உ.பி. பி.ஜே.பி அரசின் வெட்கம் கெட்ட செயல்! டெக்கான் கிரானிகிள் நாளிதழின் தலையங்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அரசியல் நோக்கம் கொண்டதாகக் கூறப்படும், உ.பி. மாநிலம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட 22,000 வழக்குகளைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட  சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது,  முதல்வர் ஆதித்தியநாத் மற்றும் 12 பேர் மீது 22 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வரும் வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான வழியை உ.பி. மாநில ஆளுநர் திறந்துவிட்டிருப்பது மிகுந்த கவலையையும், சோர்வையும் அளிப்பதாக இருக்கிறது. அரசியல்வாதி கள் மீது நியாயமற்ற முறையில் தவறான வழக்குகள் தொடுக்கப்படுவதற்காக உள்ள வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு பார்க் கும்போது, அவை திரும்பப் பெறப்படு கின்றன என்று கூறப்படுவதால் துணிவு பெற்ற உ.பி. அரசு,  ஒரு படி மேலே சென்று, 2013 முசாபர்நகர் கலவர வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. இந்த வழக்குகள் திரும்பப் பெறுவ தால், பொதுமக்களின் நலன்கள் ஏதேனும் பாதிக்கப்படுமா என்று அரசு  நீதிபதியின் கருத்தைக் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்குகள் முதல்வர் மீது மட்டுமல் லாமல்,  உமேஷ் யாதவ் போன்ற பா.ஜ.க. தலைவர்களின் மீதான வழக்குகளுமாகும்.

சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக சீரழித்த மதக்கலவரங்களைத் தூண்டிவிட்ட - வெறுப்பையும், வன்முறையையும் தூண்டி விட்ட பேச்சுகளை பேசியது என்ற உணர்ச் சிப்பூர்வமான குற்றவியல் வழக்கைத் திரும்பப் பெறுவது, முதலமைச்சருக்கும், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் ஏற்புடையதாக இருந்த போதிலும்,  சட்டப் படியான நடவடிக்கை நடைமுறையையே அது சீரழித்துவிடுவதாக இருக்கிறது. அச்சம் தரும் வகையில் நடந்தேறிய அந்த மதக் கலவரங்களின்போது,  மக்கள் பலர் கொல்லப் பட்டதுடன் அதிக அளவிலான எண்ணிக்கை கொண்ட மக்கள்  காயமடைந் தனர். மேலும், கலவரப் பகுதிகளில் மக்கள் பேரச்சத்துடனேயே வாழ வேண்டியிருந் தது. ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சி மாறி வரும்போதெல்லாம், இவ்வாறு வழக் குகளைத் திரும்பப் பெறுவது என்பது வழக் கமானதாகவே ஆகிப் போனால்,  சமூகத் தின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும். தாங்கள்எதிர் கட்சியாக இருக்கும் போது, தங்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதற்காகவே தங்கள் மீது பொய்யான வழக்குகளை அப்போதைய அரசு பதிவு செய்திருந்தது என்று கூறி தங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான வெட்கம் கெட்ட ஆளும் கட்சியின் துணிவு அருவருக்கத் தக்கதாக உள்ளது. முறையானஇறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை இந்த வழக்குகள் அனைத்தும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். முசாபர்நகர் கலவர வழக்கில் உ.பி. அரசு நடந்து கொள்வதைப் போன்ற ஒரு முன்மாதிரி உருவாவதற்கு அனுமதிக் கப்படக்கூடாது.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’: 24.1.2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner