பார்ப்பானைப் பாரீர்! திராவிடம் என்பது இனவாதமாம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திராவிடம் என்பதும், தமிழ் என்பதும் ஒன்றுதான் என்பதை மறைத்து, திராவிடம் என்பதும், தமிழ் என்பதும் வெவ்வேறா னவை போன்றதொரு தோற்றத்தை உருவாக்கி, அதையே நிலைபெறச்செய்யும் நோக்கத்தில் வசதியாக இன வேறுபாட்டுக்கு காரணமான ஆதிக்க 'ஆரியம்' குறித்து குறிப்பிடாமல் 'திராவிடம்' என்று பேசுவதே 'இனவாதம்' என்று கயிறு திரித்து வரு கின்றனர்.

திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த குடி தமிழ்க்குடி. தமிழ்மொழியே தெலுங்காகவும், கன்னடமாகவும், மலையா ளமாகவும் உருப்பெற்றன எனும் வரலாற்றை இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

திராவிடர்கள், தமிழர்கள் கட்டிய கோயில்களில் வழிபாடு செய்யும் மொழியாக 'தேவ பாஷை' என்று கூறி சமஸ்கிருதத்துக்கு  மட்டுமே இடமுண்டு என்றும், தமிழ் மொழியை 'நீச பாஷை' என்றும் கூறும் பூணூல் கூட்டம் இன்றைக்கு திராவிடம் என்பது இனவாதம் என்றும், தமிழுக்கு மட்டும் ஆதரவு உண்டு என்பது போன்றும் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

தமிழுக்கு இடமுண்டு என்றும், திராவிடத்துக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டு ராஜீவ் மல்கோத்ரா என்பவர் 'இன்ஃபினிட்டி அறக்கட்டளை' எனும் பெயரில் ஓர் இணைய தளப் பக்கத்தை உருவாக்கி, திராவிட இனவாதத்திலிருந்து பாரதத்தின் பெருமையாக தமிழின் மரியாதை சேர்ப்பதற்காக புதிய பரப்புரையை  தொடங்கி யுள்ளதாகவும், அதற்காக இப்போதே நன்கொடைகளை அளியுங்கள் என்றும் கோரி, இணையத்தின் முகவரியையும் குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

தமிழ் இருக்கைக்கு எதிர்ப்பாம்!

அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுக்கான ‘தமிழ் இருக்கை’ அமைக்கப்படுவதற்கு எதிரான கருத்துகளை  அந்த இணையத்தில்  ராஜீவ் மல்கோத்ரா தன் கருத்தாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இசுலாமிய, மாவோயிஸ்ட் தீவிரவாதம் குறித்தெல்லாம் பதிவிடப்படுகின்ற அதேநேரத்தில் ‘காவிப்பயங்கரவாதம்’ குறித்து இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner