ராஜாஜி -அம்பேத்கர் பார்வையில் இராமன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- கவிஞர் கலி.பூங்குன்றன்

 

இராமராஜ்ஜியம் அமைக்கப் போவ தாகக் கூறி ராமராஜ்ஜிய ரத யாத்திரையை மேற்கொண்டுள்ளது விசுவ ஹிந்து பரிசத்.

இராமாயணம் பற்றிய தத்துவப் போதனை தந்த பெரியார் அவர்களால் தமிழ் மண்ணில் ஆழமாக வேரூன்றிய நிலையில் வேறு எந்த மாநிலத்திலும் ஏற்படாத எதிர்ப்பு அனல் நமது தமிழ் மண்ணில்  தகித்து வெடித்துக் கிளம்பியது.

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் எதிர்ப்பு என்று ஆச்சரியப் படுபவர்கள் தமிழ்நாட்டில் அய்யா பெரியாரின் பங்களிப்பை சரிவரப் புரிந்து கொள்ளத் தவறியவர்களே! தந்தை பெரியார் எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் எனும் ஆய்வுநூல் எண் ணற்றப் பதிப்புகளை கண்டுள்ளது -  ஸிகிவிகிசீகிழிகி - கி ஜிஸிஹிணி ஸிணிகிஞிமிழிநி  என்று ஆங்கிலத்திலும் வெளிவந்தது. சச்சி இராமாயண் என்று இந்தியிலும் வெளி வந்துள்ளது.

தொடக்கத்தில் இந்தி இராமாயணம் தடை செய்யப்பட்டது என்றாலும், பிறகு உச்சநீதிமன்றத்தால் தடை தகர்க்கப்பட்டது. பாபர் மசூதியை இடித்த சங்பரிவார் கலவரக் கும்பல், அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவதற்கு கச்சையை இறுக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பியிருக் கிறது. அதன் ஒரு புள்ளிதான் இப்பொழுது கிளம்பியுள்ள ராம ராஜ்ஜிய யாத்திரை!

கெட்டவாய்ப்பாக அவர்கள் தமிழ்நாட்டி னுள்ளே நுழைய முடிவெடுத்தார்கள். தந்தை பெரியார் ஊட்டிய இராமாயணத் தொடர்பான எதிர்ப்பு எரிமலை கண் சிவந்து  ஆயிரங்கால் சிங்கமாக ஆர்த்தெழுந்தது.

தமிழ்நாட்டின் இந்தக் கொந்தளிப்பு - இந்தியக் துணைக் கண்டத்திற்கே இந்த இராமாயணம் - இராமன் - கந்தாயங்களை அவிழ்த்துக் கொட்டப் போகிறது.

1971ஆம் ஆண்டில் சேலத்தில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் தந்தை பெரியாரை நோக்கி ஜன சங்கக் காலியினர் வீசிய செருப்பு, இராமன் பக்கம் திரும்பியது.

இராமனைச் செருப்பாலடித்த திமுகவுக்கா ஓட்டு என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு புது முறுக்கை ஏற்படுத்தியது. ராஜாஜி தலைமை யிலான சுதந்திரக் கட்சியும் பார்ப்பனர்களும் ராமனை செருப்பாலடித்த கட்சிக்கா ஓட்டு என்று பெரும் பிரச்சாரப் புழுதியில் ஈடுபட்டனர். ஆனால் மக்களோ ஆமாம் அவர்களுக்குத்தான் வாக்கு என்று கறாராகத் தீர்ப்புக் கூறினர்.

1967 தேர்தலில் 138இடங்களைப் பிடித்த திமுக 1971இல் 183 இடங்களைக் கைப் பற்றினர். இராமனை செருப்பாலடிக்கும் முன் 138, செருப்பாலடித்த பின் 183 இடங்கள் என்று பொதுவான கருத்து உருவாகி விட்டது.

இந்த உணர்வுத்தீயை தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி இந்தியா முழுவதும் பற்ற வைப்பதற்கான ஒரு சூழ்நிலையை பா.ஜ.க.  அதன் பரிவாரங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

நேற்று (23.3.2018) மாலை சென்னையில் இராமாயணம் -இராமன் - இராமராஜ்ஜியம் என்னும் தலைப்பில் ஒரு சிறப்புச் சொற்பொழிவைத் தொடங்கிவிட்டார் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள். இன்னும் அது நீளக்கூடிய வாய்ப்புண்டு.

விடுதலையும் இத்திசையில் தன் வீரப் பராக்கிரமத்தைக் காட்டவேண்டாமா?

தந்தை பெரியார் இராமயணத்தைப் பற்றிச் சொன்னதுதான் எல்லோருக்கும் தெரியுமே, தந்தைபெரியாரின் ஆத்மநண்பர் சிறீமான் ராஜகோபாலாச்சாரியர் திருவாய் மலர்ச்சியிலிருந்து தொடங்குவது பொருத்தம் தானே!

உத்திர ராமசரிதம் என்னும் தலைப்பில், சமஸ்கிருதத்தில் பவபூதி என்பவர் எழுதி, க.சந்தானம் அய்யங்கார் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய நூலை சென்னை அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்நூலுக்கு ராஜாஜி முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். இந்தக் கருத்துக்களைப் படிப்பவர்களுக்கு இராஜாஜியா இப்படி எழுதியுள்ளார்? இருக்காதே! நம்ப முடியாது என்கிறீர்களா? உண்மை தான், இவை இராஜாஜி எழுதியவை. அது இதோ!

நாரதர் சொல்லி வால்மீகி இயற்றினார்; இதில் ஒரு விதத் தவறும் இருக்கமுடியாது; ஓர் எழுத்து விடாமல் எல்லாம் ஒப்புக் கொண்டே தீர வேண்டும் என்பதாயி ருந்தால் எனக்கு ஒன்றும் சொல்ல இட மில்லை. அப்படி யில்லை; உனக்குத் தோன்றியதைத் தோன்றியவாறு சொல் லலாம்; குற்றமில்லை என்று பெரியோர் இடம் கொடுத்தால் ராமாயண உத்திர காண்டத்தைப் பற்றிச் சொல்ல விரும்பு கிறேன்.

நானும் எவ்வளவோ முயற்சி செய்து தான் பார்த்தேன் - சிறீ ராமன் உலகத்துக்கு வழிகாட்ட அவதரித்த கடவுள் - சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டபின் ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டுக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்கிற கொடூரக்கதை என் மனசுக்குச் சமாதானப்படுத்திக் கொள்ளவே முடிய வில்லை. அன்புடனும், பக்தியுடனும் முயற்சி செய்திருக் கிறேன்.

பெரியோர்கள் என்னை நாஸ்திகன் - சூனா மானாக் காரன் என்று சொல்லக் கூடாது. உண்மையில் இந்தக் கதையைச் சகிக்க என்னால் முடியவில்லை. நாஸ்தி கனாக இருந்தால் ஒரு வேளை சகித்தி ருப்பேன்.

ராமாயணத்தில் முதல் அத்தியாயத்தில் கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அதில் இந்த அனர்த்த விஷயம் சொல்லப்பட வில்லை. நாடு நகரம் முழுவதும் அறிவு விவேகிகளும் சீலமும் நிறைந்த ஜனங்கள் எல்லோரும் தர்மாத்மாக்கள் வெகு சாஸ்திரங்களை அறிந்தவர்கள் என்றும், அற்ப குணமுள்ளவன் - வித்தை பெறாதவன் - நாஸ்திகன் துஷ்டன் மருந்துக்கும் கூட ஒருவன் அகப்படமாட்டான். என்றெல்லாம் ஓயாமல் பாடப்பட்டிருக்கிறது.

இப்பேர்ப்பட்ட ஜனங்கள், சீதை ஊருக்குத் திரும்பி வந்ததும், பான்மை யிழந்து இவ்வளவு கேவலமாகப் போனது எப்படி?

சிறீராமன் அரசாண்டு வந்த அயோத்திய நகரம் நம் கலிகால சென்னப்பட்டணம், திருச்சிராப்பள்ளியை விடக்  கேடுகெட்ட நிலைக்கு எவ்வாறு வந்துவிட்டது. இந்தக் கலிகாலத்தில் நம்மைப் போன்ற, தாழ்ந்த மதியும் சீர் கெட்ட பண்பும் கொண்டவர் களும் கூடச் சொல்லத் துணியாத பேச்சை, அயோத்தியாவாசிகள், சிறீராமனு டைய பிரிய தேவியைப் பற்றி பேசினார்கள் என்றால் எவ்வாறு ஒப்புக் கொள்வது?

அப்படி யாராவது பேசினாலும் ராமன் தன் காதில் போட்டுக் கொண்டான், அந்தப் பாமர ஜனங்கள் கூட சீதையைக் காட்டுக்கு அனுப்பச் சொல்லவில்லையே. ஏன் ஒரு விசாரணையுமின்றி அக்கிரமமாக இவ்வாறு ராமன் செய்யத் துணிந்தான்? இதை எவ்விதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாது. இதனால் தான் நன்னெறிப் பயில்வதற்கு இந்தக் கதை உதவாது என்று நம் முடைய பெரியோர் இந்தக் கட்டத்தைப் பிர யோகத்தினின்றும் தள்ளிவிட்டார்கள். ஆழ்வார் களும் இதை எடுத்துப் பாடாமல் நீக்கி விட்டார்கள்.

இம்மாதிரியான ஒரு பெரும் அநீதியை சிறீராமச்சந்தின் தன் தேவிக்குச் செய்ததாக எப்படியோ ஒரு கதை கர்ண பரம்பரையாகச் சொல்லிவிட்டு, அந்தக் காலத்திலும் கூட வால்மீகி முனிவரையும் தடுமாறச் செய்தி ருக்க வேண்டும். புண்ணிய கதையாகிய ராமாயணத்தைப் பாட உட்கார்ந்த போதே இந்தப் பொல்லாத அய்தீகத்தை என்ன செய்வது என்று அவர் யோசித்திருக்க வேண்டும்.

அதற்காகவே முனிவர் யுத்த காண்டத் தின் முடிவில், வேண்டாத ஓர் அக்கினிப் பரிட்சையை அமைத்து, அத்துடன் அந்த ஆபத்தும் ஒழியும் என்று எண்ணினார் போல் தோன்றுகிறது. ஆனாலும் அவர் எண் ணம் முடிவு பெறவில்லை. உத்தரகாண்டம் யாரோ எழுதி ராமாயணத்துடன் சேர்ந்தே போயிற்று, ஊர் வம்புக்குப் பயந்து ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியது ராவணன் செய்த செயலை விடப் பெரும் பாவச்செயல்.

ராவணன் அபாயங்களைப் பொருட்படுத் தாமல் இந்த கெட்ட காரியத்தில் இறங்கி ஜடாயுவோடு போர் புரிந்து அவனை வென்று சீதையை இலங்கைக்குத் தூக்கிப் போனான். துஷ்டத்தனமானாலும் தைரியம் கலந்த செயல். ராவணன் காமவெறி கொண்டவ னானாலும் இலங்கையில் தேவியை பலாத் காரம் செய்ய எண்ணம் கொள்ளவில்லை. அசோக வனத்தில் வைத்து அவள் அன்பைப் பெற முயன்று, பலநாட்கள் தன் வெறியை அடக்கியே வந்தான்; அதற்காக உயிரையும் நீத்தான்.

ஆனால் இந்த உத்தர ராம சரித்திரத்தில் வெறும் ஊர் வம்பைக் கேட்டு ராமன் சீதையை, நீதி உண்மை எதையும் கருதாமல் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று சொல் லப்படுகிறது. உண்மையில் இது நடந்திருந் தால் இறந்த ஜடாயு மீண்டும் உயிர் கொண்டு எழுந்து ராமனுக்கு நல்ல புத்தி புகட்டியிருப் பான். மகனே இது தகாது. இது பயங் கொள்ளித்தனம். இது தர்மத்தைக் கொன்ற தாகும் என்று சொல்லி தடுத்திருப்பான்... உத்திர காண்டத்தை விட்டு விட இஷ்டமில் லாமற் போனால், ராமாயண மாலையில் ரத்னங்களாக ஜொலிக்கும் வீர புருஷர் களையும் அவர்கள் பண்புகளையும் வெறுங் கதையன்று தள்ளிவிட வேண்டியதாகும்.

ஆயினும் பவபூதி என்ற பேராசிரியர் பொருத்தமற்ற இந்தக் கதையை அழகிய நாடகமாக சமஸ்கிருதத்தில் இயற்றினான்; அது மிகவும் புகழ் பெற்ற நூல், நண்பர் சந்தானம் என்னுடன் சிறையிலிருந்த காலத்தில் அதைத் தமிழில் எழுதி முடித்தார். மிகவும் சாமர்த்தியமாக வட மொழி நூலின் அழகு குறையாதபடி மொழி பெயர்த்தி ருக்கிறார்.

இவ்வாறு ராஜாஜி எழுதி இருக்கிறாரே - இவற்றுக்கு என்ன பதில்?

தந்தைப் பெரியாரோ, திராவிடர் கழகத் தலைவரோ இராமனை குறை கூறினால் கொந்தளிக்கும் பார்ப்பன சங்கபரிவார் வட்டாரம். சக்ரவர்த்தி திருமகன் என்று இரா மனைப் பற்றி சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியர் (ராஜாஜி) எழுதிய இவற்றிற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?

அம்பேத்கர் கூறுகிறார்

அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத் திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்கு தக்கது அல்ல எனலாம். இராமன் ஏக பத்தினி விரதன் என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாத தாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவி யரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.

இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையை சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையை சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியிலமர்த்திய பிறகும் கூட சீதையைக் காண அவனே போகவில்லை. அனு மானைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிகள் தான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்கு சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனை சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்பு கிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு போய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.

சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதா வது இராமன் சொன்னதென்ன?

மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டி ருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்க வில்லை எனினும் அடியிற் காணும் பகுதி யில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள் ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப் பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந் தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.

இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்பு மில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ற எண்ணத்தை-சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி-அதன் அடிப்படையில் சீதையைக் கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந் திருக்காது- நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே-என்று சீதை வெளிப் படையாக சொல் கிறாள். இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.

அம்பேத்கர் எழுதிய இராமன் - கிருஷ்ணன் ஒரு புதிர் நூலிலிருந்து

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner