இந்தியாவில் 59,830 கோடீஸ்வரர்கள்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தனிநபர் வருமானமாக ரூ.1 கோடிக்கு மேல் கொண்டுள்ள இந்தியக் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் 59,830 ஆக உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2014-15 நிதியாண்டுக்கான தனிநபர் வருமான விவரங்கள் 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் கணக்கிடப்பட்டு வருமான வரித் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. அதில், முந்தைய ஆண்டை விட 23.5 சதவிகித உயர்வுடன் 59,830 பேர் 1 கோடிக் கும் மேல் வருமானம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.1.54 லட்சம் கோடியாகும். முன்னதாக கடந்த ஆண்டில் வெளியான 2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டின் கோடீஸ் வரர்கள் பற்றிய அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் 48,417 கோடீஸ்வரர்கள் இருந் தனர். அவர்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.2.05 லட்சம் கோடியாக இருந்தது.

தங்களது வருமானத்துக்கு ஏற்ப செலுத்தப்படும் வரியைக் கொண்டு இவ்விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் ரூ.2.5 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி வசூலிக்கப்படுவதில்லை.

2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டில் மொத்தம் 3.65 கோடிப் பேர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் 1.37 கோடிப் பேர் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்களாக இருந்தனர்.

மேலும், வரி செலுத்தியவர்களின் மொத்த வருமானம் 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ. 21.27 கோடியாக உயர்ந்து உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அது ரூ.18.41 லட்சம் கோடியாக மட்டுமே இருந் தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner