திராவிடனிசம் வகுப்பு வாதமாம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிஜேபி ஆளும் மணிப்பூரில் 12ஆம் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்வி இது.

திராவிடனிசம் என்ற பேரால் வகுப்புவாதக் கருத்து பரவலாகப் பரவியிருக்கும் மாநிலம் எது? என்பதுதான் அந்தக் கேள்வி. நான்கு மாநிலங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன

(அ) பஞ்சாப்

(ஆ) தமிழ்நாடு

(இ) மகாராஷ்டிரா

(ஈ) உத்தரப்பிரதேசம்

இதற்குச் சரியான விடை தமிழ்நாடாம்.

எது வகுப்புவாதம்? ஜாதி தேவை என்பது வகுப்புவாதமா? ஜாதி கூடாது என்பது வகுப்புவாதமா?

நெற்றியில் பிறந்தவன் பிராமணன் - காலில் பிறந்தவன் சூத்திரன் என்று சொல்லுவது வகுப்புவாதமா? இதனை மறுப்பது ஒழிப்பது வகுப்பு வாதமா?

பூணூல் ஜாதி திமிரின் சின்னம் - அதை அணியாதே என்று சொல்லுவது வகுப்புவாதமா? நாங்கள் பிராமணர்,  துவி ஜாதியினர் - அதன் அடையாளம்தான் பூணூல் என்று சொல்லுவது வகுப்புவாதமா? ஆர்.எஸ்.எஸ். அகராதி என்றாலே அனர்த்தம்தானோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner