எங்கள் பேரர்களும் உம் வழியே!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 


சிற்றெறும்பாய் நீ

ஊர்ந்த தெல்லாம் கூட

செதுக்கிய சிலை யாயிற்றே!

கற்றறிந்த கல்வி யெல்லாம்

கழகத்திற்கே உர மாயிற்று!

பெற்றோருக்கு நீ செய்ததெல்லாம்

பெரும் புகழேயன்றி வேறு இல்லை

மற்றோருக்கு உழைத்துழைத்தே - மக்கள்

மனமெல்லாம் மணமுங்கொண்டாய்!

புற்றரவாய்ப் படமெடுக்கும் - பகைப்

பாம்பைப் பதம் பார்க்கின்றாய்

விற்றுப் பிழைக்கும் வீணர்தம்

விலாப் புரத்தை முறிக்கின்றாய்

இற்றைக்கும் எண்பத்தைந்தில் - இரவைப்

பகலாக்கி உழைக்கின்றாய் - உம்மை

எமக்குக் கொடையளித்த

ஈரோட் டிறைவனுக்குக் கோடி நன்றி!

பெற்ற தாயினும் உனை மதிப்போம் - உம்மால்

பெற்றதோ பெருங்கோடி!

பெருமகனார் வீரமணி வாழியவே - எங்கள்

பேரர்களும் உம் வழியே!

- கவிஞர்  கலி.பூங்குன்றன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner