பிச்சைக்காரர்கள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிச்சைக்காரர்கள்

இந்தியாவில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் இதில் 5000 பிச்சைக்காரர்கள் வீட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள் ஆவார்கள்.

ஒரு தகவல்

உலகில் 6100 மொழிகள் உள்ளன. இதில் தமிழ் 16ஆம் இடத்தில் இருக்கிறது.

20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களில் 7 விழுக்காட்டினருக்கு ஜெர்ம் செல்கியூமர் என்ற சினைமுட்டை உறுப்புப் புற்று நோய் வருகிறது.

தெரியுமா?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்றே மூன்று பாடங்கள்தாம். ஆனால் மற்ற சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளிலோ முதல் வகுப்பிலேயே எட்டுப் பாடங்களாம்!

பிள்ளைகள் பொதி சுமக்கிறார்கள்.

மோகன் பாகவத்துக்கு சங்கராச்சாரியார் எதிர்ப்பு

இந்தியாவில் வாழ்வோர் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார் அல்லவா. அதற்கு எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்துள்ளார். துவாரகா பீட சங்கராச்சாரியார் சுவரூப்னானந்த சரஸ்வதி.

“ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இத்தகு கருத்துக்கு நாட்டின் சமூக அடிப்படைக் கட்டமைப்பையே சீர்குலைக்கும்”.

எச்சரிக்கை

2017இல் இந்தியாவில் வேலையற்றோர் 17.7 மில்லியன். 2018இல் இது 18 மில்லியனாக உயரும் என்று அய்.நா. எச்சரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner