பா.ஜ.க.வினரின் பாலியல் வன்கொடுமைப் பட்டியலைப் பாரீர்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தார்மீக ஒழுக்கம் பற்றி வாய் கிழிய பேசும் பா.ஜ.க.வினர் -  சங்பரிவார்க் கும்பலினர் பெண்களை எப்படியெல்லாம் போகப் பொருளாகக் கருதி சீரழித்துள்ள னர் என்பதற்கு ஆதாரமாக நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக் காட்டாக இங்கே சில தரப்படுகின்றன. அவர்கள் கூறும் இந்து ராஜ்ஜியம் என்பது இதுதான்!

பாஜக பிரமுகரால் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளான வழக்குரைஞர்

* அரியானா மாநிலத்தின் பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகனை காவல்துறையினர் பாலியல் புகாரில் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தின் பாஜக தலைவர் சுபாஷ் பராலா. இவரது மகன் விகாஸ் பராலா. விகாஸும் அவருடைய நண்பர் ஆசிஷ் குமார் என்பவரும் நள்ளிரவு 12 மணியளவில் பெண் ஒருவரை காரில் பின்னாலேயே துரத்திச் சென்றுள்ளனர்.

*கருநாடக பாஜக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டனர்.

*குஜராத் பாஜக அமைச்சர்கள் 2 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த போது பிடிபட்டு, பாஜகவின் கலாச் சாரத்தை நாடு முழுவதும் தெரிய வைத் தனர்.

*அருணாசலப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொலி வெளியாகி மாட்டிக் கொண்டார்.

*மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சார விடுதி நடத்திவந்தார் - இவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

*இமாச்சலப் பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா, எதிர்க்கட்சிகளின் போராட்டத் திற்குப் பிறகு பதவி விலகினார்.

*மத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி, வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

*குஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷியின் ஆபாசக் காணொலி வெளியானதை அடுத்து, கட்சிப் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தது.

*மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்த பாஜக தலைவர் ரவீந்தர பவந் தாதே-யின் காணொலி வெளியாகி, கைது செய்யப் பட்டார்.

*ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொலி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது.

*பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

*இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நந்தினி என்ற தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து, கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் சிக்கியுள்ளார்.

*ஆர்.எஸ்.எஸ். தலைவரும், மேகாலயா ஆளுநருமான சண்முக நாதன் (பாஜக நியமனம்), பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகும்படி ஆனது.

கொடூர வன்புணர்வும், கொலையும்

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று எட்டு வயது சிறுமியான ஆசிஃபா பானு காணாமல் போனாள். எட்டு வயது ஆசிஃபா தன் வீட்டு குதிரைகளை நீர் அருந்த அழைத்துச் செல்லும் போது கடத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில் ஆறு நாட்கள் கழித்து, அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஆசிஃபாவின் உடல் ஜனவரி 17, 2018 அன்று கிடைத்தது. பிரேத பரிசோதனையில், ஆசிஃபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பாலியல் வன் கொடுமை செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, ஜனவரி 10 அன்று ஆசிஃபா பெற்றோர்கள் தங்கள் மகள் காணாமல் போனாள் என்று காவல் நிலையத்தில் புகாரளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மாறாக ஆசிஃபாவின் பெற்றோரை நீங்களே தேடுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பியுள் ளார்கள். பின்னர் பெயருக்கு ஒரு புகாரை பெற்றுக்கொண்டு பெயரளவில் ஒரு தேடுதலை நடத்தி இருக்கிறார்கள்.

ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவளது உடல் முழுவதும் மனிதப் பற்கள் கடித்ததற்கான தடயங்கள் இருந்தன. அவளை பலாத்காரம் செய்துவிட்டு அவள் மீது கற்கள் வீசி அவள் உடலை சிதைத் திருக்கிறார்கள். அவளது தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தன. ஆசிஃபாவை கோயி லுக்குள் கொண்டு சென்று பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள்.

அரசியல் தலையீடுகள் காரணமாக இந்த வழக்கு மிக மெதுவாக நடந்துவந்த நிலையில், அரசியல் தலையீடுகளைக் கடந்து காவல்துறைக் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா, அவரது உதவியாளர் நவீத் பிர்சாதா ஆகியோர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு, தற்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வழக்கில் கோவில் பூசாரி அவரது மகன், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர், மூன்று காவல்துறை அதிகாரிகள் குற்றவாளி களாக அடையாளம் காணப்பட்டு கைதுசெய் யப்பட்டுள்ளனர்

இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது, கைது செய்தவர்களை விடுதலை செய்யவேண்டும்  என்று ஜம்மு-காஷ்மீர் அரசில் கூட்டணி வகிக்கும் பாஜவின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது,  இந்த வழக்கை விசாரணை செய்யும் ஸ்வேதாம்பரி சர்மா என்ற காவல்துறை அதிகாரியிடம் நாங்கள் பிராமணர்கள் வேதத்தில் பிராமணர்கள் தவறுசெய்வது பாவமல்ல என்று குறிப்பிட்டுள்ளது. ஆகையால் எங்கள் மீதான வழக்கை திரும்ப பெறுங்கள் என்றும் குற்றவாளிகளும் அவர்களது தரப்பு பாஜக பிரமுகர்களும் மிரட்டியுள்ளனர்.

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே....

*உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப் பிரதேசமாநிலம் சாஜகான்பூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் வர்மா மகன் தன்னை வலுக்காட்டயமாக கடத்திச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தனக்கு  நீதி வேண்டும் எனவும் ஷாஜகான்பூர் ஆணையர் அலுவலகம் முன் (9.5.2018) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தப் பாதிப்பு 2012 ஆம் ஆண்டு நடந்துள்ளது. அப்போது அப்பெண்ணிற்கு 16வயது ஆகும். அந்த பெண்ணை கடத்திச் என்ற எம்.எல்.ஏ. மகன் அவரை 9 நாட்கள் சிறைவைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க எம்.எல்.ஏ. மகனால் பாதிக்கப்பட்ட பெண்

அப்பெண்ணின் புகாரை மாநில காவல் துறையினர் பதிவு செய்யாமல் அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வரு கின்றனர். இதனால் அவரது குடும்பம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது என்றும் குற்றவாளி மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி வருகிறார்.

உ.பி. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்

*உன்னாவ் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார், மற்றும் அவரது சகோதரர் உறவினர்கள் உதவிகேட்டு வந்த 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறி புகார் கொடுத்தும் ஏற்காமல் காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை பொய்வழக்கில் கைதுசெய்து காவல் நிலையத்திலேயே அடித்துக் கொலை செய்தது. அதன் பிறகு நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகு குற்றவாளி யான சட்டமன்ற உறுப்பினர், அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப் பட்டனர். சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் உத்தரப்பிரதேச மூத்த தலைவரும் வழக்குரைஞருமான சதீஷ் சர்மா பெண் வழக்குரைஞர் ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப் பெண்ணும் லக்னோ சாலையில் போராடி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மீது இதே போன்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான தட வியல் சான்றுகள் அய்தராபாத் பரிசோதனை சாலைக்கு அனுப்பப்பட்டது, தற்போது அந்த முடிவுகள் சிபிஅய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது குல்தீப் சிங் செங்கார்தான் என்பது உறுதிசெய்யப் பட்டுள்ளது.

*மோடியின் அரசில் உரத்துறை அமைச்ச ராக இருக்கும் நிகால் சந்த் மேக்வால் எனபவர் மீது அரியானாவைச் சேர்ந்த சிறுமியை இவர் மற்றும் இவரைச்சேர்ந்த பாஜகவின் மிக முக்கிய பிரமுகர்கள் 17 மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது, சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் அரியானாவில் குறிப்பிட்ட உயர்ஜாதி சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, பாதிக்கப்பட்ட சிறுமி அந்த உயர்ஜாதியைச் சேர்ந்தவர் ஆகும்.  சிறுமியை அரியானா, ராஜஸ்தான் என இருமாநிலத் திற்கும் அழைத்துச்சென்று மயக்கமருந்து கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்முறை செய் தார்கள். குற்றவாளிகள் அனைவரையும் அந்த சிறுமி அடையாளம் காட்டிவிட்டது, ஆனால் இரண்டு மாநில காவல்துறையும் சிறுமி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தொடர்பிருப்பதால் அமைதிகாத்து வருகிறது, இரண்டு மாநிலத்திலுமே பாஜக ஆட்சியில் உள்ளது.  அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் அலைந்து திரிந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஹெத்ராம் பெனிவால் என்பவர் இறுதியில் தனது வழக்குரைஞர் நண்பர்களான இந்தர்ஜித் பிஷ்னோய் மற்றும் நவ்ரங் சவுத்ரி ஆகி யோரின் உதவியோடு வழக்கு பதிந்துள்ளார். ஜெய்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

- இத்தியாதி இத்தியாதி கேவலங்களை இந்துத்துவாதிகள் கூச்சநாச்சம் இல்லாமல் நாள்தோறும் செய்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner