிலையில் முதியவரின் மனைவியும் நோய்வாய்ப்பட்டார். 

இதனால் அவரது மனைவிக்குப் பதிலாக நோயுற்ற நிலையிலும் ரேசன் பொருள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆதார் இணைப்பு மற்றும் குடும்பத்தின் பெண் உறுப்பினர் வந்தால் தான் ரேசன் தருவேன் என்று ரேசன் கடைக்காரர் கூறிவிட்டார். இதனால் அவர் வெறும்கையுடன் திரும்பினார். இந்த நிலையில் இரண்டுபேருக்கும் உடல் நிலை மோசமாகி விட்டது. இவர் இருக்கும் பகுதியில் கடுமையான வறுமை நிலவு வதால் வேறு யாரும் உணவு தர முடியாத நிலையில் இருந்த காரணத்தால் 4 நாள்கள் பட்டினியால் இருந்த பிறகு முதியவரின் மனைவி மரணமடைந்தார். 

பட்டினியால் பெண் ஒருவர் மரண மடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவரின் மரணத்தை விசாரித்த உள்ளூர் நிர்வாக மாவட்ட துணை மாஜிஸ்ரேட் தலை மையில் குழு ஒன்று அனுப்பி வைக்கப் பட்டது.  

இது குறித்து முதியவர் மோகிம் கான் கூறும் போது, “நான் பலமுறை எங்களது நிலையைக் கூறி ரேசன் பொருள் தரும்படி ரேசன் கடைக்காரரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர். எனது மனைவி பட்டினியால் துடிதுடித்துச் சாவதை நான் என் கண்ணால் பார்த்தேன்.

ஆனாலும் அவளுக்கு உணவு தர இயலாத நிலையில் இருந்தேன். நான் வெளியே சென்று வயலில் உள்ள கிழங்குகளைச் சாப்பிட்டு விடுவேன்; ஆனால் எனது மனைவி அதைச்சாப்பிட இயலாதவளாக இருந்தார்” என்று கூறினார்.

கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவர் மற்றும் 50 வயது ஆண் ஒருவர் என இரண்டுபேர் பட்டினியால் மரணமடைந்ததாக அரசால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பட்டினி மரணம் உத்தரப்பிர தேசத்திலும் தொடர் கதையாகி விட்டது.     

கோடிக்கணக்கில் செலவும் செய்து ராமருக்கு சிலைவைக்க ஆர்வமுடன் இருக்கும் சாமியார் ஆதித்யநாத் தலைமை யிலான மாநில அரசு பொதுமக்களை பட்டினியால் சாகவைத்து வேடிக்கைப் பார்க்கிறது.

அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து அந்தியோதயா அன்ன யோஜனா குடும்பங்கள், அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள், நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள், முதியோர் உதவித் தொகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள், விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துத் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை (40 விழுக்காட்டுக்கும் மிகுதியாக உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள், குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள்’ ஆகி யோர் இந்தப் பட்டியலில் இடம்பெறு கிறார்கள்.

இந்தப்பட்டியல் வரையறையிலோ பல்வேறு குழப்பங்கள்! இந்த குழப்பங் களால் உண்மையான பயனாளிகளுக்கு உணவுப்பொருள் போய்ச்சேராமல் அவர்கள் பட்டினியால் மரணமடைகின்ற னர். தமிழகத்திலும் சில மாதங்களாக ரேசன் கடையில் உணவுப்பொருள் வழங்க மறுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

திட்டங்கள்,  அறிவிப்பு அளவிலேயே உள்ளன. செயல்படுத்துவதிலோ, பல்வேறு குளறுபடிகள்!, பிஜேபி ஆட்சிக்கு வந் தாலும் வந்தது - மக்களுக்கு நாச காலம் பிறந்து விட்டது.

தாது வருஷம் பஞ்சம் பற்றி சொல்லுவ துண்டு. இப்பொழுது வந்துள்ளதோ மோடி வருஷ பஞ்சமோ பஞ்சம்!


 õ¼ûŠ ð…ê‹ «ð£Œ
«ñ£® õ¼ûŠ ð…꺋 õ‰î«î!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner