பீகார் மாநிலத்தில் தேர்வு அனுமதிச்சீட்டில் வினாயகன் படமா? தேர்வு எழுதுவது மாணவனா, வினாயகனா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பீகார் மாநிலத்தில் தர்பங்கா பகுதியில் உள்ள லலித் நாராயண் மித்திலா பல்கலைக் கழகத்தின்சார்பில் நடைபெறும் தேர்வுக்கான மாணவர் கிருஷ்ண குமார் ராய் என்பவரின் அனுமதிச்சீட்டில் வினாயகன் படம் இடம்பெற்றிருந்தது. அம்மாணவர் அதிர்ச்சி அடைந்தார். கடந்த 4ஆம் தேதி முதல் தேர்வெழுத வேண்டிய நிலையில், தேர்வு அனுமதி அடையாள அட்டையில் அம்மாண வரின் படம் இருக்க வேண்டிய இடத்தில் வினாயகன் படத்துடன் அனுமதிச்சீட்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

நெஹ்ராவில் உள்ள ஜேஎன் கல்லூரியின் பி.காம் முதலாமாண்டு மாணவரான கிருஷ்ண குமார் ராய் என்பவருடைய தேர்வு அனுமதிச் சீட்டில் வினாயகன் படம் இருந்ததால், தேர்வெழுதச் சென்ற மாணவருக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. மாணவரின் தேர்வு அறை அனுமதிச்சீட்டில் பிழையாக வினாயகன் படம்  இடம் பெற்றதையடுத்து, மாணவர் தம்முடைய அடையாளத்துக்குரிய பிற ஆவணங்களை அளித்ததையடுத்து, மாணவர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்.

தவறுக்கு யார் பொறுப்பு?

தேர்வு அறைக்கான மாணவர் அனுமதிச் சீட்டில் வினாயகன் படம் இடம்பெற்றதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல என்று குறிப் பிட்டுள்ளது.

இத்தனைக்கும் பல்கலைக்கழக தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அலுவலர் கையொப்பமும் தேர்வு அடையாள அட்டையில்  உள்ளது.

தேர்வுக்கான விண்ணப்பத்தை இணைய மய்யத்திலிருந்து மாணவர் இணையத்தின்வாயிலாக விண்ணப்பித்த போது பிழை ஏற்பட்டிருக்கலாம். கல்லூரி முதல்வர் கையொப்பம் இடாதவரை தேர்வுக்கான அனுமதி சீட்டு செல்லத் தக்கதல்ல. ஆகவே, பல்கலைக்கழக இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய் யப்பட்டு, முதல்வர்கள் கையொப்பமிட்ட பின்னரே மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கவேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது  என்று பதிவாளர் முஸ்தபா கமால் அன்சாரி கூறினார்.

மாணவர் ராய் இதுகுறித்து கூறும் போது, “கடவுளின் கருணையாலேயே பல்கலைக்கழகம் இயங்கிவருவதாகத் தெரிகிறது. அதற்கு ஆதாரமாக தவறான அட்டை உள்ளது’’ என்றார்.

- ந.க.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner