என்றைக்கு நாம் தமிழர்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

என்றைக்கு நாம் தமிழர்? வேதியரின் மனுதரும விதிமுறைகள் நுழையுமுன்னர்

சாதிமதத் தீதில்லா சங்ககாலத் தமிழகத்தில்

நீதியென்றால் சமநீதி நிலவிவந்த அந்நாளில்

ஓதிடவே எல்லோர்க்கும் உரிமையுண்டு; வசதியுண்டு.

இருண்டகால ஆட்சியிலும் இதேநிலைதான் படிப்பதற்கே

திருவுடைய மேன்மக்கள், தீட்டுள்ள இழிசாதி

இருவேறு இனமில்லை; எல்லோரும் சமமென்றே

இருகால நூல்களையும் எழுதினரே தமிழ்ச்சான்றோர்.

பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சியில்தான்

எல்லையற்ற சலுகைபெற்று உயர்ந்தார்கள் இருபிறப்பார்

தொல்லைதரும் மனுநீதி சூத்திரராய், பஞ்சமராய்

தொல்குடிசேர் தமிழரையே தாழ்த்தியதே, வீழ்த்தியதே!

ஒன்றுபட்டுத் தமிழர்நாம் அன்றிதனை ஒழிக்காமல்

தொன்றுதொட்டு நமக்குள்ளே சண்டையிட்டுச் சிதறியுள்ளோம்.

இன்றைக்கும் அந்தநிலை எள்ளளவும் மாறவில்லை.

என்றைக்கு மாறுவோமோ அன்றைக்கே நாம்தமிழர்!

- வீ.இரத்தினம், பெங்களூரு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner