பிர்மாவுக்கும் (அப்பனுக்கும்) சரஸ்வதிக்கும் (மகளுக்கும்) கல்யாணமாம்.... டும்! டும்!! டும்!!!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

துடையூர் விஷமங்களேஸ்வரர் ஆலயத்தில் வருகிற 28.05.2018 திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் (அப்பனான)  சிறீபிரம்மதேவருக்கும்  (அவர் படைத்த மகளான) சிறீயோக ஞான சரஸ் வதிக்கும் திருக்கல்யாணமாம்,

திருச்சி மாவட்டம், துடையூரில் தான் இந்த மிகவும் அசிங்கமான நிகழ்வு நடைபெற உள்ளது,

இது குறித்து கோவில் நிர்வாகம் அடித்த பத்திரிகையில்  உத்தியோகம் கிடைக்காதவர்கள் திருவோண நட்சத்திரத்தன்று இந்த கோயிலின் வாசலில் உள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் உடன் வேலை வாய்ப்பு கிடைக்கும்,  மூன்று தடவை கட்டாயம் செய்தல் வேண்டும்.

கல்வியில் மேம்பட இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகம் செய்தால் அவர்கள் கேட்கும் கல்லூரியில் இடம் கிடைக்கும். ஒருவர் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டினார்.  உடன் இடம் கிடைத் ததாம்!

வியாபாரத்தில் பிரச்சினை உள்ள வர்கள் இங்குள்ள சூரிய பகவானை தரிசித்தால் அவர்கள் கஷ்டம் விலகும்    திருமண தடை உள்ளவர்கள், இந்த கோயிலில் மூலவருக்கு பின்புறமுள்ள கல்யாண சுந்தரேஷ்வரரை வழிபட்டால் தோஷங்கள் விலகி விரைவில் திரு மணம் நடக்கும்.

பின்னர் எந்தப் பிரச்சினையாக இருந் தாலும் இந்தக் கோயிலில் நின்ற கோலத்தில் உள்ள திகிசண்டளா வீணா தட்சிணாமூர்த்தியிடம் அவர் தலையில் மனோரஞ்சித மலரை வைத்து பிரார்த்தித்தால் அந்த காரியம் உடன் நிறைவேறும்.

உதாரணத்திற்கு சென்னையில் உள்ள ஒருவர் அறுபதாம் கல்யாணம் பண்ண தேதி குறித்துவிட்டார். அவருக்கு இரண்டு பெண்கள், இருவரும் வெளி நாட்டில். இளைய மகளின் குழந்தைக்கு லண்டன் அரசு விசா வழங்குவதில் சில சிக்கல். விசா கிடைக்காததால் அடுத்த மாதம் திருமணத்தை தள்ளி போட்டார்.

அப் பொழுதும் விசா கிடைக்க வில்லை. அந்த நபர் திருச்சி பிரசன்னத்திடம் இரண்டு தடவை திருமணத்தை தள்ளி போட்டு விட்டேன் ஏதாவதுவழி சொல்லுங்கள் என்று கேட்டார்.  அவர் தட்சிணா மூர்த்தி தலையில் மனோரஞ்சிதம் வைத்து வழிபட்டவுடன் மூன்றாவது நாள் லண்டன் அரசு விசா கொடுத்தது.

கை கால் மூட்டு வலி பிரச்சினை உள்ள வர்கள் இங்குள்ள வாதக்கல் முனியை தரிசித்து அங்கு தரப்படும் எண்ணையை உடம்பில் தடவினால் சுகமாகிறது என்பது நம்பிக்கை.

வைகாசி விசாக நன்னாளில்(அதாவது 20.5.2018 அன்று இந்தக் கோயிலில் பிரம் மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக் கல்யாண உற்சவம் நடைபெறும். ஹோமங்கள் முடிந்து பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 மணிமுதல் 6 மணிக்குள் பிரம்மாவிற்கும்  சிறீசரஸ்வதி தேவிக்கும் வெகு விமரிசையாக கல்யாணம் நடை பெறும்.  இது போல் பிரம்மாவிற்கு கல்யாணம் நடைபெறும் இடம் தமிழ்நாட்டிலேயே இந்த துடையூர் தலம் மட்டும் தான்.

வேறு எங்கும் நடப்பதில்லை-   முகூர்த்த வேளையில் பிரம்மாவை தரிசிப்பதே பெரும் புண்ணியம். அத்துடன் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி பிரம்மா திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது பெரும் புண்ணியம். வருகிற 28.05.2018 திங்கட்கிழமை காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் இந்த திருமணம் நடை பெறப்போகிறது.  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெற கேட்டுக் கொள்கிறோம்.

இக்கோயிலில் இருக்கும் ஹரிகர குருக்கள் வரும் அன்பர்களுக்கு அவர்களின் கஷ்டங் களை கேட்டு அதற்கு என்ன செய்து நிவர்த்தி பண்ணலாம் என்பதை மிகவும் கனிவுடன் கூறி பக்தர்களுக்கு நன்மை செய்து வருகிறார்.  அவரின் அலைபேசி எண்: 9894796967.

வாருங்கள் துடையூர் சென்று உங்கள் துயரங்கள், கஷ்டங்களுக்கு ஒரு முடிவு கட்டலாம்.  இந்த கோயில் திருச்சி நாமக்கல் சாலையில் நம்பர்.1 டோல்கேட்டிலிருந்து 7 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.

தந்தையாகிய பிர்மாவுக்கும், மகளாகிய சரஸ்வதிக்கும் கல்யாணமாம் -இதில் அழைப்பு வேறாம்- வெட்கக் கேடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner